Featured Posts

சுதந்திரத்தின் சொந்தக்காரர்கள்

சிறு சிறு நிலப்பகுதிகளாக ஜமீன்களின் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளை ஒருங்கிணைத்து முழு இந்தியாவாக சுமார் எட்டு நூற்றாண்டுகளுக்கும் மேல் ஆண்டு வந்த முஸ்லிம்கள், வந்தேறி ஆங்கிலேயரின் சூழ்ச்சியால் இந்திய சாம்ராஜ்ஜியத்தை தொடர்ந்து ஆளும் உரிமையை இழந்தார்கள்.அதனை மீண்டும் பெற வேண்டியக் கடமை இந்திய முஸ்லிம்களிடமே இருந்ததால் ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியாவை மீட்கும் சுதந்திரப் போராட்டத்தை தொடங்கினர்.

சிப்பாய் கலகம், மாப்பிள்ளா கலகம் என சுதந்திர போராட்டத்தில் இந்திய முஸ்லிம்களின் தியாகங்கள் மறைக்கப்பட்டு, இன்று முஸ்லிம்களுக்கு இந்தியாவில் வாழும் உரிமையுள்ளதா? என்று இந்துத்துவா சக்திகளால் பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு தள்ளப் பட்டுள்ளோம்.

தென்னகப் புலிகளான திப்பு சுல்தான், கான் ஷாகிப் என்கிற மருதநாயகம் போன்ற இந்திய முஸ்லிம்களால் முன்மொழிந்து தொடங்கி வைக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத்தில் எவ்வித பங்களிப்பும் செய்யாததோடு, சுதந்திரப் போராளிகளை ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்த ஒரு கூட்டம் இந்தியாவை உரிமை கொண்டாடுகிறது.

காட்டிக் கொடுத்த பதவி சுகம் பெற்ற இவர்களால், ஆங்கிலம் பேசுவதும் ஹராம் என்று மார்க்கக் கட்டளையிட்ட இந்திய முஸ்லிம்களின் தியாகம் மறைக்கப்பட்டுள்ளதோடு, “சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்களிப்பு” என்று யாராவது ஒரு அரசியல்வாதியை மேடையேற்றி பேசவைத்து வரலாற்றை மறந்த முஸ்லிம்களும் கைதட்டி மகிழ்கிறோம். அதனால்தான் சுதந்திரமடைந்து கிட்டத்தட்ட அறுபது வருடங்களாகியும் கல்வி வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வேண்டி கெஞ்சிக் கொண்டிருக்கிறோம்.

கேரளாவிலுள்ள ‘பாலாமொழி’ என்ற ஊருக்கு அருகில் சுதர்ஷன சமஸ்கிருதப் பள்ளியின் நிர்வாகியும் தலைமை ஆசிரியருமான ஸ்ரீமான் கிருஸ்ண வாரியார், இந்தியாவின் தேசிய கீதமான ‘ஜன கண மண” எத்தகைய தேசிய உணர்வையும் ஊட்டவில்லை. காரணம் இது தேசியக் கீதமாகக் கருதி இயற்றப்படவில்லை. பிரிட்டிஸ் சக்கரவர்த்தி எட்வர்டை வரவேற்று பாராட்டி பாடப்பெற்ற கீதம்தான் ‘ஜன கண மண’ எனவே 1985, ஜூலை 26 ஆம் தேதி முதல் இப்பள்ளியில் ‘ஜன கண மண’ பாடுவதை நிறுத்தி, நானே சமஸ்கிருத மொழியில் எழுதிய ‘ஜய ஜய ஜனனி’ என்ற பாடலை பாடச் செய்வோம் என்றார்.

அதேபோல், கேரளாவின் இன்னொரு பகுதியில், ஜெஹோவோ என்ற கிறிஸ்தவப் பிரிவினர், ‘ஜன கண மண’ பாடல் வரிகள் தங்கள் மதக் கொள்கைக்கு முரண்பட்டக் கருத்தைக் கொண்டிருக்கிறது; எனவே அதை நாங்கள் பாட முடியாது என்றார்கள்.

இவ்விரு சர்ச்சைகளால் நாட்டின் முக்கிய அரசியல்வாதிகளும் ஆன்மீகவாதிகளும் தர்க்கித்துக் கொண்டு, இப்பிரச்சினை ஒரு வருடத்திற்கும் மேலாக கேரள மாநில உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், அட்டர்னி ஜெனரல் ஆப் இந்தியா என சுற்றி சுற்றி வந்தது. அப்போதைய மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை, ‘ஜன கண மண’ கீதத்துக்குப் பதிலாக ‘ஸாரே ஜஹான்ஸே அச்சா! ஹிந்துஸ்தான் அமாரா’ என்ற பாடலையே தேசிய கீதமாக அறிவிக்கலாம் என்று பரிசீலிப்பதாக 1986 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாட்டின் முக்கிய நாளிதழ்களில் செய்தி வெளியானது. அதன் பிறகு ‘ஜய ஜய ஜனனி’ ‘ஜன கண மண’ பிரச்சினை ஓய்ந்தது.

