மனைவி மீது கணவனுக்குரிய கடமைகள் கணவன் விஷயத்தில் பின்வரும் ஒழுக்கங்களையும் மேற்கொள்வது மனைவியின் மீது கடமையாகும். 1. பாவமல்லாத காரியங்களில் அவனுக்கு அவள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். “அவர்கள் (மனைவியர்) உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் பிறகு அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள். (4:34) ஒருவர் தன் மனைவியை படுக்கைக்கு அழைத்து அவள் செல்லவில்லையென்றால் அவன் அவள் மீது கோபம் கொண்டவனாக அன்றிரவைக் கழித்தால் காலையில் அவள் விழிக்கும்வரை வானவர்கள் …
Read More »Tag Archives: மரியாதை
புறம் பேசுதல்
முஸ்லிம்களைப் புறம் பேசுவதும் அவர்களின் கண்ணியத்திற்கும் மான மரியாதைக்கும் இழுக்காகப் பேசுவதும் பெரும்பாலான சபைகளுக்கு சர்க்கரைப் பொங்கலாக ஆகிவிட்டது. புறம் பேசுவதை அல்லாஹ் தடை செய்துள்ளான். அதை விட்டும் தன் அடியார்களை விலகியிருக்கச் செய்திருக்கிறான். மனித உள்ளங்கள் அருவருப்பாகக் கருதுகின்ற விதத்தில் அதற்கு ஓர் உவமானம் கூறியுள்ளான்: “உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவரேனும் இறந்து விட்ட தன் சகோதரரின் இறைச்சியை உண்ண விரும்புவாரா? …
Read More »25.ஹஜ்
பாகம் 2, அத்தியாயம் 25, எண் 1529 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனா வாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும் ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்ஃபாவையும் யமன் வாசிகளுக்கு யலம்லமையும் நஜ்த் வாசிகளுக்கு கர்னையும் இஹ்ராம் அணியும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் வசிக்குமிடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் மக்கவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் …
Read More »வஸீலாவின் மூன்றாவது வகை*
வஸீலாவின் மூன்றாவது வகை அனுமதிக்கப்படாத வஸீலாவாகும். அதுவே நபிமார்கள், ஸாலிஹீன்கள் இவர்களைப் பொருட்டாக வைத்தும், மேலும் இவர்களைக் காரணம் காட்டியும், இவர்களை கொண்டு ஆணையிட்டும் அல்லாஹ்விடம் வஸீலா தேடுதல். இத்தகைய வஸீலா முழுக்க முழுக்க விலக்கப்பட்டிருக்கிறது. இந்த வஸீலாவிற்கு திருமறையும், ஸஹீஹான ஹதீஸும் ஸஹாபாக்களின் தீர்ப்புகளும் இமாம்களின் கொள்கைகளும் எதுவுமே சான்றாகாது. இதை அனுமதித்தவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில உலமாக்கள் மட்டுமே. பெரும்பாலான அறிஞர்கள் சிருஷ்டிகளைக் …
Read More »குறிப்பு (3)
இமாம் மாலிக் (ரஹ்) அவர்களுடைய தோழர்களின் பிரபலமான நூற்களிலிருந்து இத்தகைய சம்பவங்களை காழி இயாள் தமது நூலில் தொகுத்துத் தந்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் பலவீனமான பற்பல அறிவிப்பாளர்களால் சொல்லப்பட்ட ஒரு சம்பவத்தையும் தம் நூலில் எடுத்துக் கூறுகிறார்கள். அது வருமாறு: ‘மஸ்ஜிதுன் நபவியில் கலீபா அபூஜஃபருல் மன்ஸூர் அவர்கள் இமாம் மாலிக் அவர்களுடன் வாதிட்டுக் கொண்டிருந்தார்களாம். அந்நேரம் கலீபாவிடம் இமாம் அவர்கள் கூறினார்களாம்.
Read More »காஃபிர்களின் கப்ரை ஸியாரத் செய்யலாமா?
இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட இன்னுமொரு ஸியாரத்தும் நபிகளார் மூலம் அறியப்பட்டுள்ளது. அதுவே காஃபிர்களின் கப்றை ஸியாரத் செய்வது என்பது. காஃபிர்களின் சமாதிகளை ஸியாரத் செய்வது குறித்து ஏராளமான ஹதீஸ்களை அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக இமாம்களான முஸ்லிம், அபூதாவூத், நஸாயி, இப்னுமாஜா போன்ற ஹதீஸ் அறிஞர்களின் தொகுப்புகளில் காணப்படுகின்றன.
Read More »