பொம்மைகளும் பேசும் என்பதை புரிய வைத்தவன் என் பிள்ளை மேலும் பல பொம்மைக் கனவுகளுடன்தான் பிள்ளை என்னை வேலைக்கு அனுப்புகிறான் முத்தமிட்டு அவன் சிரித்தாலும், என் “மணிபேஸ்” மடிவெடித்துப் போகிறது அவனது ஏக்கங்களால் என் காரியாலயக் கோவையின் கோர்க்கப்பட்ட நாடாவுக்குள் அவனையும் சேர்த்து முடிந்தாற்போல ஒரு வலி அவனுக்கேயுரித்தான எனது பொழுதுகளை காலாவதியாக்கி விடுகிறது காரியாலயம் கடமையில் நான் காணும் மகிழ்ச்சியெல்லாம் அவனது மௌனங்களுக்குள் காணத்தே போகிறது நான் திரும்பும்வரை …
Read More »