சமயப்பற்றற்ற சீர்திருத்தக் கொடியை முதன் முதலாக ஏந்திய துருக்கி நாட்டை எடுத்துகொள்வோம். பயங்கரப் போராட்டத்துக்குப்பின் துருக்கி மக்கள் நேச நாடுகளின் கட்டுப்பாட்டுத் தளையிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டனர். ஆனால் அடுத்தகணமே துருக்கித் தலைவர்கள் அங்கு மேனாட்டு அடிப்படையிலான ஒரு ஜனநாயக அரசை அமைத்து விட்டனர். மக்கள் எதிர்பார்த்தது இதுவல்ல. ஆனால் இதனை எதிர்த்து அவர்களுக்கு ஒன்றும் செய்யமுடியவில்லை. இராணுவத்தின் பலமான ஆதரவோடு மேனாட்டு வாழ்க்கை முறையையும் பழக்கங்களையும் மட்டுமன்றி உடையைக்கூட அந்நாட்டுத் …
Read More »Tag Archives: நேற்று, இன்று, நாளை!
இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (24)
தற்போதைய தகராறுஇன்று ஒவ்வொரு முஸ்லிம் நாட்டிலும் தீர்வு காணப்படாத நெருக்கடி நிலை உருவாகியிருப்பதைப் பார்க்கின்றோம். மக்களும் அவர்களின் தலைவர்களும் ஒன்றுக்கொன்று எதிரான இரு அணிகளில் நிற்கின்றனர். தலைவர்கள் மக்களை மேனாட்டு வாழ்க்கை முறையைப் பின்பற்றுமாறு செய்யக் கங்கணங்கட்டியுள்ளனர். மேனாட்டு முறைகள், ஒழுக்கம், பழக்கவழக்கங்கள், மேனாட்டு நம்பிக்கைகளையும் கூட ஏற்கச்செய்ய மக்கள் தூண்டப்படுகின்றனர். மேனாட்டு ஒழுக்கம் கோட்பாடுகளே மக்களின் நடத்தையில் ஆதிக்கம் செலுத்த வேண்டும்; மேனாட்டு அளவுகோல் கொண்டே இஸ்லாம்கூட மதிப்பீடு …
Read More »இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (23)
இஸ்லாமியப் பாரம்பரியத்தில் முஸ்லிம் பெருமக்களுக்குள்ள ஆழ்ந்த பற்றைத் தணிப்பதற்கு அரசியல்வாதிகள் செய்யாத முயற்சி எதுவுமில்லை. மேனாட்டுப் பழக்க வழக்கங்களையும் முறைகளையும் மக்கள் பின்பற்றச் செய்வதற்குக் கடுமையாக வற்புறுத்தப்பட்டனர். தலைவர் எத்துணை தீவிரமாக முயன்றபோதிலும் மக்களுக்கு இஸ்லாத்தின் மீதிருந்த பற்றுக் குறையவில்லை. மக்கள் மீது இஸ்லாத்திற்கிருந்த பிடி தளர்ந்திருக்கலாம்; ஆனால் முற்றாக விடுபடவில்லை. இதற்குக் காரணம் குர்ஆனின் போதனைகள் மக்கள் உள்ளங்களில் ஆழப்பதிந்திருந்தமையும் அதன் கருத்துக்கள் அவர்களில் ஊடுருவிப் படர்ந்திருந்தமையுமாகும். வாழ்க்கையின் …
Read More »இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (22)
சிக்கலான பிரச்சனை உலமா ஒரு திசையிலும்,அரசியல்வாதிகள் எதிர்திசையிலும் இழுக்க இடையில் நின்று மக்கள் செய்வதறியாது தடுமாறுகின்றனர். அவர்கள் வாழ்க்கையின் நோக்கம் பற்றிய உணர்வை இழந்துவிட்டனர். அதனால் சமுகத்திற்குள் நடைபெறும் சச்சரவுகளுக்குப் பலியாகி விடுகின்றனர், அவர்களின் வாழ்க்கைக்குக் குறிப்பிட்ட இலட்சியம் எதுவும் இல்லாததனால் அவர்கள் அங்குமிங்கும் அலைகின்றனர். அவர்கள் தம் மூதாதையர் அதிர்ச்சி அடையத்தக்க கருத்து உடையவர்களாக இருக்கின்றனர். முற்கால முஸ்லிம்கள் அஞ்சி நடக்கக்கூடிய செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர். அவர்களின் ஒழுக்கம் …
Read More »இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (21)
துனூசியாவை எடுத்துக் கொள்வோம். துனூசியர் இஸ்லாத்திற்காகப் போரிட்டு வெற்றியீட்டினர். சுதந்திரம் பெற்ற பின் ரமழான் மாதத்தில் தொழிலாளர் நோன்பு நோற்றல் உற்பத்தி குறைந்து விடும் என்று போர்கிபா உறுதியாக மக்களுக்கு எடுத்துரைத்தார். இவ்வறிவுரையை வழங்குவதில் போர்கிபா கம்யூனிஸ்டுகளைப் பின்பற்றினார். ரஷ்ய முஸ்லிம்கள் இதே காரணத்திற்காகத் தான் ரமழானில் நோன்பு வைப்பதிலிருந்து தடுக்கப்பட்டனர். துருக்கி யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டபொழுது அதன் ஒரே நோக்கம் துருக்கியில் இஸ்லாம் வாழ வேண்டும் என்பதே என்று துருக்கி …
