Featured Posts

Tag Archives: வழிபாடு

73. குர்பானி (தியாக)ப் பிராணிகள்

பாகம் 6, அத்தியாயம் 73, எண் 5545 பராஉ இப்னு ஆஸிப்(ரலி) கூறினார். (ஈதுல் அள்ஹா பெருநாள் உரையில்) நபி(ஸல்) அவர்கள், ‘இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்ய வேண்டியது யாதெனில், முதலில் நாம் (பெருநாள் தொழுகை) தொழுவோம்; பிறகு (தொழுகையிலிருந்து திரும்பிச் சென்று குர்பானிப் பிராணிகளை அறுப்போம். இதை செய்கிறவர் நம்முடைய வழியைப் பின்பற்றியவராவார். (பெருநாள் தொழுகைக்கு) முன்பே (குர்பானிப் பிராணியை) அறுக்கிறவருக்கு அது, தம் குடும்பத்தாருக்காக முன்கூட்டியே …

Read More »

[பாகம்-9] முஸ்லிமின் வழிமுறை.

மனதுடன் நடந்து கொள்ள வேண்டிய முறை. ஒரு முஸ்லிம் இம்மை, மறுமையின் ஈடேற்றம் தன்னுடைய மனதைத் தூய்மைப்படுத்துவதில் – பண்படுத்துவதில் தான் இருக்கின்றது என்று நம்ப வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: மனதைத் தூய்மைப்படுத்தியவர் திண்ணமாக வெற்றியடைந்து விட்டார். அதனை நசுக்கியவர் திண்ணமாகத் தோற்றுவிட்டார். (91:9-10) காலத்தின் மீது சத்தியமாக மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான். ஆனால் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டும் நற்செயல்கள் புரிந்து கொண்டும் மேலும் ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும் …

Read More »

மேன்மைக்குரிய சிருஷ்டிகள் அல்லாஹ்வுடைய பங்காளிகளல்ல.

மேன்மைக்குரிய மாபெரும் சிருஷ்டிகளில் நபிமார்களையும், ஸாலிஹீன்களையும் கொண்டு மட்டும் சத்தியம் செய்யலாம் என்றும், பிரார்த்திக்கலாம் என்றும் அனுமதிக்கின்றோமே தவிர எல்லா மக்களையும், அல்லது எல்லா படைப்புகளையும் கொண்டு அவர்களின் பொருட்டால் பிரார்த்திப்பதை நாங்கள் அனுமதிக்கவில்லையே – இது சிருஷ்டிகளில் ஸாலிஹீன்களையும், நபிமார்களையும் கொண்டு பிரார்த்திப்பதை அனுமதித்தவர்களின் வாதமாகும்.

Read More »

படைப்பினங்களைக் கொண்டு சத்தியம் செய்யலாமா? (2)

அதிய்யத்துல் ஊபி (ரலி) அவர்கள் கூறினார்கள்: அபூ ஸயீதுல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸில் வருகிறது: தொழுகைக்கு புறப்படும் ஒரு மனிதனுக்கு நபியவர்கள் கீழ்வரும் பிரார்த்தனையை சொல்ல வேண்டுமென்று கற்றுக் கொடுத்தார்கள். ‘இறைவா! உன்னிடம் பிரார்த்திப்பவர்களுக்காக உன் மீதுள்ள பாத்யதையை (ஹக்கைப்) பொருட்டாக வைத்துக் கேட்கிறேன். இதோ நான் நடந்து செல்லும் பாதையின் பொருட்டால் கேட்கிறேன். நான் வீட்டிலிருந்து அகங்காரத்தை நாடி புறப்பட்டதில்லை. அமானிதத்திற்காகவோ, பெருமையையோ, முகஸ்துதியையோ …

Read More »

ஜின் ஷைத்தான்களின் ஆள்மாறாட்டம்

முக்கியமாக ஒன்றை கவனிக்க வேண்டும். ஜின் வர்க்கம் மனித வர்க்கத்தைப் போன்றதாகும். ஜின்களில் காஃபிர்கள் உண்டு. இறைவனை மறுத்துப் பேசுகின்றோரும் உண்டு. முஸ்லிம்களும் உண்டு. ஜின்களில் பாவிகள், குற்றவாளிகள், அறிவீலிகள் மூடத்தனமாக இறைவனுக்கு வழிப்படுகிறவர்கள் மனிதர்களில் சிலர்களைப் போன்று குரு (ஷைகு)மார்களை விரும்புகிறவர்கள் இப்படி பலதரப்பட்ட அமைப்பிலும் ஜின்கள் இருக்கிறார்கள். (இது ஸூரத்துல் ஜின் பதினொன்றாம் ஆயத்திலும் சுட்டிக்காட்டப்படுகிறது) சந்தர்ப்பங்களில் ஜின்கள் குரு (ஷைகு)மார்களின் வேடங்களை அணிந்து மனிதனிடம் காட்சியளிக்கிறார்கள். …

Read More »

இருவகைப்பட்ட முஷ்ரிக்குகள்

அல்லாஹ்வும், அவனுடைய திருத்தூதரும் எவரைப் பற்றி இறைவனுக்கு இணைவைக்கும் முஷ்ரிக்குகள் என்று விளக்கினார்களோ அவர்களை இருவகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று: நூஹ் நபியின் சமூகத்திலுள்ளவர்களைப் போன்றோர். மற்றொன்று: நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சமூகத்தைச் சார்ந்தோரைப் போன்றவர்கள். இவ்விரு கூட்டத்தினரும் இறைவனுக்கு ஒவ்வொரு மாதிரியாக இணை வைத்தார்கள். நபி நூஹ் (அலை) அவர்களின் சமூகத்தார் (ஸாலிஹீன்களான) இறைவனின் நல்லடியார்கள் இறந்தால் அவர்களுக்குச் சமாதிகளைக் கட்டி உயர்த்தி அந்த சமாதிகளின் மீது தரித்திருந்து …

Read More »

இணை வைப்பவர்களும் ஷபாஅத்தும்

இறைவனுக்கு இணைவைப்போர் மலக்குகளையும், நபிமார்களையும், மற்றும் நன்மக்களின் பிம்பங்களையும் அமைத்து அவற்றிடம் சிபாரிசை வேண்டினார்கள். இப்பிம்பங்களைக் கொண்டு வெளிப்படையில் நாங்கள் சிபாரிசைத் தேடினாலும் உண்மையில் நேரடியாகவே இவர்களிடம் கேட்கிறோம் என்று வாதாடினார்கள். இந்தப் படைப்பினங்களுக்கு கல்லறைகளை அமைத்து வேண்டி நின்றார்கள். அவற்றுக்கு முன் மண்டியிட்டு விழுந்து சிபாரிசை வேண்டி வணக்கங்களும் புரிந்தார்கள். இம்மாதிரியான சிபாரிசை இறைவன் அழித்து இல்லாமலாக்கி விட்டான். இந்த ஷபாஅத்தை நம்பிய முஷ்ரிக்குகளை இழிவானவர்கள் என கண்டித்தான். …

Read More »