கத்தோலிக்க மதகுரு புனிதபோப் பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் கடந்த செப்டம்பர்-12 அன்று ஜெர்மனியில் ஒரு பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் போது, பதினான்காம் நூற்றாண்டில் துருக்கியை ஆண்ட பைசாந்திய மன்னன் மானுவேல் இரண்டாம் பாலியோலோகஸ் (Manuel II Paleologus)க்கும்,மன்னனுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொன்ன ஒரு பார்ஸிய அறிஞருக்கும் நடந்த உரையாடலின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டிப் பேசியதால் பெரும் கண்டனத்திற்கு ஆளாகி மன்னிப்புக் கேட்டுள்ளார் .
பதினான்காம் நூற்றாண்டு உரையாடலை மேற்கோள் காட்டிய போப், பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த இருவேறு உரையாடல்களைக் கருத்தில் கொண்டால், இஸ்லாம் வாளால்-வன்முறையால் பரவிய மார்க்கமல்ல என்பதைப் புரிந்து கொண்டிருப்பார் .
ரோமச் சக்கரவர்த்தி ஹிராக்ளியசுக்கு முஹம்மது நபியின் முத்திரையிட்ட கடிதம்
முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்த வரலாற்று ஆய்வாளர்களின் பார்வையில், ரோம சாம்ராஜ்ஜியத்தின் பைசாந்திய மன்னர் ஹிராகிளியஸ் (கிபி . 610) அவர்களுக்கு முஹம்மது நபி அனுப்பிய கடிதம் ஒப்பற்ற பொக்கிஷமாகக் கருதப்படுகிறது. மன்னர் ஹிராகிளியஸ், முஹம்மது நபியைப் பற்றி அறிந்து கொள்ள , தனது ராஜ்ஜியத்தின் வழியாக சிரியாவுக்குப் பயணித்த குரைஷி வணிகர்களில், முஹம்மது நபியின் உறவினரும் பரம எதிரியுமாகத் திழந்த அபூசுஃப்யானிடம் பல கேள்விகளைக் கேட்டார். பின்னர் முஹம்மது நபி பற்றிய அவருடைய புரிதல்களைக் கூறத் தொடங்கினார்:
“எல்லா இறைத் தூதுவர்களும் உயர் குடியிலிருந்தே வந்துள்ளனர். முஹம்மதுக்கு முன்பாக உமது கோத்திரத்தாரில் எவரேனும் தன்னை இறைத்தூதராகச் சொல்லி இருக்கிறார்களா?” என்று நான் கேட்டேன். “இல்லை” என்றீர். உமது பதில் “ஆம்” என்று இருந்திருப்பின், முன்னோர்களின் தாக்கம் முஹம்மதுக்கும் ஏற்பட்டு, தானும் அவ்வாறு அவர்களைப் போலக் என்று கருதுகிறார் என்றிருப்பேன்.
“உங்கள் கோத்திரத்தாரில் எவரேனும் மன்னராக இருந்திருக்கிறார்களா?” என்று கேட்டேன். ” இல்லை” என்றீர். “ஆம் ” என்றிருப்பின் முஹம்மது, அவர்களின் மரபுவழி மன்னர் பாரம்பரியப் பெருமையை நிறுவ முயல்கிறார் என்றிருப்பேன் .
“முஹம்மது என்றாவது பொய் சொல்லி இருக்கிறா?” என்றேன். ” இல்லை” என்றீர். என்றுமே பொய் சொல்லியிராத ஒருவரால் திடீரென அல்லாஹ்வின் பெயரால் பொய்யுரைக்க முடியாது என்று வியந்தேன் .
முஹம்மதைப் பின்பற்றுபவர்களைப் பற்றிக் கேட்டேன். “அவர்கள் ஏழைகள்” என்றீர். எல்லா இறைத்தூதர்களைப் பின்பற்றியவர்களும் ஏழைகளாகவே இருந்தனர் .
முஹம்மதைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை பற்றிக் கேட்டேன். “அவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது” என்றீர். உண்மையாளர்களின் எண்ணிக்கை வளரும் என்பதே நியதி.
“முஹம்மதைப் பின்பற்றியவர்களில் எவரேனும் மீண்டும் தங்கள் பழைய மார்க்கத்திற்கு திரும்பியுள்ளனரா?” என்றேன் . “இல்லை” என்றீர். ஒரு கொள்கையை மனப்பூர்வமாக ஏற்று உறுதியான நம்பிக்கை கொண்டவர்களின் நிலையில் மாற்றமே வராது.
