இஸ்லாம் உங்கள் மார்க்கம் என்ற பெயரில் மாற்று மதத்தவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியை தமிழ் அழைப்புக்குழு அடிக்கடி ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. இந்த சந்திப்பில் “இஸ்லாம் கூறும் மறுமை வாழ்வு” என்ற தலைப்பில் மவ்லவி.அப்துல் பாஸித் அல் புகாரி அவர்கள் உரையாற்றினார்கள்.
அல்லாஹ்வின் வல்லமை, படைப்பாற்றல், ஆட்சி அதிகாரம், அவனது நீதித் தீர்ப்பு, கருணை முதலான பண்புகள் அழகிய முறையில் மாற்று மதத்தவர்கள் எளிய முறையில் புரிந்து கொள்ளும் விதம் விளக்கப்பட்டது. மறுமை என்பது ஏன் ஏற்பட வேண்டும்? அது உண்மையா? அதற்கான ஆதாரங்கள் அடையாளங்கள் என்னென்ன? என்பது பொன்ற செய்திகள் மிகவும் அருமையான முறையில் எடுத்துச் சொல்லப்பட்டது.
முஸ்லிம்களின் மனதிலும் நடுக்கத்தை ஏற்படுத்திய அற்புதமான உரை. சத்திய இஸ்லாத்தின் செய்தியை ஒளிவு மறைவின்றி எத்தி வைக்க விரும்புபவர்கள் இதைப் பகிர்ந்துகொள்ளலாம்.
அன்புடன்
தமிழ் அழைப்புக் குழு, பஹ்ரைன்
Download mp4 Video Size: about 170 MB
Download mp3 Audio
[audio:http://www.mediafire.com/file/o882adkjjm1kccb/what_islam_say_about_the_life_after_death-Abdul_basith.mp3]
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ!.அல்ஹம்துலில்லாஹ்!.. சகோதரர் அப்துல் பாஸித்தின் உரை..உள்ளங்களை ஈர்க்கும் சக்தி வாய்ந்தது. மாஷா அல்லாஹ்!..!அவருக்கும், இந்த இணையதளத்தில் அங்கம் வகித்து எம்மை நேர்வழிப்படுத்தப் படுபடும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும், எங்களுக்கும் அல்லாஹ்…! இம்மை, மறுமை இரண்டிலும் ரஹ்மத் செய்வானாக!. ஆமின்..!