தீவிரவாத்திற்கு எதிராக’ என்ற போலிக் காரணம் சொல்லி கடந்த ஐந்து வருடங்களாக அமெரிக்காவின் கூட்டுக் களவானியாகச் செயல்பட்டு வந்த பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷராஃப், தற்போது தீவிரவாதிகளை உருவாக்குவது அமெரிக்காதான் என்று திருவாய் மலர்ந்துள்ளார். காலம் கடந்த ஞானதோயம்! முஷராஃப்பின் இந்த திடீர் பல்டியால், ஏற்கனவே மனஉளைச்சலில் நொந்து போயிருக்கும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், இன்னும் சில நாட்களில் உசாமா, ஜவாஹிரி வரிசையில் பாகிஸ்தான் அதிபரையும் வைத்து அழகு …
Read More »Tag Archives: நல்லடியார்
ஹஜ் மானியமும் வெட்கமும்!
மக்காவுக்கு புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் இந்திய முஸ்லிம்களுக்கு வழங்கப் படுவதாகச் சொல்லப்பட்ட “ஹஜ் மானியம் ரத்து” என்பது குறித்த பதிவை ‘என்றும் அன்புடன்’ பாலா என்பவர் பதிவிட்டிருந்ததர். அதில் ஹஜ் யாத்திரை வசதியுள்ளவர்களுக்கு மட்டுமே கடமை என்று சொல்லப்படுவது பற்றி முஸ்லிம்கள் விளக்க வேண்டி இருந்தார். பாலாவின் (என்றும்?) அன்பான அழைப்பை ஏற்று, இந்திய ஹாஜிகளுக்கு வழங்கப்படும் ஹஜ் மானியம், ரிசிகேஷ் செல்லும் இந்து யாத்திரிகர்களுக்கு வழங்கப் படுவது …
Read More »கிறிஸ்தவர்களின் பார்வையில் இஸ்லாம்
கத்தோலிக்க மதகுரு புனிதபோப் பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் கடந்த செப்டம்பர்-12 அன்று ஜெர்மனியில் ஒரு பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் போது, பதினான்காம் நூற்றாண்டில் துருக்கியை ஆண்ட பைசாந்திய மன்னன் மானுவேல் இரண்டாம் பாலியோலோகஸ் (Manuel II Paleologus)க்கும்,மன்னனுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொன்ன ஒரு பார்ஸிய அறிஞருக்கும் நடந்த உரையாடலின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டிப் பேசியதால் பெரும் கண்டனத்திற்கு ஆளாகி மன்னிப்புக் கேட்டுள்ளார் . பதினான்காம் நூற்றாண்டு உரையாடலை மேற்கோள் காட்டிய …
Read More »மகாராஷ்டிரா மசூதி அருகே குண்டு வெடிப்பு – 30 பேர் பலி
மகாராஷ்டிர மாநிலம் மலேகாவ்ன் நகரில் இன்று மசூதிக்கு வெளியே பயங்கர குண்டு வெடித்தது. இதில், 30க்கும் மேற்பட்டவர் பலியாயினர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். மதக் கலவரங்களுக்குப் பேர் போன இந்த நகரில் நடந்துள்ள இந்த குண்டு வெடிப்பால் மகாராஷ்டிரா முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது. படா கபரிஸ்தான் பகுதியில் உள்ள நுரானி மஸ்ஜித் என்ற மசூதிக்கு வெளியே இந்த குண்டு வெடிப்பு நடந்தது. இன்று ஷபாப்ஏராத் (ஷபே பராஅத்) என்ற …
Read More »காஃபிர் (Kaafir/كَافِر ) என்பது கேவலமான சொல்லா?
