Featured Posts

தொழுகையை முடித்ததும் இடப்புறமாக எழுதல்.

412– வலப்புறம் தான் திரும்ப வேண்டும் என்று எண்ணிக் கொள்வதன் மூலம் தனது தொழுகையில் ஷைத்தானுக்குச் சிறிதளவும் இடமளித்திட வேண்டாம். நபி (ஸல்) அவர்கள் பல சமயங்களில் தம் இடப்புறம் திரும்பக் கூடியவர்களாக இருந்தனர். புஹாரி-852: இப்னு மஸ்வூது (ரலி)

Read More »

தொழுகைகளைச் சேர்த்து தொழுதல்….

409– நபி (ஸல்) அவர்கள் அவசரமாகப் பிரயாணம் புறப்படுவதாக இருந்தால் மஃரிபைத் தாமதப்படுத்தி இஷாவுடன் சேர்த்துத் தொழுவார்கள். புஹாரி: இப்னு உமர் (ரலி). 410– நபி (ஸல்) அவர்கள் சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன் பயணத்தை மேற்கொண்டால் லுஹரை அஸர் வரை தாமதப்படுத்தி ஜம்உச் செய்வார்கள். சூரியன் சாய்ந்த பிறகு புறப்பட்டால் லுஹர்த் தொழுதுவிட்டுப் புறப்படுவார்கள். புஹாரி :1111 அனஸ் (ரலி) 411– நான் நபி (ஸல்) அவர்களுடன் (லுஹர், …

Read More »

பிரயாணத்தில் வாகனத்தில் பிரயாணித்தவாறு…

406– நபி (ஸல்) அவர்கள் பிரயாணத்தின் போது வாகனத்தின் மீதமர்ந்து தொழுவார்கள். கடமையான தொழுகை தவிர உபரியான இரவு தொழுகைகளை வாகனம் எத்திசையில் சென்றாலும் தொழுதுக்கொண்டு இருப்பார்கள். தம் வாகனத்தின் மீதமர்ந்தே வித்ரும் தொழுவார்கள். புஹாரி-1000: இப்னு உமர் (ரலி) 407– நபி (ஸல்) அவர்களை வாகனம் எத்திசையில் கொண்டு சென்றாலும் அவர்கள் வாகனத்தின் மீதமர்ந்து தொழுவதை நான் பார்த்திருக்கிறேன். புகாரி-1093 ஆமிர் பின் ரபிஆ (ரலி) 408– அனஸ் …

Read More »

தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங் பரிவாரங்கள்

மக்களாட்சி நடைபெறும் ஒரு குடியரசின் அடிப்படை நிலைநிற்றலுக்கு அவசியமான தூண்களில் தலையாயது கருத்துச் சுதந்திரமாகும். உண்மைகளை வெளிப்படுத்த எந்தக் கட்டுப்பாடும் இல்லாத நிலை ஓர் இடத்தில் இருந்தால் மட்டுமே அங்கு சுதந்திரம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று அர்த்தம் கொள்ள முடியும். ஏனெனில் கருத்துச் சுதந்திரம் என்பது ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டதாகும். அந்த வகையில் சுதந்திர இந்தியாவில் கருத்துக்களை வெளியிட அனைவருக்கும் முழு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் …

Read More »

மழை நேரத்தில் தொழுகையை வீட்டில் நிறைவேற்றுதல்.

404– குளிரும் காற்றும் நிறைந்த ஒரு இரவில் தொழுகைக்காக இப்னு உமர் (ரலி) பாங்கு சொன்னார்கள். பின்னர் உங்கள் கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள் என்றார்கள். குளிரும் மழையுமுள்ள இரவுகளில் கூடாரங்களிலே தொழுங்கள் என்று கூறுமாறு நபி (ஸல்) அவர்கள் முஅத்தினுக்கு உத்தரவிடுவார்கள் எனவும் கூறினார்கள். புஹாரி-666: நாஃபிவு 405– பாங்கு சொல்பவரிடம் ஒரு மழை நாளில் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் என்று (பாங்கில்) கூறிய பிறகு ஹய்ய அலஸ்ஸலாஹ் …

Read More »

ஹஜ் நேரத்தில் தொழுகையை (மினாவில்) சுருக்குதல்.