1947 ஆகஸ்ட்-14, நள்ளிரவு 11:59 விநாடிகள். இந்திய நாடாளுமன்றத்தின் அரசியல் நிர்ணயச் சபையின் அனைத்து உறுப்பினர்களும் கூடி இருந்த நேரத்தில் நிசப்தம் நிலவியது. 1947-ஆகஸ்ட்-15, பிறந்ததும் இந்தியா சுதந்திரம் அடைந்ததை அறிவிக்க திருமதி. சுஸேதா கிருபாளினி அவர்களும், டாக்டர். சுசீலா நய்யார் அவர்களும் குரலெடுத்துப் பாடிய, சுதந்திர இந்தியாவின் முதல் தேசிய கீதத்தின் சொந்தக்காரர்கள் முஸ்லிம்கள். ஆம்!. அப்

7 comments

  1. 1.முஸ்லிம்கள் எப்போதும் இந்தியாவை “முழுதாக” ஆட்சி செய்யவில்லை.அசாம், பஞ்சாப், மராத்திய பகுதிகள், கேரளம் போன்ற மிக பெரிய நில பரப்புகள் காபிர்களின் கையில் தான் இருந்தது.உலகத்திலேயே இஸ்லாமிய கொடுங்கோள் ஆட்சிக்கு எதிராக முதன் முறையாக ஒரு வாழ்க்கை முறை தோன்றியது – அதுவே சீக்கிய மதம்.

    2.சாரே ஜஹான் சே அச்சா பாடலை எழுதிய இக்பால் தான் பாகிஸ்தான் வேன்டும் – காபிர்களுடன் நமது “இஸ்லாமிய கலாச்சாரம்” ஒத்து போகாது, நாம் தனியாக போவது தான் சரி என்று முகமது அலி ஜின்னாவுக்கு முன்பே பிரிவினைக்கு வித்திட்டவர்.

    முஸ்லிம் லீக்கின் தலைவராக தேர்ந்து எடுத்தபட்டபின்னர் 1930 ஆம் ஆன்டு லாகூர் மாநாட்டில் அவர் சொன்னது : “I, therefore, demand the formation of a consolidated Muslim state in the best interests of India and Islam”

    இந்தியாவை துன்டாட விரும்பிய ஒருவரின் கவிதையை தேசிய கீதமாக எந்த ரோஷமுள்ள தனது நாட்டுக்கு மட்டும் விசுவாசமுள்ள இந்தியன் ஏற்றுகொள்ள மாட்டான்.

    இக்பால் எழுதிய மற்ற கவிதைகளையும் படித்து பாருங்கள்.நல்ல மனிதர்.அருமையான கவிதைகள்.

    3.ரபீந்தர்நாத் டாகூர் எழுதிய எதையும் படித்ததில்லை என்று இந்த பதிவின் மூலம் நிருபித்துவிட்டீர்கள்.

    தெசியவாதம் “நேஷ்னலிஸம்” என்ற விசயத்துக்கு எதிரான மனிதர் அவர்.இவரது ஐடியல் உலக கான்செப்ட் கொஞ்சம் கொஞ்சம் “இஸ்லாமிய உம்மா”வை ஒத்து இருக்கும்.அவரையும் கேவலபடுத்தி உங்களின் தரத்தினை (இதுக்கும் மேலே குறைக்க முடியுமா)குறைத்து கொள்ள வேன்டாம்.

    4.அடுத்த முறை கொஞ்சம் நன்றாக ரிசர்ச் செய்துவிட்டு எழுத முயற்ச்சி செய்யவும்.

    அல்-பிருனியின் அறிவில் ஆயிரத்தில் ஒரு பகுதியையாவது ஆன்டவன் உங்களுக்கு அருளட்டும்.உங்களுக்காக நான் அவளிடம் பிராத்திக்கிறேன்.

  2. இறை நேசன்

    அட இந்த நல்லடியாருக்கு வேற வேலயே இல்ல. சும்மா எதயாவது போட்டு பொலம்பிகிட்டே.,…

    காட்டிக் கொடுத்த தேசவிரோதிகள் இன்று தேசப்பற்றாளர்களாக,

    தங்களது எதிர்காலத்தையே விலையாகக் கொடுத்து சுதந்திரத்திற்காக வீர தியாகம் புரிந்தவர்கள் இன்று தேசவிரோதிகளாக..

    இது தான் இன்றைய இந்தியா.

    முடிந்தால் இதை ஏற்றுக் கொண்டு அப்படியே ஒதுங்கி நின்று காட்டிக் கொடுத்த தேசப்பற்றாளர்களின் தேசியத்தில் கலக்க முயலுங்கள்.

    இல்லையேல் அப்படியே பாகிஸ்தானுக்கு ஓடிப் போங்கள்.

