இயக்க வெறி (ஹிஸ்பிய்யத்) எவ்வாறெல்லாம் சமூகத்தில் புரையோடியிருக்கின்றது என்பது பற்றிய விரிவான பார்வை. இயக்க வெறி என்றவுடன் கலிமா சொன்ன முஸ்லிகளுக்காக, ஜனநாயக அரசியலில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக, சிறைசென்றவர்களை மீட்பதற்காக, இன்னும் ஜனநாயக ரீதியாக போராட்டத்தை முன்னெடுத்து செல்ல கூடிய இயக்கங்களை பற்றிய விமர்ச்சனமா? என்று எண்ணவேண்டாம்.
மாறாக குர்ஆன் மற்றும் சுன்னாவை முன்னிறுத்தி அதன் அடித்தளத்தில் தோற்றுவிக்கப்பட்ட இஸ்லாமிய ஜமாத்துக்கள், ஆட்சியை நிலை நிறுத்துவதற்கான போராடக் கூடிய இயக்கங்கள், நாங்கள் மட்டுமே தவ்ஹீத்-வாதிகள் எங்கள் அமைப்பில் இருந்தால் மட்டுமே சுவர்க்கம் செல்ல முடியும் என்ற அடிப்படையில் இயங்க கூடிய ஜமாத்துகள் இயக்கங்களிடையே காண கூடிய இயக்க வெறியினை பல்வேறு கோணங்களில் தொகுத்து வழங்குவதோடு, இவ்வாறான இயக்கங்கள் உள்ள காலகட்டத்தில் வாழக்கூடிய நாம் என்ன செய்யவேண்டும் என்பதற்கு ஹுதைபத் இப்னு யாமான் (ரழி) அவர்கள் அறிவிக்ககூடிய ஹதீஸை மேற்கோள்காட்டி அறிவுரை வழங்குகின்றார் ஆசிரியர் அவர்கள்.
என்னென்ன அறிவுரைகள் என்பதனை அறிந்துக் கொள்ள வீடியோவை முழுமையாக பார்வையிடவும்.
அல்-கோபர் இஸ்லாமிய (ஹிதாயா) நிலையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி
நாள்: 07-08-2014
இடம்: அல்-ஈஸா ஸுக் பள்ளி வளாகம் – அல்கோபர் – சவூதி அரேபியா
வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன்
அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் – சவூதி அரேபியா
வீடியோ: அசன் மீராஷா (நெல்லை ஏர்வாடி) மற்றும் ஷஃபீ
படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக்
Download mp3 Audio
[audio:http://www.mediafire.com/download/pc238kg6mazkymx/Hisbiyat-iyakka-veri_by-Mujahid.mp3]