திருக்குர்ஆனில் சொல்லப்படும் ‘காஃபிர்’ (Kaafir/كَافِر ) என்ற அரபிச் சொல்லை மாற்று மத சகோதரர்கள் தம்மைக் குறிப்பிடும் கேவலமான சொல்லாகக் கருதுகிறார்கள். திருக்குர்ஆன் ‘காஃபிர்’ என்று தங்களை ஏசுவதாக எண்ணுகிறார்கள். அப்படியொரு தவறானப் பிரச்சாரம், திருக்குர்ஆன் பற்றி விளங்காதவர்களால் அல்லது விளங்கியிருந்தும் உள்நோக்கத்துடன் இஸ்லாத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்யப்படுபவர்களால் முடுக்கி விடப்படுகிறது. இந்து மதத்தைப் பின்பற்றுபவரை ‘இந்து’ என்கிறோம்; கிறிஸ்தவத்தைப் பின்பற்றுபவரை ‘கிறிஸ்தவர்’ என்கிறோம். அதேபோல்தான் இஸ்லாத்தைப் பின்பற்றுபரைக் குறிக்க …
Read More »சுதந்திர தினச் சிந்தனைகள்
தேசத்தால் இந்தியன் – இனப்பாசத்தால் திராவிடன் – பேசும் மொழியால் தமிழன் – வாழும்வழியால் முஸ்லிமானேன்! ஒவ்வொரு நுட்பத்திற்கும் தர நிர்ணயம் இருப்பது போல், மென்பொருள் நுட்பத்தில் இந்திய தரமே சிறந்தது என்பதை உலகம் அங்கீகரித்து பத்தாண்டுகளுக்கும் மேலாகி விட்டன. இந்தியாவிலிருந்து வெளியேறும் மென்பொருள் வல்லுனர்களெல்லாம் “சப்பீர் பாட்டியா” அளவுக்கு இல்லா விட்டாலும் குறைந்தபட்ச திறமையுடனேயே வெளியேறுகிறார்கள். பள்ளி அல்லது கல்லூரி மாணவர்களிடம் படித்து முடித்து என்னவாக விருப்பம்? என்று …
Read More »சுதந்திரத்தின் சொந்தக்காரர்கள்
சிறு சிறு நிலப்பகுதிகளாக ஜமீன்களின் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளை ஒருங்கிணைத்து முழு இந்தியாவாக சுமார் எட்டு நூற்றாண்டுகளுக்கும் மேல் ஆண்டு வந்த முஸ்லிம்கள், வந்தேறி ஆங்கிலேயரின் சூழ்ச்சியால் இந்திய சாம்ராஜ்ஜியத்தை தொடர்ந்து ஆளும் உரிமையை இழந்தார்கள்.அதனை மீண்டும் பெற வேண்டியக் கடமை இந்திய முஸ்லிம்களிடமே இருந்ததால் ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியாவை மீட்கும் சுதந்திரப் போராட்டத்தை தொடங்கினர். சிப்பாய் கலகம், மாப்பிள்ளா கலகம் என சுதந்திர போராட்டத்தில் இந்திய முஸ்லிம்களின் தியாகங்கள் …
Read More »UN = அயோக்கிய நாடக சபை
இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படவும் பிணக்கம் கொண்ட நாடுகளுக்கிடையேயானப் பிரச்சினைகளைச் சுமூகமாகத் தீர்த்து வைக்கவும் உருவாக்கப் பட்டதுதான் UNITED NATIONS எனும் ஐக்கிய நாடுகள் சபை. இதில் அந்தத்த நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் மட்டுமின்றி சர்வாதிகாரிகள், மன்னர்கள், இராணுவ அதிகாரிகளின் பிடியிலிருக்கும் நாடுகளும் இடம் பெற்றுள்ளன. உலகமகா கொடியவனாக ஜெர்மானிய ஹிட்லரைப் போன்ற ஆதிக்க வெறியர்களிடமிருந்து மக்களைக் காக்க அனைத்து நாடுகளும் பங்கேற்கும் அங்கமாக …
Read More »புதைத்தல் Vs. எரித்தல்: ஒரு அறிவியல் பார்வை
இறந்தவர்களைப் புதைப்பதால் இடநெருக்கடி ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் எரிப்பதே சிறந்தது என்று “என்னை புதைப்பதா? எரிப்பதா?” என்ற ஒரு பதிவில் அருமையான விவாதத்தை எழுப்பி இருந்தார்.இதை ஒரு மதப்பிரச்சினையாகப் பார்க்காமல் சமூகக் கண்ணோட்டத்தில் தீர்வு காண வேண்டும் என்றும் வேண்டியிருந்தார். அதில் பெரும்பாலோர் புதைப்பதை விட எரிப்பதே சிறந்தது என்று கருத்துத் தெரிவித்திருந்தார்கள். உண்மையில் எந்த முறை சிறந்தது என்று அலசிப் பார்ப்போம். அதற்கு முன் அ.மார்க்ஸ் …
Read More »உலக வக்கிரப் போட்டி 2006
உலக அழகிப்போட்டி என்ற பெயரில் கன்னிப் பெண்களை துகிலுறியச் செய்து வக்கிர ஆண்களுக்கு மத்தியில் பூனை நடை நடக்கவிட்டு, கலந்து கொண்ட பெண்களில் ஒரு சிலரை மட்டும் ஒவ்வொரு பிரிவில் அழகிகள் என்று தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். முந்தானை முடிச்சு படத்தில் பாக்கியராஜ் கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா? என்று கிராமத்து ஆண்களிடம் கேட்பார். எல்லோரும் கண்ணகி என்பார்கள். உடனே அவர் அங்கிருக்கும் கிராமப் பெண்களிடம், ‘உங்கள் கணவர்கள் உங்களை கற்பில் சிறந்தவர்கள் …
Read More »