தன் மடிபூத்த பூவுக்கும் வேண்டாம் இவ்வேதனை என்றென் தாய் பிரார்த்தித்தாளோ? பச்சை வீட்டில் துளிர்த்தும் நாமின்னும் பூக்கவேயில்லை அன்பே! தொட்டில் வாசனையற்ற மணவாழ்வு நம்மைச் சூழ்ந்து சுவாசிக்கின்றது புறக்கணிக்கும் திங்கள்களால் திராணியற்றுக் கிடக்கிறது என் தாய்மை மூவாறு வருடங்கள் நம்மைக் கடந்துபோன பொழுதுகள் சாட்சி நம் வாசலில் கொட்டித் துளாவப்பட்டிருக்கும் இந்த வெறுமை சாட்சி வைத்தியசாலையில் என் வயிற்றைக் கீறிய கத்திமுனையும் சாட்சி தினம் புன்னகைகள் வாங்கி வருகிறாய் என்னைச் …
Read More »