உலக அழகிப்போட்டி என்ற பெயரில் கன்னிப் பெண்களை துகிலுறியச் செய்து வக்கிர ஆண்களுக்கு மத்தியில் பூனை நடை நடக்கவிட்டு, கலந்து கொண்ட பெண்களில் ஒரு சிலரை மட்டும் ஒவ்வொரு பிரிவில் அழகிகள் என்று தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
முந்தானை முடிச்சு படத்தில் பாக்கியராஜ் கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா? என்று கிராமத்து ஆண்களிடம் கேட்பார். எல்லோரும் கண்ணகி என்பார்கள். உடனே அவர் அங்கிருக்கும் கிராமப் பெண்களிடம், ‘உங்கள் கணவர்கள் உங்களை கற்பில் சிறந்தவர்கள் அல்லர்’ என்கிறார்கள் என்றதும் மனைவிமார்கள் தத்தம் கணவர்களை அடிக்க விரட்டுவார்கள்!
இதே கண்ணோட்டத்தில் உலக அழகிகள் பற்றிய கேள்வியையும் கேட்டுப் பார்த்தால், உலக அழகிப் போட்டி என்ற பெயரில் நம் வீட்டுப் பெண்களை இழிவு படுத்துவது புரியும்.
இயற்கைப் பேரழிவுகள், போர்கள், குண்டு வெடிப்புகள் என்று மனிதர்கள் அநியாயமாக கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் இச்சூழலில் உலக அழகிப் போட்டிகள் என்ற பெயரில் கன்னிப்பெண்களின் அந்தரங்க அழகை மேடை போட்டு காட்டும் இவர்களை என்னவென்று சொல்வது?
உலக அழகிப் போட்டியின் தாக்கம் கட்டுப்பாடுகளுக்கு பெயர்போன ஈரானிலும் இருந்திருக்கிறது. இஸ்லாமிய உடையணிந்து பெண்களை வலம் வரச் செய்து அழகிப்போட்டி நடத்தியுள்ளார்கள். அழகிப் போட்டிகளை நடத்துபவர்கள் அழகுக்கு என்ன அளவுகோல் வைத்திருக்கிறார்கள் என்று ஒன்றுமே புரியவில்லை.
உலக அழகியை மனைவியா(க்)க நினைப்பதை விட, தன் மனைவியே உலக அழகி என்று நினைப்பவனே நேர்மையான ஆண்மகன்!
//உலக அழகியை மனைவியா(க்)க நினைப்பதை விட, தன் மனைவியே உலக அழகி என்று நினைப்பவனே நேர்மையான ஆண்மகன்!//
மிகச் சரியான சொல்!
அழகிப் போட்டிகளை விட வக்கிரமும்,அருவருப்பான விதிகளை கொண்ட மதம் மோசமானது.யாரும் அழகிப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதில்லை.ஆனால் மதம் என்ற பெயரில் இதை உடுத்தாதே,அன்னிய ஆணுடன் கைகுலுக்காதே,அன்னிய ஆணுடன் பயணிக்காதே,ஆணும்,பெண்ணும் சேர்ந்து பழக்கக்கூடாது என்று முட்டாள்த்தனமாக கட்டுப்பாடு விதிக்கும் ஆணாதிக்க வக்கிர சிந்தனைகளை கொண்டிருப்பவர்கள் அழகிப் போட்டிகளை குறை
கூறுவது விந்தைதான்.பெண்களுக்கு சுதந்திரம் தர மறுக்கும் இரானில் முன்பு பெண்கள் சுதந்திரமாக மேற்கத்திய ஆடைகளை உடுத்தி, உரிமைகளுடன் இருந்த காலமும் உண்டு.நவீனத்துவம் தரும்
சுதந்திரமும், உரிமையும் இஸ்லாத்தில் இல்லை. இஸ்லாம் மூச்சுத்திணற வைக்கும் கட்டுப்பாடுகளைக் கொண்ட மதம்.
ஸ்ரீநிதி’
// மதம் என்ற பெயரில் இதை உடுத்தாதே,அன்னிய ஆணுடன் கைகுலுக்காதே,அன்னிய ஆணுடன் பயணிக்காதே,ஆணும்,பெண்ணும் சேர்ந்து பழக்கக்கூடாது என்று முட்டாள்த்தனமாக கட்டுப்பாடு ….//
அன்னிய ஆடவனுடன் அளவுக்கு மீறிப் பழகாதே, அடக்கமாக உடை உடுத்து என்று பெற்ற தாய்கூட மகளுக்குச் சொல்வாளே!~
அழகிப் போட்டி என்பது மேலை நாட்டு முதலாளித்துவம் கண்டுபிடித்த சுரண்டல். எத்தனை ஆண்டுகளாய் இந்தியா அழகிப் போட்டியைக் கண்டு வருகிறது.