402– நான் நபி (ஸல்) அவர்களுடனும் அபூபக்ர் (ரலி) உமர் (ரலி) ஆகியோருடனும் உஸ்மான் (ரலி) உடைய ஆட்சிக் காலத்தின் ஆரம்பக் கட்டத்தில் உஸ்மான் (ரலி) உடனும் மினாவில் இரண்டு ரக்அத்களாகத் தொழுதேன். பின்னர் உஸ்மான் (ரலி) நான்கு ரக்அத்களாகத் தொழலானார்கள். புகாரி-1082 :அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) 403– நபி (ஸல்) அவர்கள் மினாவில் எங்களுக்கு இரு ரக்அத்கள் தொழுவித்தார்கள். அந்நாளில் எப்போதுமில்லாத அளவுக்கு நாங்கள் அதிகமாகவும் இருந்தோம். …

Read More »

ஜனாதிபதி அப்துல்கலாம் சவூதி மன்னராக முடியுமா?

இப்படி ஒரு கேள்வியை யாராவது உங்களிடம் கேட்டால், அவரைப் பற்றி என்ன நினைப்பீர்கள்? உலக நடப்போ அல்லது சவூதியில் மன்னராட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதையோ அறியாதவர் என்றுதானே நினைக்கத் தோன்றும்! பாமரர் ஒருவர் கேட்டிருந்தால் பரவாயில்லை என அவரின் அறியாமையை மன்னிக்கலாம்; ஆனால் இஸ்லாத்தின் அடிப்படையை அசைத்துப் பார்க்கிறேன் பேர்வழி என்று மேலைநாட்டவரின் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரங்களை தமிழில் மொழிபெயர்த்து, அரைகுறை ஞானியாக எழுதி வரும் நேசகுமார் கேட்டிருக்கிறார். இதே …

Read More »

குரைஷி குலத்தில் 12 ஆட்சியாளர்கள்.

இஸ்லாம் மார்க்கத்தில் சமூகம், இனம், குலம், கோத்திரத்திற்கெல்லாம் எந்த மதிப்பீடுமில்லை என்று வரும் 049:013ம் இறைவசனம் எடுத்துக் கூறுகிறது. குலங்கள், கோத்திரங்களாக இருப்பதும் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காகவேயன்றி, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற அடிப்படையில் பெருமை பாராட்டுவதற்கல்ல. நீங்கள் எந்தக் கோத்திரத்தையும் – எந்த குலத்தையும் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அதனால் உங்களில் ஒருவர் உயர்ந்தவராகவே, தாழ்ந்தவராகவோ ஆகிவிட மாட்டார். இறைவனை எவர் அஞ்சுகின்றரோ அவரே இறைவனிடத்தில் அதிகம் சிறந்தவராவார். மனிதர்களே! நாம் …

Read More »

பிரயாணிகள் தொழுகை..

398– அல்லாஹ் தொழுகையினை கடமையாக்கிய போது ஊரிலிருந்தாலும், பிரயாணத்திலிருந்தாலும் இரண்டு இரண்டு ரக்அத்களாக கடமையாக்கினான். பிரயாணத்தில் தொழுகை இரண்டு ரக்அத்தாகவே ஆக்கப்பட்டு பிரயாணம் அல்லாத போதுள்ள தொழுகை அதிகரிக்கப்பட்டது. புகாரி-350: ஆயிஷா (ரலி) 399– நான் நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்தேன். அவர்கள் பயணத்தில் உபரித் தொழுகைகளைத் தொழுததை நான் பார்த்ததில்லை. ‘அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன் மாதிரி இருக்கிறது’ என்று அல்லாஹ் கூறினான். புகாரி-1101. இப்னு …

Read More »

தொழுகை நேரம் தவறி விட்டால்..

396-நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் (கைபரிலிருந்து திரும்பிக் கொண்டு) இருந்தோம். இரவின் ஆரம்பத்தில் நாங்கள் சென்று கொண்டிருந்தோம். அதிகாலை நேரத்தின் முகப்பை (இரவின் கடைசிப் பகுதியை) நாங்கள் அடைந்த பொழுது ஓய்வெடுப்பதற்காக (ஓரிடத்தில்) தங்கினோம். சூரியன் உச்சிக்கு வரும் வரை நாங்கள் எங்களையும் மீறிக் கண்ணயர்ந்து விட்டோம். உறக்கத்திலிருந்து கண்விழித்தவர்களில் அபூபக்ரே முதலாமவராக இருந்தார். இறைத்தூதர் தாமாகக் கண்விழிக்காத வரை அவர்களை உறக்கத்திலிருந்து எவரும் எழுப்புவதில்லை. அடுத்து …

Read More »