ஒருவர் பயந்தால் தம் விசுவாசத்தை மறைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி………
90- மக்களில் இஸ்லாத்தை ஏற்றிருப்பதாகக் கூறுபவர்களின் பெயர்களை எனக்காக எழுதுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அவர்களுக்காக ஆயிரத்து ஜந்நூறு பெயர்களை எழுதினோம். அப்போது நாங்கள், நாம் ஆயிரத்து ஜநூறு பேர் இருக்க (எதிரிகளுக்கு) நாம் பயப்படுவதா? என்று கேட்டோம். (ஆனால் பிற்காலத்தில்) நாங்கள் அச்சப்பட்டுக் கொண்டு தனியாகத் தொழுமளவிற்கு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்ததை நான் பார்த்திருக்கின்றேன்.
புகாரி-3060: ஹூதைஃபா(ரலி)
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library