தமிழ்ப் பண்பாட்டில் கூட அழகைப் பலரறியக் கடை பரப்பத் தடை உண்டு என்பது தமிழர்களுக்குத் தெரியும்.
“மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணாத்தோன்றல் மதி”
என்ற திருக்குறள் பாடல் தெரியுமா?
“மண்டினி ஞாலத்து மழை வளம் தரும்
பெண்டிராயின் பிறர் நெஞ்சு புகார்”
என்ற தமிழ்ப் பண்பாடு தெரியுமா
சும்மா எதிர்க் கருத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காக துவேஷமாக எதையாவது சொல்லி வைக்க வேண்டாம்.
காதலர் தினக் கொண்டாட்டங்கள் இந்தியப் பண்பாடு இல்லை என்று சொல்லித் தீவிரவாத இந்துக் குழுக்கள் வாழ்த்து அட்டை விற்கும் கடைகளைத் தாக்குவது ஆண்டாண்டு நடக்கும் நிகழ்வு.
இதற்கு என்ன சொல்வீர்கள்?.மதச் சாயம் பூசுவீர்களா? ஏனெனில் காதலர் தினக் கதாநாயகன் ஒரு கிருத்துவ மதத் துறவி.
எனவே மதம் மக்களுக்குச் சொல்லும் கட்டுப்பாடுகள் தாய் சொல்வது போன்றதுதான். தாயின் கட்டுப்பாடுகள் மூச்சுத் திணற வைப்பவை என்று நல்ல பிள்ளைகள் நினைக்க மாட்டார்கள்.
சகோதரர் புதுச்சுவடி அவர்களே,
ஸ்ரீநிதியின் வார்த்தைகளை கண்டு கொள்ள வேண்டாம். அவர் அப்படித்தான். முன்னுக்குப் பின் முரணாக பேசும் ஹிந்துத்துவத்தின் சாயல் படிந்தவர்களை ஒன்றும் செய்ய இயலாது.
பிற பெண்களுடன் உறவு கொள்பவனை “ஈனப்பிறவி” எனக் கூறிய ம.ம வின் கூற்றுக்கும் பிற ஆண்களுடன் உறவு கொள்வதற்கு ஆலோசனை வழங்கிய “சிறந்த முற்போக்கு பெண்ணியவாதி”யின் கூற்றுக்கும் இடையில் உள்ள முரண்பாட்டை விளக்கி விளக்கம் கேட்டதற்கு இது வரை பதில் தராதவர் இப்படித்தான் ஆங்காங்கே அரைகுறை ஞானத்துடன் அவசரப்பட்டு வழுக்கிக் கொண்டு இருக்கிறார்.
எனவே அவர் வார்த்தைகளுக்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.
இவர் கேட்பவைகளுக்கு வேலை மெனக்கெட்டு விளக்கம் கொடுத்தால் அவர் அதை கண்டுகொள்ளவே மாட்டாராம்.
இதனாலேயே அவரின் “இந்திய பன்முகத்தன்மை” மற்றும் “இனக்கலவரங்களை உருவாக்குபவர்களைக்” குறித்த கருத்துக்கும் இதுவரை பதிலளிக்காமல் இருக்கிறேன்.
அவசரப்பட்டு பிறர் முகத்தில் காறித்துப்புபவர்கள்(The god of a perveted mind will also be a perverted being.) அது இடம் மாறி தன் முகத்தில் விழும் பொழுது குறைந்தபட்சம் அதை துடைக்க மட்டுமாவது முன் வரட்டும்.
அதுவரை முகத்தில் வழியும் துப்பலின் நாற்றத்தைக் கொண்டு நடப்பவர்களின் அருகாமையில் போகாமல் இருப்பதே நாற்றம் நம் மீது படராமல் இருப்பதற்கான சிறந்த வழி.
இறை நேசன்
அன்பு இறை நேச,
நலமா? உங்கள் பதிவு ஆச்சர்யம் அளிக்கிறது. எல்லா பெண்களும் பர்தா அணிந்து சென்றால்தான் நீங்கள் சந்தோஷப் படுவீர்கள் போலத் தெரிகிறது.
பல கலாச்சாரங்களில் பிக்கினியில் வலம் வருவது சாதாரணமாகிவிட்டது. உலக அழகி பட்டம் போட்டியில் கலந்து கொள்பவர்களில் யார் அழகி என்பது பற்றியே. வெறும் அழகிப் பட்டத்தோடு மட்டுமில்லாமல் பட்டம் பெறுபவர்முலம் நிதி திரட்டுவதும், சமூக சேவைகள் செய்வதும் நடைபெறுகின்றன. இதில் நம் மனைவிபற்றிய கேள்வியே இல்லை.
