Featured Posts

நரகவாசிகளின் மீது அல்லாஹ்வின் கருணை

116- (மறுமையில் விசாரணைகள் முடிந்த பின்) சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைவார்கள். பின்னர் உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் இருப்பவரை (நரகத்திலிருந்து) வெளியேற்றி விடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுவான். உடனே அவர்கள் கறுத்தவர்களாக அதிலிருந்து வெளியேற்றப்பட்டு ஹயாத் என்ற ஆற்றில் போடப்படுவார்கள். -இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் ஒருவரான மாலிக், ஆற்றின் பெயர் ஹயா என்று சந்தேகப்படுகிறார்- அவ்வாறு அவர்கள் இந்த ஆற்றில் போடப்பட்டதும் பெறும் வெள்ளம் பாயும் ஓடைக் கரையில் …

Read More »

மாஉல் ஹயாத்! (ஜீவ நீர்)

115- நாங்கள் அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண்போமா? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் (மேக மூட்டமில்லாது) வானம் தெளிவாக இருக்கையில் சூரியனையும் சந்திரனையும் பார்க்க நீங்கள் (முண்டியடித்துக் கொண்டு) சிரமப்படுவீர்களா? என்று கேட்டார்கள். நாங்கள் இல்லை என்று பதிலளித்தோம். இவ்விரண்டையும் பார்க்க நீங்கள் சிரமப்படாததைப் போன்றே அந்த நாளில் உங்கள் இறைவனைக் காணவும் நீங்கள் சிரமப்பட மாட்டீர்கள் என்று கூறிவிட்டு …

Read More »

மறுமையில் அல்லாஹ்வை காண்பது பற்றி..

113- மேலும் இரு சொர்க்கங்கள் உள்ளன. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் வெள்ளியால் ஆனவை. (வேறு) இரு சொர்க்கங்கள் உள்ளன. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும், தங்கத்தினால் ஆனவை. அத்ன் எனும் சொர்க்கத்தில் இருப்பவர்கள், தங்கள் இறைவனைக் காண்பதற்கு, அவன் மீதுள்ள பெருமை எனும் மேலாடை தவிர வேறெந்த தடையும் இராது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி- 4880: அப்துல்லாஹ் பின் கைஸ் (அபூ மூசா அல் …

Read More »

இறைவனை நேரில் பார்த்தார்களா?

112- முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுபவன் பெரிய தவறு புரிந்துவிட்டான். எனினும் அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை, அவர்களுடைய (அசல்) உருவிலும் (அசல் படைப்பின்) அமைப்பிலும் வான விளிம்பு முழுவதையும் அடைந்தபடி (தோற்றமளிக்கக்) கண்டார்கள். புகாரி-3234: ஆயிஷா(ரலி)

Read More »

மூன்று விஷயங்கள் பற்றிய உண்மைகள்

111- நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அன்னையே! முஹம்மது (ஸல்) அவர்கள் தம் இறைவனை (மிஃராஜ் – விண்ணுலகப் பயணத்தின் போது நேரில் பார்த்தார்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நீங்கள் சொன்னதைக் கேட்டு என் ரோமம் சிலிர்த்து விட்டது. மூன்று விஷயங்கள் (பற்றிய உண்மைகள்) உங்களுக்கு எப்படித் தெரியாமல் போயின? அவற்றை உங்களிடம் யார் தெரிவிக்கின்றாரோ அவர் பொய்யுரைத்து விட்டார். முஹம்மது (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) …

Read More »

ஜிப்ரீல் அவர்களின் நிஜ தோற்றம்

110- நான் ஸிர்ரு பின் ஹூபைஷ் (ரஹ்) அவர்களிடம் (வஹீ-வேத வெளிபாடு நின்று போயிருந்த இடைப்பட்ட காலத்தில் வானவர் ஜிப்ரீல், நபி (ஸல்) அவர்களை நெருங்கி வர) அந்நெருக்கத்தின் அளவு (வளைந்த) வில்லின் இரு முனைகளுக்கிடையிலுள்ள நெருக்கத்தைப் போல், அல்லது அதை விடச்சமீபமாக இருந்தது. பிறகு அல்லாஹ் அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார். என்னும் (53: 9,10) இறை வசனத்தைப் பற்றிக் கேட்டேன்.அப்போது அவர்கள் நபி …

Read More »

காஃபிர் (Kaafir/كَافِر ) என்பது கேவலமான சொல்லா?

திருக்குர்ஆனில் சொல்லப்படும் ‘காஃபிர்’ (Kaafir/كَافِر ) என்ற அரபிச் சொல்லை மாற்று மத சகோதரர்கள் தம்மைக் குறிப்பிடும் கேவலமான சொல்லாகக் கருதுகிறார்கள். திருக்குர்ஆன் ‘காஃபிர்’ என்று தங்களை ஏசுவதாக எண்ணுகிறார்கள். அப்படியொரு தவறானப் பிரச்சாரம், திருக்குர்ஆன் பற்றி விளங்காதவர்களால் அல்லது விளங்கியிருந்தும் உள்நோக்கத்துடன் இஸ்லாத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்யப்படுபவர்களால் முடுக்கி விடப்படுகிறது. இந்து மதத்தைப் பின்பற்றுபவரை ‘இந்து’ என்கிறோம்; கிறிஸ்தவத்தைப் பின்பற்றுபவரை ‘கிறிஸ்தவர்’ என்கிறோம். அதேபோல்தான் இஸ்லாத்தைப் பின்பற்றுபரைக் குறிக்க …

Read More »

அல்லாஹ்வின் உதவி!

109- (நான் இரவின் சிறு பகுதியில் கஅபாவிலிருந்து பைத்துல் மக்திஸ் வரை சென்றதாகச் சொன்னச் சமயம்) என்னை குறைஷிகள் நம்ப மறுத்த போது நான் கஅபாவின் ஹிஜ்ர் என்னும் (வளைந்த) பகுதியில் நின்றேன். அல்லாஹ் எனக்கு பைத்துல் மக்திஸைக் காட்சியளிக்கச் செய்தான். அப்போது அதைப் பார்த்தபடியே நான் அவர்களுக்கு அதன் அடையாளங்களை விவரிக்கலானேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி- 3886: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

Read More »

நபி (ஸல்) அவர்கள் கண்ட கனவில்…….

108- இன்றிரவு கஅபாவின் அருகே நான் கனவில் (ஒரு நிகழ்ச்சியைக்) கண்டேன். மனிதர்களின் மாநிறத்திலேயே மிக அழகான மாநிறம் கொண்ட மனிதர் ஒருவர் அங்கிருந்தார். அவரது தலைமுடி அவரது தோள்களுக்கிடையே தொங்கிக் கொண்டிருந்தது, படிய வாரப்பட்ட தொங்கலான முடியுடையவராக அவர் இருந்தார். அவருடைய தலையிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. இருமனிதர்களின் தோள்கள் மீது தமது இருகைகளையும் அவர் வைத்துக் கொண்டு கஅபாவைச் சுற்றிக் கொண்டிருந்தார். நான் இவர் யார்? என்று …

Read More »