Featured Posts

Tag Archives: கதைகள்

கரை ஒதுங்கிய மீன்களும்… குரங்குகளாக மாற்றப்பட்ட மீனவர்களும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-13]

யூதர்கள் தவ்ராத் வேதத்தைப் பின்பற்றி வந்தார்கள். அவர்கள் சனிக்கிழமையில்  தொழில்செய்யக்கூடாது . கடற்கரையில் யூதர்கள் சிலர் வாழ்ந்து வந்தனர். மீன் பிடிப்பதுதான் அவர்களது தொழில் சனிக்கிழமை மீன் பிடிக்கக்கூடாது என்பது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அவர்களைச் சோதித்தான். சனிக்கிழமை தினத்தில் பெரும் திரளான மீன்கள் நீரின்மேல் வந்து தலைகாட்டும். இதனால் சிலர் பொருளாதார மோகம் கொண்டனர். ஆண்டவன் கட்டளையை தந்திரம் மூலம் மீற முற்பட்டனர். வெள்ளி இரவு வலை போட்டு, …

Read More »

சுலைமான் நபியும் ஹுத்ஹுத் பறவையும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-6]

“பறவைகளை அவர் அவதானித்து, ‘எனக்கு என்ன ஆயிற்று!, “ஹுத் ஹுதை” நான் காணவில்லையே! சமுகமளிக் காதோரில் அது ஆகி விட்டதா?’ எனக் கேட்டார்.” “நிச்சயமாக நான் அதைக் கடுமையாகத் தண்டிப்பேன். அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது (சமுகமளிக்காததற்கான) தெளிவான ஆதாரத்தை அது என்னிடம் கொண்டு வர வேண்டும். (என்றும் கூறினார்.)” “சிறிது நேரம் தாமதித்த அது (அவரிடம் வந்து), ‘நீங்கள் அறியாத ஒன்றை நான் அறிந்து, “ஸபஃ” (எனும் …

Read More »

எறும்பின் கதை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-5]

“சுலைமான், தாவூதுக்கு வாரிசானார். அவர், ‘மனிதர்களே! பறவைகளின் மொழி எமக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. மேலும், (தேவையான) அனைத்துப் பொருட்களும் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நிச்சயமாக இதுவே தெளிவான பேரருளாகும்’ எனக் கூறினார்.” “ஜின்கள், மனிதர்கள், பறவைகள் என்பவற்றிலிருந்து சுலைமானுக்கு அவரது படைகள் ஒன்று திரட்டப்பட்டு, அவர்கள் அணியணியாக நிறுத்தப்பட்டனர்.” “அவர்கள் எறும்புகளின் (வசிப்பிடமான) பள்ளத்தாக்கிற்கு வந்தபோது, ஓர் எறும்பு, ‘எறும்புகளே! சுலைமானும் அவரது படையினரும் தாம் உணராதவர்களாக உங்களை மிதித்துவிடாதிருப்பதற்காக உங்கள் …

Read More »

சிறுவர் இலக்கியத்தின் அவசியமும் வழிகாட்டுதலும்

சிறுவர்கள் கதை கேட்பதில் பெரிதும் ஆர்வம் உள்ளவர்களாவர். கடந்த காலங்களில் முதியவர்களுக்குக் கதை சொல்ல நேரம் இருந்தது. இப்போதெல்லாம் யாருக்கும் அதற்கு நேரம் இல்லை. சிறுவர்களின் கதை கேட்கும் ஆர்வத்தை டீவிகளும் கார்ட்டூன் படங்களும் தனித்து வந்தது. இப்போதெல்லாம் செல்போன், கம்ப்யூட்டர் கேம்கள் இருந்தால் பிள்ளைகளுக்கு உணவும் தேவையில்லை, உறக்கமும் தேவையில்லை, எந்த உறவுகளும் தேவையில்லை என்ற நிலையாகிவிட்டது. இதனால் பிள்ளைகள் தனிமை விரும்பிகளாக மாறி வருகின்றனர். மனித உறவுகளின் மகத்துவம் …