“உங்களில் எவரேனும் இதற்குமுன் முஹம்மதால் வஞ்சிக்கப்பட்டு ஏமாற்றப் பட்டிருக்கிறீர்களா?” என்று வினவினேன் . “இல்லை” என்றீர் . எவரையும் வஞ்சிக்காத பண்பே முந்தைய இறைத்தூதர்களின் பண்பாகவும் இருந்தது.
முஹம்மது தன்னைப் பின்பற்றுபவர்களுக்குச் சொல்லும் கொள்கைகள் என்னவென்று கேட்டதற்கு, “கஃபாவிலுள்ள சிலைகளை வணங்காமல் அல்லாஹ்வை மட்டும் வணங்கவும் உண்மையாகவும் கற்பு நெறியுடனும் வாழச் சொல்வதாகப் பதிலளித்தீர் . முஹம்மதைப் பற்றி
உம்மால் சொல்லப் பட்டவை உண்மையாக இருப்பின், கூடிய விரைவில் இந்த சிம்மாசனத்தை அவர் அலங்கரிப்பார் . முஹம்மதின் வருகையைப் பற்றிச் சொல்லித் தரப்பட்டிருக்கிறேன். ஆனால் அவர் உங்கள் குலத்திலிருந்து வருவார் என்பதை அறிந்திருக்கவில்லை. அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவரது பொற்பாதங்களை நான் கழுவேன்” என்றார்.
கி.பி.ஆறாம் நூற்றாண்டில் எத்தியோப்பியாவை ஆண்ட இன்னொரு கிறிஸ்தவ மன்னர் நஜ்ஜாஷி (Negus) ஆவார். மக்கா காஃபிர்களின் கொடுமைகளிலிருந்து தப்பி,முஹம்மது நபியின் அறிவுரைப்படி முஸ்லிம்கள் அகதிகளாக நாடுகடந்து அங்கு வந்திருந்தனர். இதனை அறிந்த மக்கா குறைஷிகள், அவ்வாறு சென்றவர்களைத் திரும்ப அழைத்துவரும் நோக்கில் அப்துல்லாஹ் பின் அபூ ரபீஆ மற்றும் அம்ரு பின் அல்ஆஸ் ஆகிய இருவரையும் அனுப்பி வைத்தனர் . அகதிகளாக வந்திருந்த 83 முஸ்லிம்களின் சார்பில், ஜாஃபர் பின் அபூதாலிப் அவர்கள் பேசுவதாக முடிவு செய்யப்பட்டது . மன்னர் நஜ்ஜாஷியின் அரசவையில் நடந்த உரையாடல்களைப் பார்ப்போம்.
எத்தியோப்பிய மன்னர் நஜாஷிக்கு முஹம்மது நபியின் முத்திரையிட்ட கடிதம்
“எங்கள் சமூகத்தைச் சார்ந்த சில மூடர்கள், எங்களின் முன்னோர்களின் மார்க்கத்தைக் கைவிட்டு, தங்களிடம் அடைக்கலம் தேடி வந்துள்ளார்கள். இருப்பினும் அவர்கள் உங்கள் மார்க்கத்தையும் இன்னும் ஏற்கவில்லை. ஏனெனில் எங்களுக்கும் உங்களுக்கும் அறிமுகமில்லாத ஒரு புது வழிமுறையை அவர்கள் வகுத்துக் கொண்டுள்ளார்கள். ஆகவே எங்களின் மேலான தலைவர்கள், உங்களிடம் இதை எடுத்துச் சொல்லி இவர்களை மீண்டும் அவர்களிடம் அழைத்துச் செல்வதை விரும்புகிறார்கள்” என்றார் அப்துல்லாஹ்.
அகதிகளாக வந்த முஸ்லிம்களுக்கு மன்னருடன் பேசும் வாய்ப்புக் கிடைத்து விடக்கூடாது என்பதில் குரைஷிகளின் பிரதிநிதிகள் கவனமாக இருந்தார்கள். எனினும், இயேசுவின் உண்மையான போதனைகளைக் கடைப்பிடித்து நல்லாட்சி செய்து வந்த மன்னர் நஜ்ஜாஷி, முஸ்லிம்களிடம் இது பற்றி விசாரித்து விட்டே முடிவெடுப்பதாகச் சொன்னார். அதன்படி அரசவைக்கு முஸ்லிம்கள் அழைத்து வரப்பட்டு, பல கேள்விகள் கேட்கப்பட்டனர். மன்னர் நஜ்ஜாஷி நேரடியாகவே விசாரணை நடத்தினார். இஸ்லாத்தை ஏற்று முன்னோர்களின் வழிமுறையைக் கைவிடக் காரணம் என்ன என்பது பற்றியும் விசாரித்தார்.
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி என்னனென்ன காரணங்களைச் சொன்னார்களோ அவற்றை அப்படியே சொல்வது என்ற முடிவிலிருந்த முஸ்லிம்கள் சார்பில் பேசிய ஜாஃபர் பின் அபூதாலிப், இஸ்லாத்திற்கு முன்னர் தாங்கள் “அறியாமையில் மூழ்கி இருந்ததாகவும் பல வெட்கக் கேடானச் செயல்களைச் சர்வ சாதாரணமாகச் செய்தவர்களாகவும் கஅபாவில் சிலைகளை நிர்வாணமாக வணங்குபவர்களாகவும் சத்தியத்தை காப்பாற்றாமல், உறவினர்களையும் அண்டை வீட்டாரையும் மதியாதவர்களாகவும் பெண் சிசுக் கொலை செய்பவர்களாகவும் அனாதைகளின் சொத்துக்களை அபகரிப்பவர்களாகவும் பெண்கள் மீது அபாண்டமாக பழி சுமத்துபவர்களாகவும் இருந்த பாகன் கலாச்சாரத்தின் அவலங்களைச் சொன்னதோடு, தற்போது அவற்றிலிருந்து விலகி அல்லாஹ்வை மட்டும் நாளொன்றுக்கு ஐந்துமுறை தொழுதும் தர்மம் செய்தும் நோன்பிருந்தும் வருகிறோம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் எங்களை எங்களின் பழைய வழியில் திருப்பச் செய்யும் நிர்ப்பந்தத்துக்கு அஞ்சி எங்களின் சொந்த நாட்டைத் துறந்து உங்கள் ராஜ்ஜியத்தில் அடைக்கலம் தேடி வந்துள்ளோம்” என்று விளக்கினார். பின் , மன்னரின் விருப்பப்படி திருக்குர்ஆனின் 19 ஆவது அத்தியா
பைசாந்திய,அபீசீனிய மன்னர்களை ஈர்த்த இஸ்லாம் கத்தியால் பரப்பப்படவில்லை; மாறாக சத்தியத்தால் பரப்பப்பட்டது என்பதே வரலாறு கூறும் உண்மை. அவ்வாறு சத்தியத்தால் மட்டுமே பரவி பேரரசர்களையும் ஈர்த்த இஸ்லாம், ஒருநாள் வாட்டிகன் பாப்பரசரையும் ஈர்க்கும் என்று நம்புவோமாக!
கட்டுரைக்கே முத்தாய்ப்பாக முத்தான வரிகள் மிக அருமை உங்களுடன் சேர்ந்து நாமும் பிரார்த்திறோம்
திரு நல்லடியார்,
//எனினும் சளைக்காதக் குறைஷித் தூதுவர்கள், மறுநாள் மன்னரிடம் முஸ்லிம்கள் தங்கள் தெய்வங்களை மட்டுமல்ல இயேசுவைப் பற்றியும் எண்ணற்றப் பொய்களைச் சொல்லி அவமதிக்கிறார்கள் என்ற அவதூறுக் குற்றச் சாட்டை அள்ளி வீசினர்//
அன்று மட்டுமா, இன்றும் சிலர் வேசம் தரித்து காழ்ப்பைக் கொட்டிக் கொண்டு தானே உள்ளனர்.
அருமையான இடுகைக்கு நன்றி
படிக்கவும், அதை நினைத்து ஆலோசிக்கவும் வைக்கும் கடிதம்கள். உலகிற்கே பறை சாட்டும்
சரித்திர கடிதம்கள். ஆனால் போப், நாஜிகளின் நாட்டில் இருந்து வந்தவர் அல்லவா? அவர்
எப்படி இதை எல்லாம் ஆலோசிக்க போறார்? இஸ்லாம் உண்மையைத்தான் போதிக்கிறது
என்று சொல்லும் காலம் விரைவில் வரத்தான் போகிறது. ஆண்டவன் நினைத்தால்.
உங்கள் பணி தொடரட்டும் என்று வாழ்த்துகிறேன்.
அசலாம்