Featured Posts

Tag Archives: மத்ஹபு

கருத்து வேறுபாட்டிற்கான காரணங்களும் அதைக் களையும் வழிமுறைகளும் (தொடர்-3)

– இஸ்மாயில் ஸலபி மனிதர்களின் இயல்புகளும் குணங்களும் மாறுபட்டவையாக இருப்பதாலும், புரிந்து கொள்ளும் ஆற்றல்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வினாலும், அறிவில் காணப்படும் தராதரத்தினாலும் கருத்து வேறுபாடுகளைத் தவிர்ப்பது என்பது சாத்தியமற்றதாகும். இதே வேளை குர்ஆன்-சுன்னாவுக்கு முக்கியத்துவமளிக்காமை, தனி நபர்களுக்குக் கூடுதல் முக்கியத்துவமளித்தல், மனோ இச்சை, ஊர் வழமை, தன்மானப் பிரச்சினை என்பவற்றை முன்னிலைப்படுத்துவதாலும் கருத்து வேறுபாடுகள் உறுவாகின்றன.

Read More »

கருத்து வேறுபாட்டிற்கான காரணங்களும் அதைக் களையும் வழிமுறைகளும் (தொடர்-2)

Also visit இக்கட்டுரை தொடர்பான மற்றொரு பதிவு: பீஜே தரப்பினர் பரப்பும் ஸஹீஹான ஹதீஸை உமர் ரலி- மறுத்தார் என்தற்கு இஸ்மாயில் ஸலஃபி அவர்களின் பதில் – இஸ்மாயில் ஸஃலபி “குர்ஆன்-சுன்னா”வைப் பின்பற்று வதையே தமது வாழ்வின் குறிக்கோளாகக் கொண்ட உத்தமர்களான உலமாக்கள் மத்தியில் கூட மார்க்க விவகாரங்களில், குறிப்பாக “பிக்ஹு”த்துறையில் கருத்து பல்வேறுபட்ட வேறுபாடுகள் நிலவின. இத்தகைய கருத்து வேறுபாடுகள் எழுவதற்கு சில நியாயமான காரணங்களும் இருந்தன. இவ்வகையில் …

Read More »

கருத்து வேறுபாட்டிற்கான காரணங்களும் அதைக் களையும் வழிமுறைகளும் (தொடர்-1)

– இஸ்மாயில் ஸலபி பல திக்குகளில் இருந்தும் இஸ்லாத்துக்கும் முஸ்லிம் உம்மத்துக்கும் சவால்கள் அம்பாக பாய்ந்துவரும் காலமிது. வேட்டைப் பொருளை நோக்கி வேட்டை மிருகங்கள் வேகமாகப் பாய்வது போல் பாயவும் முஸ்லிம் உம்மத்தைக் கடித்து குதறிப் போடவும் எதிரிகள் தருணம் பார்த்திருக்கும் நேரமிது. இக்கட்டான இக்காலப் பகுதியில் முஸ்லிம்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் சர்ச்சைகளாக, சண்டைகளாகப் பூதாகரமாக விஸ்வரூபமெடுத்துள்ளது ஆச்சரியமானதும் கவலைக்குரியதுமானதொரு நிகழ்வாகும்.

Read More »

ஒரு ஸஹாபி அறிவிக்கும் ஹதீஸைக் கொண்டு சட்டம் விதிப்பதற்கு மற்ற ஸஹாபிகளின் ஒப்புதலும் வேண்டும்.

ஒரேஒரு ஸஹாபியின் விளக்கத்தை மட்டும் வைத்து காரியங்களை நாம் தீர்மானித்து விடக் கூடாது. ஒரு அறிவிப்பாளர் அறிவிக்கும் ஹதீஸில் உள்ள நேருரையின் கருத்தும், அறிவிப்பாளர் அது விஷயத்தில் விளங்கியிருக்கும் விளக்கமும் வித்தியாசமாகக் காணப்பட்டால் ஹதீஸின் உரையைத்தான் நாம் எடுக்க வேண்டும். அவ்விஷயத்தில் ஸஹாபியின் விளக்கம் சான்றாக எடுக்கப்பட மாட்டாது.