மணல்கயிறு படத்தில் எஸ்.வி சேகரின் கண்டிஷன்களில் ஒன்று ‘பொண்ணு என் கண்ணுக்கு மட்டும்தான் அழகாத்தெரியணும் மத்தவங்க கண்ணுக்கு அசிங்கமாத் தெரியணும்னு’ அதுபொல ஏதாவது நினைக்கிறீர்களா?
ஒருவர் பேச்சுப்போட்டியில் ஜெயித்துவிட்டார் என்றால், மற்றவர்களுக்கு பேசத் தெரியாதென்பதல்ல. அந்த போட்டிகளுக்கு என்ன விதியிருக்கிறதோ அதன்படி,அங்கே பங்கு பெற்றவர்களில் இவர் சிறந்தவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதே அர்த்தம்.
ஈரான் எவ்வளவு அழகாய் தங்கள் பாரம்பரிய ஆடைகளுடன் பெண்களை அணிவகுக்கச்செய்துள்ளது. பாராட்டப்படவேண்டிய விஷயம்.
//பல கலாச்சாரங்களில் பிக்கினியில் வலம் வருவது சாதாரணமாகி விட்டது //
சகோதரர் Cyril அலெக்ஸ்,
ஆடையின்றி பிறந்த மனிதன் படிப்படியாக நாகரிகம் அறியத் தொடங்கியதும் ஆடை அணியத் தொடங்கினான். இதை நாகரிக வளர்ச்சி என்கிறோம். மீண்டும் ஆடை குறைப்பை சிலர் நாகரிக வளர்ச்சி என்கிறார்கள். இஸ்லாம் பிற்போக்குத்தனமானது என்பவர்கள் இதற்குப் பதில் சொல்லட்டும்.
ஒரு அநாகரிகம் மக்கள் மத்தியில் சாதாரணமாகிவிட்டது என்பதற்காக ஒரு அதை அங்கீகரிப்பது எந்த விதத்தில் நியாயம்? மேலைநாடுகளில் மனைவியை மாற்றிக் கொள்வதும் (Indecent Proposal பார்த்தீர்களா?) கூட சகஜம்! இதைக் கலாச்சார வளர்ச்சி என்போமா அல்லது சீரழிவு என்போமா?
மனித உடலில் இயற்கையாகவே வெளியில் தெரியக்கூடிய உறுப்புகளை ஆடைகட்டி மறைப்பதை யாரும் தவறு என்பதில்லை. அந்த ஆடையளவில் எந்தளவு இருக்க வேண்டும் என்பதில்தான் சிலர் குற்றம் சொல்கிறோம். அழகுக்கான அளவுகோள் ஒவ்வொருவர் கண்ணோட்டத்திலும் வேறு படுகிறது. ஆபாசமாக உடல் அழகை வெளிக்காட்டி உடை அணிந்தால் தான் ஒரு பெண் அழகியாக முடியும் என்பது முரன்பாடாக மட்டுமல்ல அநீதியாகவும் இருக்கிறது.
உலக அழகிப் போட்டியில் கலந்து கொள்ளும் பெண்கள் திருமணமாகி இருக்கக் கூடாது, மார்பளவு, இடையளவு தொடையளவு என அங்கங்கள் இந்தந்த அளவில்தான் இருக்க வேண்டும் என்ற ஆணாதிக்க வக்கிரக் கட்டுப்பாடுகள் பற்றி எந்த பெண்ணியவாதியும் குரல் கொடுப்பதில்லை. திருமணமான பெண்கள் அழகி இல்லை என்று எப்படி ஐயா முடிவுக்கு வந்தார்கள்? மேற்சொன்ன அங்க அளவுகளில் கொஞ்சம் கூடுதல் குறை இருந்தால் அழகியாக இருக்க முடியாதா?
எங்காவது ஆணழகன் போட்டியில் கலந்து கொள்பவர் திருமணமாகி இருக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு உண்டா? என்று நியாயமாகச் சிந்தித்தால் பெண்களில் சிலரை மட்டும் கவுரவித்து, இதன் மூலம் தங்கள் பொருட்களை உபயோகித்தால் அழகியாக முடியும் என்ற மனப்பான்மையை ஏற்படுத்தி அழகிப்போட்டியின் நிபந்தனைகளுக்குள் வராத மற்றப் பெண்களை இழிவு படுத்தும் வக்கிர சித்தாந்தம்தான் இந்த அழகிப் போட்டிகள்.
