சிலர் தனது கடந்தகால வாழ்வில் ஏற்பட்ட வேதனைகளுக்கெல்லாம் தன்னுடன் இருந்த உறவுகளே காரணம் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டு அவர்களைக் குத்தல் செய்யும் விதமாய் பேசுவதும், நடந்து கொள்வதும் அநேகமான வீடுகளில் நடந்தேறிக் கொண்டுதானிருக்கிறன. அந்தக் குத்தல் வார்த்தைகளை வாங்கிக்கொள்ளும் உறவுகள், அவர்களை சேர்ந்து நடக்கவும் முடியாமல், விலகிச் செல்லவும் முடியாமல் தவிக்கின்றனர். அவ்வாறு நடந்து தன்னை வெறுப்போடு நோக்கும் உறவொன்றினை தியாகத் திருநாளன்று சந்திக்க வாய்ப்பிருந்தும், அவரது மகிழ்ச்சி தன்னால் …
Read More »பர்சானா றியாஸ்
போன நோன்புக்குள்ள…
தலைப்பிறை கண்டுட்டாங்களாம். பள்ளியில சொன்னாங்க, காதுல கேட்டிச்சி, நோன்பு மணத்திச்சி, சைத்தான்கள் விலங்கிடப்படுமாமே இனியென்ன பயமென்று சிலர் சாமத்திலும் விளையாடினோம், ஜும்ஆவுல சொன்னாங்க நேற்று றமளானின் பொழுதுகள் மகத்துவமானதென்று. எம் இறைவா! இந்த றமளானிலாவது சாமத்திலும் அமல் செய்யும் பாக்கியம் தருவாய்! நித்திரை தோய்ந்த கண்ணுடன் ஸஹர் செய்து தூங்கினால், சிலர் ளுஹறுக்குத்தான் விழித்த ஞாபகம் ஜும்ஆவுல சொன்னாங்க நேற்று றமளானில் செய்யும் அமல்களுக்கு கூலி அதிகமாம் எம் இறைவா! …
Read More »[002] அவளது தினக்குறிப்பேட்டிலிருந்து
சொற்ப தேவைக்காக “டெப்” இனை (TAP) வேகமாகத் திறந்துவிட்டு, நீரை வீணாக்குவோரைப் பார்த்தால் அவர்களின் கவனயீனத்தின்மீது கவலை ஏற்படுகின்றது. எமது வெற்றுக் கண்களுக்கு நீர் அதிகம் இருப்பதுபோல் தோன்றினாலும், உயிரினங்களின் நீர்த்தேவை அதைவிட அதிகமாக இருப்பதை உணர்ந்தாலே நீர் ஒரு பொதுச்சொத்து என்ற உணர்வு அனைவருக்குள்ளும் ஏற்படும். சமைப்பது, உடுப்பு துவைப்பது, குழந்தைகளை குளிக்க வைப்பது என்று நீருடன் கூடுதல் தொடர்பு படுவது பெண்களே. தண்ணீர் இறைவனின் அருட்கொடைகளிலொன்று. என்பதைப் …
Read More »அவளது தினக் குறிப்பேட்டிலிருந்து…
அரச கொடுப்பனவு ஒன்றுக்கான ஆட்கள் தெரிவு அந்த இடத்தில் நடைபெற்றது. பொதுமகன் ஒருவர்:- “ஆட்டோவும் வைத்துக் கொண்டு தினமும் உழைக்கிறார்… இந்தாளுக்கு எப்படி சேர் நிவாரணம் கொடுப்பீங்க…” மற்றவர்:- “வாகனம் என்கிட்ட இருக்குறது உண்மைதான்… ஆனா, அது என்ட பெயர்ல இல்லயே…” இரண்டு பொது மகன்களுக்கிடையிலும் சிக்கிக்கொண்டு முழிக்கிறார் அரச உத்தியோகத்தர். அரச நிவாரணங்கள் வீடுதேடிப் போனாலும், என்னைவிடத் தகுதியானவர்கள் பலர் இருக்கின்றார்கள். எனக்கூறி, பெற்றுக் கொள்ள மறுத்த இஸ்லாமிய …
Read More »கல்லாதது உலகளவு
ஜுப்பாவும் தொப்பியும் அணிந்து தனது தந்தை, சகோதரன் அல்லது, உறவுகளுடன் முதன்முதலாக பள்ளிவாசலுக்குச் சென்று ஜமாஅத்துடன் தொழுத இளமைக்கால அனுபவம் பெரும்பாலான ஆண்களுக்கு நிச்சயமாக இருக்கும். அந்தச் சின்ன வயது நிகழ்வு, இஸ்லாமியன் என்ற அடையாளத்தினைப் பெற்றுத் தந்தவற்றுள் ஒன்றாகவும் இருக்கும். ஆனால், அதே தொழுகையைக் கடமை என்றறிந்து, அது இறைவனுடனான உரையாடல் என்றுணர்ந்து, தாமாக விரும்பி நிறைவேற்றும்போது, அதன் பெறுமதி அளவற்றது. தொழுகையானது, மார்க்கத்தில் விதியாக்கப்பட்ட ஒன்றாக இருப்பதனால், …
Read More »இத்தா
