Featured Posts

காலுறை மீது மஸஹ் செய்வதற்கு முன்…

159- முகீரா பின் ஷூஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு பயணத்தில் ஒரிரவு நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள் உம்மிடம் தண்ணீர் இருக்கிறதா? என்று கேட்டார்கள் நான் ஆம் (இருக்கிறது) என்று பதிலளித்தேன் . உடனே அவர்கள் தமது வாகனத்திலிருந்து இறங்கி இரவின் இருளில் என் பார்வையிலிருந்து மறையும் அளவுக்கு நடற்தார்கள். (இயற்கைத்தேவையை முடித்த) பிறகு அவர்கள் வந்தார்கள். நான் குவளை நீரை அவர்கள் மீது …

Read More »

மறைவான இடத்தில் அமர்தல்!

158- நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் சென்றேன். அப்போது முகீராவே! தண்ணீர் பாத்திரத்தை எடும், என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் அதை எடுத்துக் கொண்டேன். நபி (ஸல்) அவர்கள் நடந்து சென்று என் கண்ணுக்குத் தெரியாத மறைவான இடத்தில் போய் அவர்களுடைய இயற்கைத் தேவையை நிறைவேற்றினார்கள். அவர்கள் ஷாம்நாட்டுக் குளிர் ஆடையை அணிந்திருந்தார்கள். உளூ செய்வதற்காக அதிலிருந்து தங்கள் கையை வெளியே எடுக்க முயன்றார்கள். …

Read More »

முகீரா பின் ஷூஃபா (ரலி)யின் கூற்று!

157- நபி (ஸல்) அவர்கள் (இயற்கைத்) தேவையை நிறைவேற்றுவதற்காக வெளியே சென்றார்கள். அப்போது அவர்களை ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் தொடர்ந்து சென்றேன். நபி (ஸல்) அவர்கள் தமது தேவையை நிறைவேற்றி விட்டு வந்தபோது அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றினேன். (அதில்) நபி (ஸல்) அவர்கள் உளூ செய்து விட்டு இரு கால் உறைகளின் மீது மஸஹ் செய்தார்கள். புகாரி-203: முகீரா பின் ஷூஃபா (ரலி)

Read More »

இறைவன் மன்னிக்காத குற்றம்.

மனித குலத்துக்கு வழி காட்டியாக ஏக இறைவனால் அருளப்பட்ட மார்க்கம் இஸ்லாமென்பது, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களின் நம்பிக்கை. ஏக இறைவனை ஏற்று, அவன் வழி காட்டியாகத் தேர்ந்தெடுத்த இறைத்தூதர்களையும் நம்பிக்கை கொண்டு அவர்களைப் பின்பற்ற வேண்டும். என்பதே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை! இஸ்லாம் மார்க்கத்தின் கொள்கையை வாழ்க்கை நெறியாக் கொண்டவர்கள் ”முஸ்லிம்கள்” என்றும், இஸ்லாத்தின் கொள்கையை ஏற்காதவர்கள் ”காஃபிர்கள்” அதாவது, இஸ்லாத்தை நிராகரித்தவர்கள் – மறுத்தவர்கள் என்றும் இஸ்லாம் …

Read More »

நிர்பந்தமான நேரத்தில்……

156- நானும் நபி (ஸல்) அவர்களும் நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு சுவரின் பின்னாலுள்ள ஒரு கூட்டத்தாரின் குப்பை மேட்டிற்கு வந்தார்கள். உங்களில் ஒருவர் எவ்வாறு நிற்பாரோ அதைப் போன்று நின்றவர்களாகச் சிறுநீர் கழித்தார்கள். அப்போது நான் கொஞ்சம் ஒதுங்கிச் சென்றேன். உடனே நபி (ஸல்) அவர்கள் என் பக்கம் கை அசைத்து அழைத்தார்கள். நான் வந்து அவர்கள் தங்கள் தேவையை நிறைவேற்றும் வரை …

Read More »

காலுறைகள் மீது மஸஹ் செய்தல் பற்றி…

155- ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) சிறுநீர் கழித்து விட்டுப் பின்னர் உளூ செய்து, தமது இரு கால் உறையின் மீது மஸஹ் செய்து விட்டுப் பின்னர் எழுந்து தொழுவதை நான் கண்டேன். இது பற்றி ஜரீர் (ரலி)இடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வதை நான் பார்த்திருக்கிறேன் எனப் பதில் கூறினார்கள். புகாரி-387: ஹம்மாம் பின் ஹாரிஸ் (ரலி)

Read More »

4. அவ்லியாக்களின் பொருட்டால் தேவைகளைக் கேட்குதல்

மார்க்கத்தில் ஓரளவு விபரமுள்ள இன்னும் சிலர் அவ்லியாக்களிடம் நேரடியாக கேட்டுப்பெறுவது தான் பாவம். ஆனால் நாங்கள் அவ்லியாக்களிடம் நேரடியாக பிரார்த்திக்கவில்லை, மாறாக இறைவனிடமே அந்த அவ்லியாக்களின் பொருட்டால் எங்கள் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு வேண்டுகிறோம் என்கின்றனர். இவ்வாறு கேட்பதற்கு மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தால் நம்மைவிட நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் நன்றாக அறிந்திருப்பார்கள். அதிலும் உமர் (ரலி) அவர்கள் நிச்சயம் அறிந்திருப்பார்கள். அவர்களின் மார்க்க ஞானத்தை எவராலும் குறைவாக எடை போட்டுவிட …

Read More »

இறைவனின் நியதிகள்!

இஸ்லாம் மார்க்கத்தை இறைவன் தேர்ந்தெடுத்து, இறைத்தூதர்களின் வழியாக ஆன்மீகப் போதனைகள் மக்களுக்குப் பிரச்சாரம் செய்யப்பட்டது. இறை வழிகாட்டியாக, இறைத்தூதர்கள் கொண்டு வந்த வேதங்களில் ”முந்தய வேதங்கள் ஏன் பாதுகாக்கப்படவில்லை?” என்ற கேள்விக்கு ”திருக்குர்ஆன் மட்டும் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்?” என்ற தலைப்பில் விளக்கம் எழுதியிருந்தோம். சகோதரர் எழில் என்பவர் நாம் எழுதிய விளக்கத்தைப் படித்து விட்டு இறைவனுக்கு அறிவுரை வழங்கும் சில கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார். பொதுவாக கடவுளைப் படைப்பவர்களுக்கு கடவுளுக்கே …

Read More »