முபாரக் மஸ்வூத் மதனி
அறபு மூலம்: ஸாலிஹ் பின் பவ்ஸான் அல்-பவ்ஸான்
மூல நூலாசிரியரின் முன்னுரை
எல்லாப் புகழும் வல்லோன் அல்லாஹ்வுக்கே ஸலவாத்தும் ஸலாமும் உண்மை நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.
இது தவ்ஹீத் கோட்பாடு பற்றி பேசும் ஒரு நூலாகும். இதிலே நான் சுருக்கமாகவும், எளிய நடையிலும் விபரங்களைத் தந்துள்ளேன். இந்நூலை ஆக்க கண்ணியத்திற்குரிய இமாம்களது நூற்கள் துணை நின்றன குறிப்பாக ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா, அல்லாமா இப்னுல் கைய்யிம், ஷைய்குல் இஸ்லாம் முஹம்மது பின்அப்துல் வஹ்ஹாப் போனறோரது நூற்களை குறிப்பிடலாம்.
நமது அமல்கள் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால் இஸ்லாமிய அகீதாவைக் கற்று பிறருக்கும் அதனைக் கற்பித்து அதன்படி அமல் செய்வது அவசியமாகின்றது.
நாஸ்தீகம், சூபித்துவம். துறவறம், கப்ரு வணக்கம், பித்அத் மோகம் போன்ற வழிகெட்ட சித்தாந்தங்களும், கொள்கைகளும் மேலோங்கி இருக்கும் இக்காலத்தில் இஸ்லாமிய அகீதாவைக் கசடறக் கற்பது இன்றியமையாதது. ஏனெனில் ஒரு முஸ்லிம் அல்குர்ஆன் அஸ்ஸுன்னா அடிப்படையில் ஸலபுஸ் ஸாலிஹீன்கள் காட்டித்தந்த அகீதாவை தனது ஆயுதமாகக் கொள்ளாதவரை வழிகேட்டிலிருந்து இருந்து தப்புவது சாத்தியமற்றது. இதுவே, இஸ்லாமிய அகீதாவை முஸ்லிகளுக்கு இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களிலிருந்து போதிக்க தூண்டிய காரணியாகும்.
மூல நூல் ஆசிரியர்
ஸாலிஹ் பின் பவ்ஸான் அல்-பவ்ஸான்
மொழிபெயர்த்தோனுரை
எல்லாப் புகழும் வல்லோன் அல்லாஹ்வுக்கே ஸலவாத்தும் ஸலாமும் இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் உண்டாவதாக.
அஸ்திவாரமின்றி கட்டிடம் ஏழாது, ஆணிவேரின்றி மரம் நில்லாத அகீதா எனும் இஸ்லாமிய அடிப்படைக்கோட்பாடின்றி இஸ்லாம் இல்லை, இருந்தும் முஸ்லிம்கள் பலர் அகீதா பற்றிய அடிப்படையான அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க தவறிவிட்டனர். இதனால் தமிழுலகிற்கு அகீதா பற்றிய தெளிவை வழங்குவது தவிர்க்க முடியாத, தவிர்க்க கூடாத முக்கிய கடமையாகவே மாறிவிட்டது எனலாம்.
இவ்வகையில் அறபுலகறிந்த மார்க்க அறிஞர் ஸாலிஹ் பின் பவ்ஸான் அல்-பவ்ஸான் அவர்களின் கிதாபுத் தவ்ஹீத் எனும் இந்த நூலை தமிழுலகிற்கு வழங்குவதில் பெருமிதம் அடைகின்றேன்.
அகீதாவை பல்வேறு கோணங்களில் அணுகி, ஆராய்ந்து தெளிவுபடுத்திய மூல நூலசிரியர் கலாநிதி ஸாலிஹ் பின் பவ்ஸான் அல்-பவ்ஸான் அவர்களுக்கு அல்லாஹ் அருள்புரிய வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்
…..
…..
எனது இந்த முயற்சியை அல்லாஹுத்தஆலா அங்கீகரித்து இந்நூல் மூலம் நல்ல பயனை நல்க வேண்டும் எனப்பிரார்த்திக்கிறேன்.
முபாரக் மஸ்வூத் மதனி
118 எஸ். எம். வீதி
மருதமுனை – இலங்கை
இஸ்லாம் கல்வி வாசகர்கள் பயன்பெரும் வகையில் முழுப்புத்தகமும் (PDF பைல் வடிவில்) இங்கு வெளியிடப்படுகின்றது. முழு புத்தகத்தையும் படிக்க இங்கு கிளிக் செய்யவும்
இந்த நூலில் உள்ளவைகள் (முக்கியமானவைகள்)
- மனித வாழ்வில் நெறி பிறழ்வும் குஃபுர், ஷிர்க், நிஃபாக் பற்றிய குறிப்புக்கள்.
- தவ்ஹீத்-தை சீர்குலைக்கும் சொற்களும் செயல்களும்.
- நபி (ஸல்) அவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள், தோழர்கள் விசயத்தில் நம்பிக்கை கொள்ளவேண்டிய அம்சங்கள்.
- பித்அத்-தும் அதன் வகைகளும், சட்டங்களும்.