Featured Posts

இன்ஷா அல்லாஹ் கூறுதல்.

1072. (ஒருமுறை இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களின் புதல்வர் சுலைமான் (அலை) அவர்கள், ‘நான் இன்றிரவு (என்னுடைய) நூறு துணைவியரிடமும் சென்று வருவேன். அப்பெண்களில் ஒவ்வொருவரும் இறைவழியில் அறப்போர் புரியும் (வீரக்) குழந்தை ஒன்றைப் பெற்றெடுப்பார்கள்” என்று கூறினார்கள். அப்போது (சுலைமான் -அலை) அவர்களிடம் அந்த வானவர் (ஜிப்ரீல்) ‘இன்ஷா அல்லாஹ் – இறைவன் நாடினால்” என்று (சேர்த்துச்) சொல்லுங்கள்” என்றார். (ஆனால்,) சுலைமான் (அலை) அவர்கள், ‘இன்ஷா அல்லாஹ்’ …

Read More »

திருடர்கள் ஜாக்கிரதை!

ஹிஜ்ரி 1428, ரமளான் பிறை 23-ல், அஸர் தொழுகையை, வேலை செய்யும் இடத்தில் தொழுதுவிட்டு ஜித்தா (சவுதி அரேபியா), பாப்மக்கா செல்வதற்காக மஹ்ஜர் செனாயியாவிலிருந்து மினி பஸ்ஸில் (கோஸ்டர்) சென்றுக் கொண்டிருந்தேன். செனாயியா செக்கிங் பாயிண்டிற்கும் கிங் அப்துல் அஜிஸ் மருத்துவமனைக்கும் இடைப்பட்ட ஆள்நடமாட்டம் குறைந்த இடத்திலிருந்து பங்களாதேஷை சேர்ந்த ஒரு சகோதரர் 10-15 கிலோ எடை கொண்ட பார்சலுடன் பேருந்தில் ஏறினார். அவர் பதற்றமான சூழ்நிலையில் காணப்பட்டார்.

Read More »

சேதுவா? ராமரா?

தற்போது இந்திய அரசியலில் உருவெடுத்திருக்கும் மிகப்பெரும் பிரச்சினை “சேது சமுத்திரக் கால்வாய் திட்டம்” நிறைவேற்றப்படுமா? என்பதுதான். மதவெறி பிடித்த அமைப்புகளும், அரசியலில் சுய ஆதாயம் தேடிக் கொண்டிருக்கும் கும்பல்களும் இணைந்து இல்லாத இராமர் பாலத்திற்காக இந்தியாவில் ஆங்காங்கே வன்முறைகளை ஏற்படுத்தி வருகின்றனர். சேது சமுத்திரத்திட்டத்தில் ஒரு பகுதியில் அகற்றப்படும் சுண்ணாம்புப் பாறைகள் ராமர் கட்டிய பாலம் என்றும் அதை தேசியச் சின்னமாக அறிவிக்கவேண்டும் என்றும் கருத்துக்களை வைக்கின்றனர். இத்திட்டம் இந்துக்கள் …

Read More »

செய்த சத்தியத்தை விட சிறந்ததைக் கண்டால்…

1069. என் நண்பர்கள் என்னை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, தமக்காக (பயண) வாகனம் கேட்கும்படி அனுப்பினார்கள். அப்போது அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் உஸ்ரா(ப் போரின்) படையுடன் செல்லவிருந்தனர் – உஸ்ராப் போரே தபூக் போராகும் – அப்போது நான், ‘இறைத்தூதர் அவர்களே! என் நண்பர்கள் தமக்காக வாகனம் கேட்கும்படி என்னைத் தங்களிடம் அனுப்பி வைத்துள்ளனர்” என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு …

Read More »

எல்லோரும் கொண்டாடுவோம்…!

புத்தாண்டைக் கொண்டாட தயாராக இருப்பீர்கள்.ஆண்டு முழுவதும் மாடாய் உழைத்துவிட்டு நல்ல/கெட்டபடியாகக் கழிந்த 2007 ஐ வழியனுப்பும் விதமாக நள்ளிரவு 11:59 ஐ ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கிறீர்கள். இதோ இன்னும் சில நிமிடங்களில் நம்முடன் இருந்த 365 முழு நாட்களுக்கு விடைகொடுத்து அடுத்த _?_ நாட்களை எதிர் நோக்கி இருக்கிறோம். 2007 ஆம் ஆண்டின் பரவசத்துடன் திக்… திக்..இதயத்துடன் நிசப்தமான நிமிடங்களுக்காக காத்திருப்பவர்களின் சிந்தனைக்கு! இந்த வருடம் பதில் சொல்லா …

Read More »

விடைபெறும் நாளில்….

இணையத்தில் சினிமா மற்றும் பொழுது போக்கு என்று சராசரித் தமிழனாக வலம் வந்து கொண்டிருந்தபோது தமிழ்மணத்தின் அறிமுகம் கிடைத்தது. சங் பரிவாரத்தைச் சேர்ந்த சிலர் இஸ்லாத்தின் மீதும், நபிகளார் மீதும் அவதூறுகளை எழுதிக் கொண்டிருந்தனர்.அவர்களுக்கு என் அறிவில் பட்டதை அவர்களின் பதிவுகளிலேயே பின்னூட்டமாக பதிலளித்துக் கொண்டிருந்தேன். பின்னூட்டங்கள் வெளியிடப்படாமை, வெளியிடுதலில் தாமதம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டே தனியாக வலைப்பூ ஒன்றைத் துவங்கினேன். அவர்களுக்குப் பதிலளிக்கத் தொடங்கிய போது இஸ்லாத்தைப் பற்றிய …

Read More »

லாத் உஸ்ஸா மீது சத்தியம் செய்தவர்…

1068. யார் சத்தியம் செய்யும்போது ‘லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக! என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) ‘லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்! தம் நண்பரிடம், ‘வா சூது விளையாடுவோம்” என்று கூறியவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி 4860 அபூஹுரைரா (ரலி).

Read More »