//உலக அழகி பட்டம் போட்டியில் கலந்து கொள்பவர்களில் யார் அழகி என்பது பற்றியே. வெறும் அழகிப் பட்டத்தோடு மட்டுமில்லாமல் பட்டம் பெறுபவர் முலம் நிதி திரட்டுவதும், சமூக சேவைகள் செய்வதும் நடைபெறுகின்றன.//
கன்னிப்பெண்களின் உடலழகை வெளிக்காட்டி அது சார்ந்த பொருட்களை சந்தைப் படுத்த ஆணாதிக்க முதலாளியத்துவ சிந்தனையில் உதித்ததுதான் உலக அழகிப் போட்டிகள். அதோடு சில சமூக சேவைகள் என்பது அழகிப் போட்டிகளை நியாயப்படுத்தச் செய்யும் சூழ்ச்சியே. தெரியாமல்தான் கேட்கிறேன் உலக அழகியாக இல்லாவிட்டால் சமூக சேவை செய்யக் கூடாதா? :-)
// இதில் நம் மனைவிபற்றிய கேள்வியே இல்லை.//
அழகிப்போட்டியில் அரைகுறை ஆடையுடன் காட்சிதரும் பெண் யாரோ ஒருவனின் மனைவி அல்லது சகோதரி என்பதால் நமக்குக் குற்றமாகத் தெரியவில்லை. அந்த இடத்தில் நம் சகோதரியோ அல்லது மனைவியோ அரைகுறை ஆடையுடன் மற்ற ஆண்கள் மத்தியில் வந்தால் நம் மனநிலை எப்படி இருக்கும். சில கேடுகெட்டதுகள் இதையும் கூட பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.
//மணல்கயிறு படத்தில் எஸ்.வி சேகரின் கண்டிஷன்களில் ஒன்று ‘பொண்ணு என் கண்ணுக்கு மட்டும்தான் அழகாத்தெரியணும் மத்தவங்க கண்ணுக்கு அசிங்கமாத் தெரியணும்னு’ அதுபொல ஏதாவது நினைக்கிறீர்களா?//
அப்படியெல்லாம் இல்லை. அவரவர் மனைவி அவரவருக்கு என் அழகாகத் தெரிந்தால் போதும் என்றே நினைக்கிறேன்.:-)) (என் மனவிக்கு நான் அழகாகத் தெரிகிறேன் என்றே நம்புகிறேன் :-))) ஆனந்த விகடன் மதன் அவர்களிடம் ஒரு வாசகர், அழகான மனைவி, அன்பா
அன்பு சகோ. சிறில் அலெக்ஸ்,
நான் நலம். நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினர் நலமா?.
//உங்கள் பதிவு ஆச்சர்யம் அளிக்கிறது. எல்லா பெண்களும் பர்தா அணிந்து சென்றால்தான் நீங்கள் சந்தோஷப் படுவீர்கள் போலத் தெரிகிறது.//
நீங்கள் எதைச் சொல்கிறீர்கள் எனப்புரியவில்லையே.
நான் “சிறந்த முற்போக்கு பெண்ணியவாதிகளைக்” குறித்தும், “ஈனப்பிறவிகளைக்” குறித்தும் தானே அப்பதிவுகளில் எழுதியிருக்கிறேன். அங்கு பர்தா எங்கு வருகிறது?
புரியவில்லை. புரிய வைத்தால் விளக்க முயற்சிக்கிறேன்.
என்னை அன்போடு விசாரித்தமைக்கு நன்றி.
//நல்லடியார்களெல்லாம் இறைநேசராக வேண்டும் என்பதே என் விருப்பம்//
அன்பு நல்லடியார்,
இறைவன் படைத்த சகஜீவிகளுக்கு நன்மை செய்ய முடிகிறதோ இல்லையோ, குறைந்தபட்சம் எந்த தீங்கும் இழைக்காமல் தனக்கு விரும்புவதையே சகஜீவிகளுக்கும் விரும்பி படைத்தவனுக்கு மனப்பூரவமாக கட்டுப்பட்டு வாழும் ஒவ்வொருவருமே படைத்தவனால் விரும்பப்படும் இறை நேசர்கள் தான்.
அல்லாமல் வெறும் பெயரை வைத்துக் கொண்டு வாழ்ந்தவுடன் இறை நேசர்களாகி விட முடியாது.
அதற்காக இது வெறும் ஃபேஷனுக்காக வைத்துக் கொண்ட பெயரும் அல்ல. இறைவன் நேசிக்கக் கூடியவர்களில் ஒருவனாக வேண்டும் என்ற அவாவில் வைத்துக் கொண்ட பெயர் தான் இது. பெயருக்கேற்றபடி வாழ முயற்சி செய்துக் கொண்டிருக்கும் ஒரு சகோதரன் மட்டுமே நான்.
அன்புடன்
இறை நேசன்.