Featured Posts

குற்றப் பரிகாரம் பாரபட்சமில்லாமல் இருக்கவேண்டும்.

1100. (மக்கா வெற்றியின் போது) மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந்தாள். அவள் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர். ‘அவள் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் யார் பேசுவார்கள்?’ என்று தமக்குள் பேசிக் கொண்டனர். அவர்களில் சிலர், ‘அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்?’ என்று கூறினர். (உஸாமா (ரலி) …

Read More »

திருட்டு குற்றத்துக்கு தண்டனை வழங்கும் வரையறை.

1097. கால் தீனாரை (பொற்காசு) திருடியவரின் கை வெட்டப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி 6790 ஆயிஷா (ரலி). 1098. நபி (ஸல்) அவர்கள் மூன்று திர்ஹங்கள் (வெள்ளிக் காசுகள்) விலை மதிப்புள்ள தோல் கேடயத்திற்காக (அதைத் திருடியவரின் கரத்தை)த் துண்டித்தார்கள். புஹாரி : 6797 இப்னு உமர் (ரலி). 1099. அல்லாஹ்வின் சாபம் திருடன் மீது ஏற்படட்டும்! அவன் (விலை மதிப்புள்ள) தலைக்கவசத்தைத் திருடுகிறான்; அதனால் …

Read More »

இறைவனை நாட…

சில மதங்களில் இறைவனை நாடுவதற்கும், அவனிடம் தேவைகளை கேட்டுப் பெறுவதற்கும் குட்டி தெய்வங்களை வைத்துக் கொண்டுள்ளார்கள்; இறந்தவர்களின் அடக்கஸ்தலங்களை நாடுகிறார்கள்; சிலைகளுக்கு பலவகையான நைவேத்தியங்களை வைக்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறுவதெல்லாம், ‘நாம் வல்லமை பொருந்திய இறைவனை நேராக நாட முடியாது; எனவே, அவனுக்கு நெருக்கமானவர்கள் ஊடாகவே நாடுவதுதான் அதிக பயன்களைப் பெற சிறந்த வழி’ என்பதாகும். இஸ்லாம் இக்கருத்தை ஏற்பதில்லை. காரணம் இஸ்லாத்தில் குருத்துவ அமைப்பு இல்லை. அல்லாஹ்வுக்கும் அவனது …

Read More »

வயிற்றில் உள்ள சிசு தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டால்…

1095. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘ஹுதைல்’ குலத்துப் பெண் இருவரின் (வழக்கு) தொடர்பாகத் தீர்ப்பளித்தார்கள். அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டார்கள். அப்போது அவர்களில் ஒருத்தி மற்றொருத்தியின் மீது ஒரு கல்லை எறிய அது அவளுடைய வயிற்றில் பட்டுவிட்டது. கர்ப்பிணியாயிருந்த அவளுடைய வயிற்றில் இருந்த சிசுவை அவள் கொன்றுவிட்டாள். எனவே, நபி (ஸல்) அவர்களிடம் மக்கள் இந்த வழக்கைக் கொண்டு வந்தனர். நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுக்காக ஓர் …

Read More »

ஒருவரை மற்றவர் வெட்டிக்கொண்டு மரணித்தல் தடுக்கப்பட்டது.

1094. ”வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜமாதுல் ஆகிராவுக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ‘முளர்’ குலத்தாரின் ரஜப் மாதமாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹஜ்ஜத்துல் வதாவின்போது, துல்ஹஜ் 10ஆம் நாளான) நஹ்ருடைய …

Read More »

மறுமையில் முதலில் தீர்ப்பு.

1093. மறுமை நாளில் மனிதர்களுக்கிடையே முதன் முதலில் தீர்ப்பளிக்கப்படுவது (உலகில் சிந்தப்பட்ட) இரத்தங்கள் (கொலைகள்) குறித்துதான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 1093 அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி).

Read More »

கொலையை இப்புவியில் துவங்கியவன்.

1092. (உலகில்) ஒரு மனிதன் அநியாயமாகக் கொல்லப்படும்போது அந்தக் கொலையின் பாவத்தில் ஆதம் (அலை) அவர்களின் முதல் மகனுக்கும் ஒரு பங்கு இருக்கவே செய்யும். ஏனெனில், அவர்தான் முதன் முதலாக கொலை செய்து (ஒரு முன் மாதிரியை ஏற்படுத்தி) அதை வழக்கில் கொண்டு வந்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :3335 அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி).

Read More »

ஒரு முஸ்லீமைக் கொல்ல 3 காரணங்கள்.

1091. ‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவருமில்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்’ என உறுதி மொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை. (அவை:) 1. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்கு பதிலாகக் கொலை செய்வது. 2. திருமணமானவன் விபசாரம் செய்வது. 3. ‘ஜமாஅத்’ எனும் சமூகக் கூட்டமைப்பைக் கைவிட்டு, மார்க்கத்திலிருந்தே வெளியேறி விடுவது. புஹாரி :6878 இப்னு …

Read More »

பழிவாங்குதல் (இழப்புக்கு).

1090. என் தந்தையின் சகோதரி – ருபய்யிஉ பின்த் நள்ர் (ரலி) ஓர் அன்சாரி இளம் பெண்ணின் முன் பல்லை உடைத்துவிட்டார். அப்பெண்ணின் குலத்தார் பழிவாங்கலைக் கோரி நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். நபி (ஸல்) அவர்களும் பழிவாங்கும்படி உத்தரவிட்டார்கள். அப்போது என் தந்தையின் சகோதரர் அனஸ் இப்னு நள்ர் (ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அவ்வாறு நடக்காது; ருபய்யிஉவின் பல் உடைக்கப்படாது, இறைத்தூதர் அவர்களே!” என்றார். அதற்கு இறைத்தூதர் (ஸல்) …

Read More »

இழப்பீடு கிட்டாத நிலை.

1088. ஒருவர் மற்றொரு மனிதரின் கையைக் கடித்தார். அப்போது (கடிபட்டவர்) தம் கையை அவரின் வாயிலிருந்து இழுத்தார். இதனால் கடித்தவரின் முன் பற்கள் இரண்டு விழுந்துவிட்டன. இதையொட்டி அவர்கள் இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டு வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘உங்களில் ஒருவர் தம் சகோதரனின் கையைக் கடா ஒட்டகம் கடிப்பதைப் போன்று கடிப்பாரா? (அவர் கடித்துக் கொண்டிருக்கும் வரை அவன் தன்னுடைய கையை அப்படியே …

Read More »