    அதை விட்டுவிட்டு சும்மா கிடந்து இதப்போல அப்பப்ப உண்மைகள புலம்பிக்கொண்டிருக்கக் கூடாது ஆமா.

  3. இந்திய விடுதலைப்போர் என்பது ஒரு வீர காவியம். இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றனர். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இத்தியாக வேள்வியில் ஈடுபட்டவர்களில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. இதனை 1975ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான ‘இல்லஸ்டிரேட்டட் வீக்லி’ என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார்.

    ‘இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும் உயிர்த் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடைய மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட விடுதலைப்போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம்’ என்று அந்தப் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

  4. மரைக்காயர்

    //சாரே ஜஹான் சே அச்சா பாடலை எழுதிய இக்பால் தான் பாகிஸ்தான் வேன்டும் – காபிர்களுடன் நமது “இஸ்லாமிய கலாச்சாரம்” ஒத்து போகாது, நாம் தனியாக போவது தான் சரி என்று முகமது அலி ஜின்னாவுக்கு முன்பே பிரிவினைக்கு வித்திட்டவர்.//

    காவித்துணியால் கண்ணை மறைத்துக் கொண்டு வரலாற்றை பார்த்தால் இப்படித்தான் தெரியும். ஆனால் உண்மை வரலாறு அதுவல்ல.

    1933-ல் இந்துமகாசபையின் தலைவராக இருந்த பாய் பரமானந்தர் என்பவர்தான், பிரிவினைக்கு முந்திய இந்தியாவை மத அடிப்படையில் இரு நாடுகளாக பிரிக்க வேண்டும் என முதன்முதலில் சொன்னவர். இப்போதுள்ள பாகிஸ்தான் பகுதியைச் சிந்துவிற்கு அப்பாற்பட்ட ஆப்கானிஸ்தான் முதலியவற்றோடு இணைத்து “ஒரு முஸல்மான் பேரரசு உருவாக்கப்பட வேண்டும். அங்குள்ள இந்துக்கள் இங்கே வந்துவிட வேண்டும். இங்குள்ள இஸ்லாமியர் அங்கே போய்விட வேண்டும்” என்றார் அவர். தனக்கு 1905 ஆம் ஆண்டு வாக்கிலேயே இக்கருத்து தோன்றியது என்றும் அவர் சொன்னார்.

    பின்னர் 1937ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற இந்துமகாசபை மாநாட்டில் அப்போது தலைவராக இருந்த சாவர்க்கர் “இந்தியாவை ஒற்றை தேசமாக கருத முடியாது. முக்கியமாக இரண்டு தேசங்கள் இந்தியாவிற்குள் உள்ளன. ஒன்று இந்துக்களின் தேசம்; மற்றது இஸ்லாமியரின் தேசம்” என்றார்.

    இஸ்லாமியருக்கு தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கை முஸ்லிம்லீக்கால் வைக்கப்பட்டது எந்த ஆண்டில் தெரியுமா? 1940-ஆம் ஆண்டு லாகூர் மாநாட்டில்.

  5. மரைக்காயர்,

    சர் அல்லாமா இக்பால் 1938ஆம் ஆண்டு இறந்துவிட்டார்.

    செத்த பிறகு பேயாக வந்து பாகிஸ்தான் வேண்டும் என்ற கோரிக்கையை 1940 ஆம் ஆண்டு வைத்தாரா என்ன ? :-)

    1930 ஆம் ஆண்டு அகில இந்திய முஸ்லிம் லீக்கின் மாநாட்டிலே அந்த அமைப்பின் தலைவராக Presidential Address ஆற்றிய போது முதன் முறையாக இஸ்லாமியர்களால காபிர்களுடன் இனைந்து வாழ இயலாது என்று தெரிவித்தவர் சர் முகமது இக்பால்.

    டிசம்பர் 30, 1930 ஆம் ஆண்டு அவர் ஆற்றிய உரையில் இருந்து இன்னும் கொஞ்சம் :

    “I would like to see the Punjab, North-West Frontier Province, Sind and Baluchistan amalgamated into a single state. Self-government within the British Empire, or without the British Empire, the formation of a consolidated Northwest Indian Muslim state appears to me to be the final destiny of the Muslims, at least of Northwest India.”

    மரைக்காயர்,எதை பற்றி பேசுகிறோம் என்று தெளிவாக ஒரு முறை படித்து விடுங்களேன்.

  6. நல்லாடியார்.

    மன்னிக்க வேண்டும்.
    இக்பால் கோரிக்கை வைத்தது லாஹூர் மாநாட்டில் அல்ல, அல்லாகாபாத் மாநாட்டில் – ஆனால் அதே வருடம் அதே தேதி.1930.

  7. அப்புறம் நல்லாடியார் சாரே ஜஹான் செ அச்சா கவிதையின் உன்மையான தலைப்பு தெரியுமா உங்களுக்கு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *