ஸுன்னத் வல் ஜமாத்தை விட்டு அப்பாற்பட்ட முஃதஸிலாக்களும், காரிஜிய்யா வகுப்பாரைச் சேர்ந்த வயீதிய்யாப் பிரிவினரும் மறுமையில் நபிமார்களுக்குரிய ஷபாஅத்தை மூமின்களின் பதவியை உயர்த்துவதற்காக மட்டுமே என்று ஒதுக்கி விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் பதவியை உயர்த்தும் விஷயத்தில் மட்டும்தான் மறுமையில் ஷபாஅத் செய்வார்களாம். இப்பிரிவினரில் மற்றும் சிலர் நபிகளின் ஷபாஅத்தை அடியோடு மறுக்கிறார்கள். பெருமானாருக்கு ஷபாஅத்தே இல்லையாம்.
Read More »Tag Archives: மறுத்தல்
வஸீலா ஷபாஅத் என்னும் வார்த்தைகளில் ஏற்பட்ட சந்தேகங்கள்
வார்த்தைகளைப் பற்பல கருத்துக்களுக்குப் பிரயோகிப்பதை அறியாதவர்களும், புரட்டியும், திருப்பியும் சொற்களைக் கூறக் கூடியவர்களுமான சிலரிடத்தில் வஸீலா, தவஸ்ஸுல், ஷபாஅத் போன்ற சில வார்த்தைகள் கிடைத்தபோது அவற்றிற்கு அல்லாஹ்வும், ரஸூலும், ஸஹாபாக்களும், தாபியீன்களும், இமாம்கள் ஆகியோரெல்லாம் விலக்கியிருந்ததற்கு மாற்றமான கருத்துக்களைக் கொடுத்து மக்களை தவறின்பால் திருப்பி விட்டார்கள். இதனால் பலர் தவறினார்கள். இவ்வார்த்தையின் உட்கருத்தைப் புரிந்து கொண்டவர்கள் மிகச் சிலரே. பொதுவாக கல்வி என்பது நன்றாக ஆராய்ந்து கற்று அறிந்து கொள்வதாகும். …
Read More »‘நபியைக் கொண்டு வஸீலா தேடுவது’ ஸஹாபாக்களின் கருத்து
நபித்தோழர்களான ஸஹாபிகளின் சொற்களில் காணப்படுகின்ற, மேலும் அவர்களின் பேச்சுகளில் பரிமாறப்பட்ட வஸீலா என்ற வார்த்தையின் தாத்பரியத்திற்கு வருவோம். ஸஹாபிகள் பற்பல சம்பவங்களைக் கூறும்போது நாயகத்தைக் கொண்டு அல்லாஹ்வை நெருங்கியதாகவும், அவர்களைக் கொண்டு அவனிடம் வஸீலா தேடியதாகவும் (உதவி கோரியதாகவும்) அல்லாஹ்வின்பால் முன்னோக்கியதாகவும் கூறுவார்கள். பற்பல இடங்களில் இப்படிக் காணப்படுகின்றன.
Read More »இஸ்லாத்தில் வஸீலா – தவஸ்ஸுலின் தாத்பரியம் என்ன?
வஸீலா என்பதிலிருந்து பிறக்கின்ற தவஸ்ஸுல் என்னும் சொல்லுக்கு மூன்று கருத்துக்களை அறிஞர்கள் வழங்குகின்றனர். அம்மூன்றில் இரு பொருள்களை எவராலும் மறுக்க இயலாது. அனைத்து முஸ்லிம்களும் ஓர்முகமாக ஏற்றிருக்கிறார்கள். அதில் ஒன்று: அசலில் தவஸ்ஸுல் என்பதற்குப் பொதுவாக ஈமான், இஸ்லாம், நற்கருமம் என்ற அர்த்ததைக் கொடுப்பது. அதாவது நபிகளைக்கொண்டு ஈமான் கொண்டு, அவர்களுக்கு வழிப்பட்டு, அல்லாஹ்வுக்கு கீழ்படிந்து நடப்பது. இப்படி நடந்து அவனை நெருங்குவது.
Read More »பாடம்-01 | இறை நம்பிக்கையை சாட்சி கூறுவதின் உண்மை அர்த்தம்
இறை நம்பிக்கையை சாட்சி கூறுவதின் உண்மை அர்த்தம். லா இலாஹ இல்லல்லாஹ் என்று இறை நம்பிக்கையை சாட்சி கூறுவதில் இரண்டு அம்சங்கள் அடங்கியுள்ளன. அவையாவன மறுப்பதும் உறுதிபடுத்துவதுமாகும். முதலாவது: எல்லாப் புகழுக்கும் உரிய அல்லாஹ்வுக்கன்றி வேறு யாருக்கும் அல்லது வேறு எதற்க்கும் தெய்வீகத் தன்மை கிடையாது என்று இறை நம்பிக்கையை சாட்சி கூறும் ஷஹாதா மறுக்கிறது. அல்லாஹ்வை அன்றி ஏனையவைகள் மலக்குகள், நபிமார்கள், ஏனைய மனித இனங்கள், சிலைகள், உலகின் …
Read More »