Read More »

மஸ்ஜிதுன் நபவிக்குப் பயணமாகுதல்

நேர்ச்சைகள் செய்வது கடனைப் போன்றதாகும். கடனை திருப்பி ஒப்படைப்பது கட்டாயமாவதைப் போல நேர்ந்த கடன்களையும் திருப்ப வேண்டுமென அனைத்து இமாம்களும் கூறியிருக்கிறார்கள். எனவே நபியவர்களின் கப்றை நோக்கிப் பிரயாணம் செய்ய வேண்டுமென்று ஒருவர் நேர்ந்தால் அல்லது மற்ற நபிமார்கள், நன்மக்கள் ஆகியோருடைய கப்றுகளில் ஏதேனுமொன்றுக்குப் போக வேண்டுமென்று நேர்ந்தால் அதை நிறைவேற்றுதல் அவசியமில்லை. மாறாக அதை நிறைவேற்றினால் விலக்கப்பட்ட ஒரு அனுஷ்டானத்தைச் செய்தவனாகி விடுகிறான் என்று அனைத்து அறிஞர்களும் ஏகோபித்து …

Read More »

குறிப்பு (3)

இமாம் மாலிக் (ரஹ்) அவர்களுடைய தோழர்களின் பிரபலமான நூற்களிலிருந்து இத்தகைய சம்பவங்களை காழி இயாள் தமது நூலில் தொகுத்துத் தந்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் பலவீனமான பற்பல அறிவிப்பாளர்களால் சொல்லப்பட்ட ஒரு சம்பவத்தையும் தம் நூலில் எடுத்துக் கூறுகிறார்கள். அது வருமாறு: ‘மஸ்ஜிதுன் நபவியில் கலீபா அபூஜஃபருல் மன்ஸூர் அவர்கள் இமாம் மாலிக் அவர்களுடன் வாதிட்டுக் கொண்டிருந்தார்களாம். அந்நேரம் கலீபாவிடம் இமாம் அவர்கள் கூறினார்களாம்.

Read More »

குறிப்பு (2)

அல்லாஹ்விடம் அவன் படைப்பினங்களைக் கொண்டு ஆணையிட்டுப் பிரார்த்தித்தல் தடுக்கப்பட்டுள்ளது போல படைப்பினங்களிடம் சென்று அவற்றைக் காரணம் காட்டியும், அவற்றைப் பொருட்டாகக் கொண்டும் கேட்பது விலக்கப் பட்டிருக்கிறது. ஆனால் சிலர் இதற்கு அனுமதி வழங்கியிருக்கிறார்கள். சில ஸலபுஸ்ஸாலிஹீன்களுடைய குறிப்புகளையும் தம் தஃவாவுக்குச் சான்றாகக் கூறினார்கள். எனவே மக்களில் பலர் இம்மாதிரி துஆச் செய்வதைக் காணலாம். ஆனால் இது விஷயத்தில் நபிகளைப்பற்றி அறிவிக்கப்பட்ட ஹதீஸ்கள் அனைத்தும் பலம் குன்றியவையும், புனையப் பட்டவையுமாகும்.

Read More »

‘நபியைக் கொண்டு வஸீலா தேடுவது’ ஸஹாபாக்களின் கருத்து

நபித்தோழர்களான ஸஹாபிகளின் சொற்களில் காணப்படுகின்ற, மேலும் அவர்களின் பேச்சுகளில் பரிமாறப்பட்ட வஸீலா என்ற வார்த்தையின் தாத்பரியத்திற்கு வருவோம். ஸஹாபிகள் பற்பல சம்பவங்களைக் கூறும்போது நாயகத்தைக் கொண்டு அல்லாஹ்வை நெருங்கியதாகவும், அவர்களைக் கொண்டு அவனிடம் வஸீலா தேடியதாகவும் (உதவி கோரியதாகவும்) அல்லாஹ்வின்பால் முன்னோக்கியதாகவும் கூறுவார்கள். பற்பல இடங்களில் இப்படிக் காணப்படுகின்றன.

Read More »