Featured Posts

Tag Archives: தலாக்

தலாக் – இடைக்காலத்திற்கான உத்தரவும் இணக்கத்திற்கான வழிகாட்டலும்

-இம்தியாஸ் யூசுப் ஸலபி- இல்லற வாழ்க்கையில் இணைந்து செல்ல முடியாது என கணவன் மனைவி; முடிவு செய்திடும் போது விவாகரத்து பண்ணுவதற்கு அவ்விரு இரு உள்ளங்களுக்கும் இஸ்லாம் அனுமதிவழங்கியுள்ளது. அதுவும் அழகிய ஒழுக்க நடைமுறையை கடைப்பிடித்து பிரிந்து செல்ல வழிகாட்டியுள்ளது. இருவரினதும் வாழ்வு அஸ்தமனமாகிவிடாது காப்பாற்றிடும் முதலுதவிக்கான வழிகளுடன் அந்நடைமுறை முறையினை காட்டித்தந்துள்ளது. அதனை கண்டிப்பாக பின்பற்றியே ஆகவேண்டும். துரதிஷ்டவசமாக அந்த நடைமுறையினை எவரும் கடைபிடிப்பதில்லை.தலாக்கிற்கான விண்ணப்பத்தை காழி நீதிமன்றத்தில் …

Read More »

தலாக், இத்தா காரணங்களும் நியாயங்களும்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் ‘விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் தங்களுக்காக எதிர்பார்த்திருக்க வேண்டும். அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர்களாக இருந்தால் தங்களது கருவறைகளில் அல்லாஹ் படைத்ததை மறைப்பது அவர்களுக்கு ஆகுமானதல்ல. அவர்கள் இதற்குள் இணக்கப்பாட்டை விரும்பினால் அவர்களை மீண்டும் மீட்டிக் கொள்ள அவர்களின் கணவன்மார்களே முழு உரிமை யுடையவர்களாவர். (மனைவியர்களாகிய) இவர்கள் மீது முறைப்படி கடமைகள் இருப்பது …

Read More »

தலாக் – ஒரு தெளிவான சட்ட விளக்கம்

தலாக் குறித்து முஸ்லிம்கள் மத்தியிலும் பிற மதத்தவர் மத்தியிலும் ஏராளமான குழப்பங்கள் நிலவி வருகின்றன. தலாக் சம்மந்தமாக இஸ்லாம் தெளிவான சட்ட விளக்கங்களை தருகின்றன. மனிதர்களைப் படைத்த இறைவன் அவர்களின் இயற்கைத் தன்மையை முற்றிலும் அறிந்தவன். அதனால் மனிதர்களுக்கு தேவையான தெளிவான வாழ்க்கை திட்டங்களை வழங்கியுள்ளான். குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உள்ளம் அமைதி பெறக்கூடிய தீர்வுகளைத் தருகிறான் படைத்த ரப்புல் ஆலமீன். தலாக் குறித்த ஒரு வித்தியாசமான கல்வி …

Read More »

இல்லறம் இனிக்க, அவள் உனது ஆடை

– இஸ்மாயில் ஸலபி இல்லறம் நல்லறமாக அமைந்தால்தான் சமூகம் சலனமில்லாது இருக்கும். அங்கு சாந்தி, சமாதானம் நிலவும். நல்ல சந்ததிகள் உருவாகும். நாடு நலம் பெறும். ஏனெனில், பசுமையான பூமியில் தான் பயிர் பச்சகைள் விளையும். கறடு முறடான பூமி முற்புதர்களையும் களைகளையும் தான் முளைக்கச் செய்யும். எனவே, இல்லறம் குறித்த நல்ல வழிகாட்டல் தேவை. அந்த வழி காட்டல்களை இஸ்லாம் இனிதே வழங்குகின்றது.

Read More »

இத்தா

இல்லற பந்தத்தில் இணையும் பெண்களில் அதிகமானோர் ஏதோ ஒரு விதத்தில் “இத்தா” இருக்கும் நிலையை அடைகின்றனர். சிலபோது விவாகரத்தின் மூலமோ அல்லது கணவனின் இறப்பு மூலமோ இது நிகழலாம். எனவே இத்தா குறித்து தெளிவு அனைவருக்கும் – குறிப்பாகப் பெண்களுக்கு இருப்பது அவசியமாகும். இந்த வகையில் “இத்தா” குறித்துச் சுருக்கமான சில விளக்கங்களை இந்தக் கட்டுரை மூலம் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம்.

Read More »

68. மணவிலக்கு (தலாக்)

பாகம் 6, அத்தியாயம் 68, எண் 5255 அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) ‘அஷ்ஷவ்த்’ (அல்லது ‘அஷ்ஷவ்ழ்’) என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இங்கேயே அமர்ந்திருங்கள்’ என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து …

Read More »

மும்முறை தலாக்கு கூறப்பட்ட பெண் அதே கணவரை மீணடும் மணக்க என்ன செய்வது?

908. ரிஃபாஆ அல் குரழீ (ரலி) அவர்களின் மனைவி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் ரிஃபாஆவிடம் (அவரின் மண பந்தத்தில்) இருந்தேன். பிறகு, அவர் என்னை மணவிலக்கு செய்து மணவிலக்கை முடிவானதாக்கிவிட்டார். எனவே, நான் அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர் (ரலி) அவர்களை மணந்தேன். அவரிடம் இருப்பதெல்லாம் (உறுதியின்றித் தொங்கும்) முந்தானைத் தலைப்பைத் போன்றது தான் (அவர் ஆண்மை குறைந்தவர்)” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘நீ …

Read More »

63.அன்சாரிகளின் சிறப்புகள்

பாகம் 4, அத்தியாயம் 63, எண் 3776 ஃகைலான இப்னு ஜரீர்(ரஹ்) அறிவித்தார் நான் அனஸ்(ரலி) அவர்களிடம், ‘(அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் குலத்தாரான உங்களுக்கு) ‘அன்சார் உதவியாளர்கள்’ என்னும் பெயர் வந்ததைப் பற்றி எனக்குக் கூறுங்கள். உங்களுக்கு அந்தப் பெயர் (குர்ஆனுக்கு முன்பே) சூட்டப்பட்டிருந்ததா? அல்லது அல்லாஹ் உங்களுக்கு அந்தப் பெயரைச் சூட்டினானா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘அல்லாஹ் தான் எங்களுக்கு (‘அன்சார்’ என்று திருக்குர்ஆன் 9:100-ம் வசனத்தில்) பெயர் …

Read More »