அல்லாமா அஹ்மத் பின் யஹ்யா அந்நஜ்மீ (ரஹ்) கூறுகின்றார்கள்:- “அல்லாஹ்வின் அடியானே! சத்தியத்திற்கு நீ உதவி செய்தது பற்றியும், அல்லது அதற்கு உதவி செய்யாமல் விட்டு விட்டது பற்றியும் அல்லாஹ்வின் முன்னிலையில் நீ வினவப்படுவாய். அப்போது, சத்தியத்திற்கு உதவி புரிந்தவனாக நீ இருந்துவிட்டால் (அல்லாஹ்வின் அருட்பேறுகளைக்கொண்டு) நீ நன்மாராயம் பெற்றுக்கொள்ளலாம். ஏனெனில், சத்தியத்திற்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ் இவ்வாறு வாக்குறுதியளித்துவிட்டான்: “நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால் அவன் …
Read More »Tag Archives: குர்ஆன் சுன்னா ஒளியில்
அல்லாஹ்வின் வல்லமையை சரியாகப் புரிந்தவன், பக்குவமாக வாழ்ந்து கொள்வான்! [உங்கள் சிந்தனைக்கு… – 011]
சஊதி அரேபிய நாட்டு அறிஞர், அஷ்ஷெய்க் அப்துர்ரஸ்ஸாக் பின் அப்துல் முஹ்சின் அல்பbத்ர் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- அல்லாஹ் நன்கு செவியேற்பவன்; அவன் பார்ப்பவன்; அவன் அனைத்தையும் நன்கறிந்தவன்; வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றில் அணுவளவும் அவனுக்கு மறைந்திருக்காது; ரகசியத்தையும், மறைத்து வைத்திருப்பவற்றையும் அவன் நன்கறிவான்; கண்களின் மோசடியையும், உள்ளங்கள் மறைத்து வைத்திருப்பவற்றையும் அவன் நன்கறிவான்; அனைத்தையும் அறிவால் அவன் சூழ்ந்திருக்கின்றான்; மேலும், அனைத்தையும் எண்ணிக்கையால் அவன் கணக்கிட்டும் வைத்துள்ளான் என்பன போன்ற …
Read More »உனது உள்ளம் நோயுற்றுள்ளது என்பதை நீ அறிந்து கொள்வது எப்படி? [உங்கள் சிந்தனைக்கு… – 010]
அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:- “உனது உள்ளம் தீமையை தீமையாகப் பார்த்து வெறுக்காமல், (நல்லதில்) நிலைத்திருக்காமல், நன்மையில் நிம்மதியடையாமல் இருப்பதாக நீ கண்டு கொண்டால் உன் உள்ளத்தில் நோய் இருப்பதாகப் புரிந்து கொண்டு அதைச் சீர்செய்ய முயற்சி செய்! இதே நேரம், உனது உள்ளம் நன்மையில் இன்புற்று அதைச் செய்வதோடு, அதன்பால் செல்வதற்கான வழியையும் காட்டி, தீமையை வெறுத்து, அதை விட்டும் தூரமாகியிருப்பதாக நீ கண்டு கொண்டால் …
Read More »அசத்தியத்தில் பிடிவாதமும், அறியாமைக்கால மூடத்தன வைராக்கியமும் நேர்வழிக்குத் தடையாக இருக்கும் காரணிகளாகும்! [உங்கள் சிந்தனைக்கு… – 009]
அல்லாமா ஸாலிஹ் பின் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் அவர்களுக்கு நேர்வழி கிடைப்பதை அல்லாஹ் தடுத்தேவிட்டான்! அவர் அதற்குத் தகுதியில்லாதவராக இருந்தார்; அதனால்தான் அதை விட்டும் அவர் தடுக்கப்பட்டார். நேர்வழி கிடைப்பது தடைபட்டுப் போவதற்குப் பல காரணிகள் இருக்கின்றன. அவற்றில், ‘அசத்தியத்தில் பிடிவாதம், அறியாமைக்கால மூடத்தனமான வைராக்கியம்’ஆகிய இரண்டும் முக்கியமானவைகளாகும். நேர்வழிக்காக ஒரு மனிதனுக்கு அல்லாஹ் அருள்பாலிக்காமல் இருப்பதற்கு இவையிரண்டும் காரணமாகி …
Read More »சிறந்த சந்ததிக்குத் தேவையான வழிமுறைகளைக் கையாள்வோம்! [உங்கள் சிந்தனைக்கு… – 008]
அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:- “தனது சந்ததி, சிறந்த சந்ததியாக இருப்பதற்கான காரணிகளைச் செய்ய வேண்டியது மனிதனுக்கு மிக அவசியமானதாக இருக்கின்றது. அவற்றில் ஒன்றுதான் அல்லாஹ்விடத்தில் (அதற்காக) அவன் பிரார்த்தனை செய்தலாகும்! அக்காரணிகளில் இது மிகப்பெரியதுமாகும். தனது வாலிபத்தை முழுமையாக அடைந்த ஒருவன் பின்வருமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவதை அல்லாஹ் இங்கு குறிப்பிடுகின்றான். ‘அவன் தனது வாலிபத்தை முழுமையாக அடைந்து, நாற்பதாவது வயதை அடையும்போது, என் …
Read More »நாவின் விபரீதங்களை நம்மில் பலர் உணர்வதில்லை! [உங்கள் சிந்தனைக்கு… – 007]
அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹ்) கூறுகின்றார்கள்:- “ஹராமான வழியில் உண்ணல், அநீதியிழைத்தல் , விபச்சாரம் செய்தல் , களவெடுத்தல், மதுபானம் அருந்துதல், தடுக்கப்பட்ட விடயங்களில் பார்வையைச் செலுத்துதல் போன்ற இன்னோரன்ன தீய விடயங்களை விட்டும் பாதுகாப்பாக இருக்கவும், அவற்றிலிருந்து விலகிக்கொள்ளவும் ஒரு மனிதனுக்கு முடியுமாகவும் இலகுவாகவும் இருக்கிறது! ஆனால், அவனது நாவசைவால் ஏற்படும் தீமைகளை விட்டும் பாதுகாப்பாக இருப்பது என்பதுதான் அவனுக்குக் கஷ்டமாகிப்போய் விடுகிறது! இது ஆச்சரியமான விடயமாகும்!! மார்க்கம், …
Read More »