2014 களில் தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “இத்தா” நாடகத்திற்காக கதைவசனம் எழுதிக் கொண்டிருந்தேன். அக்காலப் பகுதியில் பெரும்பான்மை மொழிக் காரியாலயத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்ததால், சக உத்தியோகத்தர்களுடன் அது பற்றிக் கலந்துரையாடும் சூழல் ஏற்பட்டது. எனக்குப் பக்கத்து இருக்கைக்குச் சொந்தமான பெண் உத்தியோகத்தர், நான் சிங்கள மொழியில் பேசினாலும்கூட எனக்குத் தமிழில் பதிலளிப்பார். அந்தளவுக்கு தமிழ்மொழிக்குப் பரீட்சயமானவர். எனது எழுத்து ஆர்வம் பற்றி ஏற்கெனவே, அறிந்து வைத்திருந்த அவர், புதிதாக என்ன …
Read More »அழகிய கடன் கொடுங்கள்
அந்தச் சில மாதங்கள் பொருளாதார ரீதியாக எங்களுக்குச் சோதனை தருவதாகவே இருந்தன. ஆனால், ஒரு தெளிந்த நீரோடையைப் போன்றதொரு நிம்மதியினை உள்ளூர உணர்ந்தேன். பல வருடங்களுக்கு முன்னர், என்னால் பெறப்பட்டிருந்த இடருதவிக்கடனின் மாதாந்த அறவீட்டுத்தொகையைக் குறுகிய சில மாதங்களுக்குள் செலுத்தி, அதிலிருந்து விரைவில் விடுபடுவதற்கான ஒரு முயற்சியே அது. சம்பள அதிகரிப்பிற்கான தேவையும் எதிர்பார்ப்பும் ஒருபுறமிருக்க, பல அசௌகரியங்களுக்கு மத்தியிலும் அந்தக் கடனை அடைக்க வேண்டும் என்ற எண்ணம் என்னைப் …
Read More »அழகிய விடுதலை
உறவினர்கள் கூடி அளவளாவிக்கொண்டிருந்த பொழுதொன்றில், எங்கேயோ நடந்து முடிந்த சுவாரஸ்யமான ஒரு சம்பவம் பேச்சின் இடையில் புகுந்துகொண்டது. ஒரு வீட்டுத் தலைவி பாதையால் கூவிச்சென்ற மீன்காரரிடம் தேவையானளவு மீனைக் கொள்வனவு செய்து அதைச் சமைக்கும் வேலைகளில் மூழ்கியிருக்கிறார். வீட்டுத் தலைவன் தூங்கிக் கொண்டிருந்ததால் தூக்கத்தை கலைக்க விரும்பாமல் அறையில் மாட்டிவிடப்பட்ட கணவரின் சட்டைப் பையில் கையைவிட்டதும் கிடைத்த தொகையில்தான் அந்தத் தேவையை முடித்திருக்கிறார். ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, சற்று நேரத்தில் வீட்டிற்கு …
Read More »அந்த மூன்று வார்த்தைகள்
தலைவலி, காய்ச்சல் போன்ற தாங்கமுடிந்த சில வேதனைகளை நோயாகக் கருதி நான் மருத்துவரிடம் சென்றதாக ஞாபகமில்லை. ஆனால், அவ்வப்போது தலைகாட்டிப்போகும் சில நோய் அடையாளங்கள் “முதுமையை நோக்கி நகர்கிறேன்” என்பதை அப்பட்டமாகக் கூறிப்போக வந்தாற்போல போல இருக்கும். சரி, முதுமை வரும்போது வரவேற்பது நாகரீகம் என்பதற்காக வைத்தியரை நாடாதிருக்க முடியுமா? பிறகு வைத்தியர்களெதற்கு? என்றெண்ணியவளாய், குளத்தினுள்ளிருந்து தலையை நீட்டிக் கொண்டிருக்கும் ஆமைகளைப் போன்று, எனக்குள் எட்டிப்பார்த்திருந்த சில பெயரறியா வருத்தங்களை …
Read More »சகவாழ்வு
பெரும்பான்மை உத்தியோகத்தர் ஒருவருக்கு சுகயீனம் ஏற்பட்டதனால், அவர் பல நாட்களாக காரியாலயத்திற்குச் சமூகமளித்திருக்கவில்லை. அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுப் பின் வீடு திரும்பிவிட்டார் என்ற தகவலையடுத்து, காரியாலய உத்தியோகத்தர்களிடம் அவருக்காக அறவிடப்பட்ட தொகையுடன் பெரும்பான்மைச் சகோதரர்களுள் இருவரோ அல்லது மூவரோ அவரது வீட்டிற்குச் சென்று சுகம் விசாரித்து வர எண்ணியிருந்தார்கள். ஒன்றரை மணித்தியாலங்கள் பயணித்துச் செல்ல வேண்டிய தூரத்தில் அவரது இல்லிடம் இருந்த காரணத்தினாலேயே அவ்வாறு முடிவாகியிருந்தது. ஆனால், …
Read More »