94- மூன்று மனிதர்களுக்கு (அல்லாஹ்விடத்தில்) இரண்டு விதக் கூலிகள் உண்டு. ஒருவர் வேதத்தையுடையவர்களில் உள்ளவர். இவர் தமது (சமூகத்திற்கு அனுப்பப்பட்ட) தூதரையும் முஹம்மதையும் நம்பியவர். மற்றொருவர் தம் இறைவனின் கடமைகளையும் தம் எஜமானனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை. மூன்றாமவர் தம்மிடத்திலுள்ள ஒரு அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப்பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்கு மார்க்கச் சட்டங்களைக் கற்பித்து, கற்றுத் தந்ததையும் அழகுறச் செய்து, பின்னர் அவளை …
Read More »Tag Archives: அல்லுஃலுவு வல்மர்ஜான்
நபி (ஸல்) அவர்கள் ஒட்டுமொத்த உலக சமுதாயத்தாருக்கு..
93- ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் அதனை நம்பித்தான் ஆக வேண்டிய நிலையிருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேதஅறிவிப்பு (வஹீ) தான். ஆகவே, நபிமார்களிலேயே மறுமை நாளில், பின்பற்றுவோர் அதிகம் உள்ள நபியாக நான் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-4981: அபூஹூரைரா(ரலி)
Read More »இறை அத்தாட்சிகளை கண்டு ஈமானிய உறுதி கொள்தல்..
92- (இறந்து விட்டவற்றுக்கு அல்லாஹ் எப்படி உயிரூட்டுகிறான் என்ற சந்தேகம் இறைத்தூதர்களுக்கு வருவதாயிருந்தால்) நாமே இப்ராஹீம் (அலை) அவர்களை விடவும் சந்தேகம் கொள்ள அதிகத் தகுதியுடையவர் ஆவோம்.(ஆகவே, சந்தேகப்பட்டு அவர்கள் அப்படிக் கேட்கவில்லை. திருக்குர்ஆனின் படி) இப்ராஹீம் (அலை) அவர்கள், என் இறைவா! நீ இறந்தவர்களை எப்படி உயிராக்குகின்றாய் என்று எனக்குக் காட்டு என்று கேட்டபோது அல்லாஹ் நீங்கள் நம்பிக்கைக் கொள்ளவில்லையா? என்று கேட்டான். அவர்கள் ஆம், (நம்பிக்கைக் கொண்டுள்ளேன்) …
Read More »விசுவாசத்தில் பலவீனர்களுக்கு உதவி புரிதல் பற்றி …
91- நபி (ஸல்) அவர்களுடன் நான் அமர்ந்திருந்தபோது நபி (ஸல்) அவர்கள் சிலருக்கு கொடுத்தார்கள். சிலரைவிட்டார்கள். (யாருக்கு கொடுக்கவில்லையோ) அவர் எனக்கு மிகவும் வேண்டியவராவார். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! ஏன் அவரை விட்டு விட்டீர்கள்? அல்லாஹ்வின் மீது ஆணையாக அவரை நான் மூமின் என்றே கருதுகிறேன் என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவரை முஸ்லிம் என்று சொல் என்று சொன்னார்கள். சிறிது நேரம் நான் மவுனமாக இருந்தேன். …
Read More »விசுவாசம்!
ஒருவர் பயந்தால் தம் விசுவாசத்தை மறைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி……… 90- மக்களில் இஸ்லாத்தை ஏற்றிருப்பதாகக் கூறுபவர்களின் பெயர்களை எனக்காக எழுதுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அவர்களுக்காக ஆயிரத்து ஜந்நூறு பெயர்களை எழுதினோம். அப்போது நாங்கள், நாம் ஆயிரத்து ஜநூறு பேர் இருக்க (எதிரிகளுக்கு) நாம் பயப்படுவதா? என்று கேட்டோம். (ஆனால் பிற்காலத்தில்) நாங்கள் அச்சப்பட்டுக் கொண்டு தனியாகத் தொழுமளவிற்கு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்ததை நான் பார்த்திருக்கின்றேன். புகாரி-3060: …
Read More »ஈமானின் இறுதி நிலை
89- பாம்பு தன் புற்றில் (சென்று) அபயம் பெறுவது போல் ஈமான் (இறைநம்பிக்கை) மதீனாவில் அபயம் பெறும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-1876: அபூஹூரைரா(ரலி)
Read More »குழப்பங்களின் பரிகாரம் நல்லறங்களே……
88- நாங்கள் உமர் (ரலி) இடம் அமர்ந்திருந்த போது, நபி (ஸல்) அவர்கள் ஃபித்னாவைப் பற்றிக் கூறியதை உங்களில் அறிந்தவர் யார்? என்று கேட்டார்கள். (ஃபித்னா என்ற வார்த்தைக்குச் சோதனைகள், துன்பங்கள் என்ற பொருளும் குழப்பங்கள் என்ற பொருளும் உண்டு). நபி (ஸல்) அவர்கள் கூறிய மாதிரியே நான் அதை அறிந்திருக்கிறேன் என்றேன். அதற்கு உமர் (ரலி) நீர் அதற்குத் தகுதியானவர் தாம் என்றனர். ஒரு மனிதன் தமது குடும்பத்தினரிடமும் …
Read More »அமானித மோசடியும் குழப்பங்கள் தோன்றுவது குறித்தும்…
87- அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு (நன்பகத் தன்மை தொடர்பாக) இரு செய்திகளைக் கூறினார்கள். அவற்றில் ஒன்றை நான் (என் வாழ்நாளிலேயே) பார்த்து விட்டேன். மற்றொன்றை எதிர்பார்த்திருக்கின்றேன். ஒரு செய்தி யாதெனில் (இயற்கையாகவே) மனிதர்களின் ஆழ் மனதில் (அமானத் எனும்) நம்பகத் தன்மை இடம்பிடித்தது. பின்னர் அவர்கள் குர்ஆனிலிருந்தும் (அதை) அறிந்து கொண்டார்கள். (நபியவர்கள் கூறிய இதை நான் பார்த்து விட்டேன்.) இரண்டாவது செய்தி, நம்பகத் தன்மை …
Read More »குடிமக்களை காக்கத் தவறிய ஆட்சியாளன்
சமுதாயத்தை ஏய்க்கும் ஆட்சியாளன் பெறும் தண்டனை குறித்து………. 86- நபி (ஸல்) அவர்கள், ஓர் அடியானுக்குக் குடிமக்களை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களது நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் பெறமாட்டான் என்று சொல்ல நான் கேட்டேன் எனக் கூறினார்கள். புகாரி-7150: மஅகில்(ரலி)
Read More »ஷஹீத்!
தன் உயிரை உடமையைக் காக்கப் போராடி உயிர் விட்டவன் ஷஹீது என்பது பற்றி……… 85- தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும் போது கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர் தியாகம் செய்தவர் (ஷஹீது) ஆவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-2480: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி)
Read More »