Read More »

மூஸா நபியும்… அதிசயப் பாம்பும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-3]

மூஸா (அலை) அவர்கள் ஒரு நபியாவார்கள். அவருக்கு ‘தவ்றாத்” வேதம் வழங்கப்பட்டது. அவர் இஸ்ரவேல் சமூகத்திற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதராவார்கள். அவர் ஒரு நாள் தன் மனைவியுடன் எகிப்துக்கு வந்து கொண்டிருந்தார். இடைநடுவில் இரவாகிவிட்டது. அப்போது தூரத்தில் வெளிச்சத்தைக் கண்டார். வெளிச்சம் தென்பட்ட பகுதியில் மக்கள் இருக்கலாம்; அவர்களைச் சந்தித்தால் ஏதேனும் உதவியைப் பெறலாம்; பயண உதவிக்கு நெருப்பு எடுத்து வரலாம் என எண்ணினார். எனவே, மனைவியை ஒரு இடத்தில் இருக்கச் …

Read More »

அழிக்கப்பட்ட யானைப்படை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2]

திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2 -அஷ்ஷெய்க்  S.H.M. இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்)- அன்புள்ள தம்பி தங்கைகளே ! உங்களுக்கு யானை என்றால் ரொம்பப் பிடிக்கும்தானே! ஆம், தரையில் வாழும் உயிரினங்களில் பெரியது யானை. அது பலம் மிக்கது. யானையின் பலம் அதன் தும்பிக்கையில் என்பார்கள். அதே போன்று எமது பலம் எமது இறை நம்பிக்கையில் உள்ளது! யானை படை அழிக்கப்பட்ட ஒரு யானைப்படையின் கதையை குர்ஆன் கூறுகின்றது. அது …

Read More »

காகத்தின் கதை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-1]

“(நபியே!) ஆதமின் இரு புதல்வர்களின் செய்தியை உண்மையாக அவர்களுக்கு எடுத்துரைப்பீராக! அவ்விருவரும் காணிக்கை நிறைவேற்றிய போது அவ்விருவரில் ஒருவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ‘நிச்சயமாக நான் உன்னைக் கொலை செய்வேன்” என (காணிக்கை ஏற்றுக் கொள்ளப்படாதவன்) கூறினான். அதற்கு (மற்றவர்), ‘பயபக்தியாளர்களிடமிருந்து தான் அல்லாஹ் ஏற்றுக்கொள்வான்’ எனக் கூறினார்.” “என்னைக் கொலை செய்வதற்காக நீ உன் கையை என் பக்கம் நீட்டினாலும் உன்னைக் கொலை செய்வதற்காக எனது …

Read More »

காலங்கள் மாறும்… (சிறுகதை)

படித்ததில் சிந்தனைக்குரியவை… இது நிஜம் அல்ல கதை! வீட்டில் கணவனும், மனைவியும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, திடீரென கதவு தட்டும் சப்தம் கேட்டது! “யார் கதவை தட்டுவது” என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த கணவர் கேட்டார். “நான் ஒரு ஏழை (மிஸ்கீன்) வந்துள்ளேன்” என்ற சப்தம் வந்தது. உடனே “இந்த கோழியிலிருந்து ஒரு துண்டை அந்த மிஸ்கீனுக்கு கொடுங்கள்” என்று மனைவி கணவரிடம் கூறினாள். …

Read More »

இவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை)

காலித்தின் அண்ணன் அவனுக்கு ஒரு புத்தம் புதிய காரை பெருநாள் பரிசாக அளித்திருந்தார். பெருநாளுக்கு முதல் நாள் காலித் அவனது அலுவலகத்திலிருந்து வெளியே வந்தபோது ஒரு சிறுவன் அவனது காரைச் சுற்றிச் சுற்றி வந்து ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பது அவனது தோற்றத்தியே தெரிந்தது.

Read More »

அது ஒரு காகம்! (நீதிக்கதை)

வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை ஓதிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.

Read More »