Read More »இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (20)
நான்காம் கட்டம்: விடுதலை பெற்ற பின் முஸ்லிம் நாடுகளின் நிலை. முஸ்லிம் நாடுகள் ஒவ்வொன்றாக விடுதலையடைந்த பொழுது எமது வரலாற்றின் நான்காம் கட்டம் உதயமாயிற்று. இக்காலப்பிரிவை உற்று நோக்கும் போது, சோர்வூட்டும் ஒரு பரிதாபக் காட்சி நம் கண்களை சந்திக்கின்றது. இப்புது அரசுகளின் அலுவல்களை நிர்வகித்து நடாத்தும் நிலையில் இருப்போர் அத்தனை பேரும் மேனாட்டுக் கலாச்சாரத்தில் முதல் நிலைப் பற்றுடையோராயும் இஸ்லாமிய பாரம்பரியங்களுக்கு சிறிதும் மதிப்பளிக்காதோருமாய் இருக்கக் காணப்பட்டனர். அவர்கள், …
Read More »இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (19)
மேலே விவரிக்கப்பட்ட நிகழ்ச்சிப்போக்கு, சில மாற்றங்களுடன் மேனாடுகளின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடி விடுதலையடைந்த எல்லா முஸ்லிம் நாடுகளிலும் இடம் பெற்றது. அல்ஜீரியாவில் பெரும் இடர்பாடுகளுக்கிடையே நீண்ட காலமாக மக்கள் கடுமையாகப் போராடினார்கள்.ஈவிரக்கமற்ற பிரெஞ்சு ஆட்சியாளர்கள் அவர்களைத் துன்புறுத்தியது மட்டுமன்றி சித்திரவதையும் செய்தனர். ஆனால் இக்கொடுமைகள் எதனாலும் அம்மக்களின் திடசங்கற்பத்தைக் குலைக்க முடியவில்லை. அவர்கள் தம் நீண்டகால தீவிரப் போராட்டத்தின் முடிவில் வெற்றியீட்டியபொழுது, அவர்கள் உயிரைப் பயணம் வைத்துப் போராடிப் பெற்ற …
Read More »இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (18)
விடுதலை இயக்கம் மேனாடுகளிலிருந்து பெற்ற அரசியல், பொருளாதாரக் கருத்துக்கள் ஒவ்வொரு முஸ்லிம் நாட்டிலும் விடுதலை இயக்கத்திற்கு ஊக்கமளித்தன. விடுதலைக்காக போராடி வெற்றி பெற்ற ஒவ்வொரு முஸ்லிம் நாட்டிலும் ஒரே வகையான நிகழ்ச்சித் தொடர் இடம் பெற்றது. எல்லா நாடுகளிலும் மேனாட்டுக் கல்வி பெற்றவர்களே விடுதலை இயக்கத்தின் முன்னணியில் நின்றனர். எல்லா நாடுகளிலும் இஸ்லாத்தின் பெயரால் வேண்டுகோள் விடுப்பது கொண்டே முஸ்லிம் பொதுமக்கள் செயல்படத் தூண்டப்பட்டனர். இப்போராட்டத்தின் பின் தோன்றிய ஆட்சி …
Read More »இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (17)
தலைமை மாற்றம் பொருளாதாரத்தின் தேவை, விவேகமும் பேரவாவுமிக்க முஸ்லிம் இளைஞர்கள் அனைவரையும் அரசாங்கக் கல்வி நிலையங்களுக்குத் துரத்தியது. அங்கு அவர்கள் பெற்ற கல்வி, அவர்களைத் தம் சொந்த பாரம்பரியத்திலிருந்தும் பிரித்து விட்டது. அவர்கள் மேனாட்டுக் கருத்துக்களை ஏந்தி வெளியேறியதோடு, தம் சொந்தக் கலாச்சாரத்தில் பெறுமதி வாய்ந்த எதுவுமில்லையென்றும் தம் சென்ற கால வரலாற்றில் தாம் பெருமைப்படக்கூடியது ஒன்றுமில்லை என்றும் நம்பினர். மேனாட்டு வாழ்க்கை முறையினை மிக நுணுக்கமாகப் பின்பற்ற அதன் …
Read More »இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (16)
அன்னிய ஆட்யின் கீழ் சிறுவரும் சிறுமியரும் பெற்ற புதுமுறைக் கல்வியினால் விளைந்த ஒழுக்கக் கேட்டை மிகைப்படுத்திக் கூறுவது கடினமாகும். அவர்கள் தம் சொந்த கலாச்சாரத்திற்குப் பதில் இழிந்த, பகட்டு மிக்க மேனாட்டுப் போலிக் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்கப்பட்டனர். மேனாட்டு அறிவு தான் மிக்க உண்மையானது, நம்பத்தக்கது என்றும் மேனாட்டு ஒழுக்க முறை தான் தூய்மை மிக்கதென்றும் மேனாட்டு நாகரிகமே மனித மூளை தோற்றுவித்த மிகச் சிறந்த நாகரிகம் என்றும் …
Read More »