Featured Posts

Tag Archives: தராவீஹ்

பிக்ஹுல் இஸ்லாம் – 16 – ஸலாத்துல் வித்ர் – VIII

வித்ர் தொழுகையின் ரக்அத்துக்கள்: வித்ர் தொழுபவர் 1, 3, 5, 7, 9, 11 என எந்த ஒற்றைப்படையான எண்ணிக்கையிலும் தொழுது கொள்ளலாம். ஒரு ரக்அத்து: வித்ர் ஒரு ரக்அத்தும் தொழலாம் என்பதுதான் பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தாகும். அவர்களின் கருத்துக்களுக்குப் பின்வரும் ஆதாரங்களைச் சான்றாக முன் வைக்கின்றனர். ‘இப்னு உமர்(வ) அறிவித்தார். நபி(ச) அவர்கள் மேடை மீது இருக்கும்போது ‘இரவுத் தொழுகை பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று ஒருவர் …

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் – 15 – ஸலாத்துல் வித்ர் – VII

வித்ர் தொழுகையும் கியாமுல்லைல் தொழுகைக்குள் அடங்கக் கூடியதுதான். இருப்பினும் கியாமுல்லைல் இரவுத் தொழுகைக்கும் வித்ர் தொழுகைக்குமிடையில் சில வித்தியாசங்கள் உள்ளன. எனவே, ஹதீஸ்கலை, பிக்ஹ் கலை அறிஞர்கள் இரண்டையும் தனித்தனித் தலைப்பாக பேசியுள்ளனர். இந்த அடிப்படை யில்தான் இங்கு வித்ர் தொழுகை குறித்துத் தனித் தலைப்பாக நோக்கப்படுகின்றது. வித்ர் என்றால் ஒற்றைப்படை அதாவது 1, 3, 5, 7 என்ற எண்ணிக்கையைக் குறிக்கும். இந்த அடிப்படையில்தான் பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது. …

Read More »

ரமளான் மாதத்தில் நன்மைகளை அதிகம் பெற்றுத் தரத் கூடிய செயல்கள்!

ரமளானில் செய்யப்படும் அமல்களுக்கான கூலிகள் அபரிதமாகக் கணக்கிடப்பட்டு அல்லாஹ்வால் கொடுக்கப்படுகின்றன : அத்தகைய நற்செயல்களாவன : 1. திருமறையை ஓதுதல் : மகத்துவமிக்கவனான அல்லாஹ் கூறுகின்றான் : நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ – தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ – நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள். அவர்களுக்குரிய நற்கூலியை …

Read More »

இரவுத் தொழுகை இரண்டு இரண்டா?

ஒரு மனிதர் இரவுத் தொழுகையைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை இரண்டு, இரண்டாகும். சுப்ஹை பயந்தால் (ஒரு ரக்கத்து) வித்ரை தொழவும். புகாரி, முஸ்லிம். இந்த ஹதீஸின் மூலம் இரவுத் தொழுகை குறிப்பிட்ட எண்ணிக்கை இல்லாமல் எவ்வளவும் தொழலாம். என்று சில அறிஞர்களை மேற் கோள் காட்டி பேசியும், எழுதியும், வருவதை காணலாம்.

Read More »