981. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் தாம் வியாபாரத்தின்போது ஏமாற்றப்படுவதாகக் கூறினார்; அதற்கு நபி (ஸல்) அவர்கள். ‘நீர் எதையேனும் விற்றால் அல்லது வாங்கினால் ‘ஏமாற்றுதல் இருக்கக் கூடாது!” என்று கூறிவிடுவீராக! (ஏமாற்றியது தெரிய வந்தால் உமக்கு வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமையுண்டு!)” என்றார்கள். புஹாரி :2117 இப்னு உமர் (ரலி).
Read More »வியாபாரத்தில் உண்மை பேசுவதின் சிறப்பு.
980. ”விற்பவரும், வாங்குபவரும் பிரியாமலிருக்கும்வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசி(க் குறைகளைத்) தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :2082 ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி).
Read More »வாங்குபவர் விற்பவருக்கு முறித்துக் கொள்ளலாம் என்ற உரிமை.
978. ”(எப்போது வேண்டுமானாலும் முறித்துக் கொள்ளலாம் என்று) உரிமை வழங்கப்பட்ட வியாபாரத்தைத் தவிர மற்ற வியாபாரங்களில் விற்பவரும் வாங்குபவரும் பிரியும்வரை ஒவ்வொருவரும் முறித்துக் கொள்ளும் உரிமை பெற்றிருக்கிறார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :2111 இப்னு உமர் (ரலி). 979. ”இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர் வியாபாரம் செய்தால் அவ்விருவரும் பிரியாமல் சேர்ந்து இருக்கும்வரை முறித்துக் கொள்ளும் உரிமை படைத்துள்ளார்கள். ஒருவர் மற்றவருக்கு முறித்துக் கொள்ளும் உரிமையை வழங்கி …
Read More »கைக்கு வந்து சேரும் முன்பு விற்காதே.
975. ”கைக்கு வந்து சேருவதற்கு முன் விற்கக் கூடாது!” என்று நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தது, உணவுப் பொருட்களுக்குத் தான்! (ஆயினும்) எல்லாப் பொருட்களுக்கும் இவ்வாறுதான் என்று கருதுகிறேன்!” புஹாரி :2135 இப்னு அப்பாஸ் (ரலி) 976. ”ஒருவர் உணவுப் பொருளை வாங்கினால் அது (முழுமையாக) அவரின் கைக்கு வந்து சேராமல் அதை அவர் விற்கக் கூடாது!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :2126 அப்துல்லாஹ் இப்னு …
Read More »சந்தைக்கு வரும் பொருளை இடைமறித்து வாங்காதே.
973. ”(சந்தைக்கு வரும்) வணிகர்களை இடைமறித்து வாங்காதீர்கள்! கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவர்களுக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :2158 இப்னு அப்பாஸ் (ரலி). கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!” என்பதன் பொருள் என்ன?’ என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன்; அதற்கு அவர்கள் ‘இடைத் தரகராக ஆகக்கூடாது! (என்பதுதான் அதன் பொருள்!)’ என பதிலளித்தார்கள்” என்று தாவூஸ் (ரஹ்) …
Read More »இறைத்தூதரின் அறிமுகம்!
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் என்று தாமே சொல்லிக் கொள்ளவில்லை என்றொரு தவறானக் கருத்து வைக்கப்படுகிறது. முஹம்மது நபியை, அல்லாஹ்வின் தூதர் என்று மக்களாக விரும்பி அழைத்துக் கொண்டனர் என்று இஸ்லாத்திற்கு எதிரானக் கருத்தும் பேசப்படுகிறது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம்மை அல்லாஹ்வின் தூதர் என்று சுய அறிமுகம் செய்து கொள்ளாமல், முஹம்மதை இறைத்தூதர் என்று மக்கள் எப்படித் தெரிந்து கொண்டிருப்பார்கள்? இது சாத்தியமா? என்று …
Read More »சந்தைக்கு வரும் வியாபாரிகளை வழியில் சந்தித்து சரக்கு வாங்காதே.
972. ”மடி கனக்கச் செய்யப்பட்ட ஓர் ஆட்டை யாரேனும் வாங்கி, அதைக் திருப்பிக் கொடுப்பதாக இருந்தால் அத்துடன் ஒரு ஸாவு பேரீச்சம் பழம் சேர்த்துக் கொடுக்கட்டும்! மேலும், நபி (ஸல்) அவர்கள் (சந்தைக்கு வரும்) வியாபாரிகளை எதிர்கொண்டு (வழியிலேயே சந்தித்து) சரக்குகளை வாங்குவதைத் தடுத்தார்கள்!” புஹாரி :2149 இப்னு மஸ்ஊத் (ரலி).
Read More »பிறர் வியாபாரப் பேச்சில் திருமணப் பேச்சில் குறுக்கிடாதே.
969. ”ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது!”என நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள். புஹாரி : 2139 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) . 970. ”(சரக்குகளை ஏற்றிக் கொண்டு) வாகனத்தில் வருபவர்களை எதிர்கொண்டு (வழியிலேயே சந்தித்து) சரக்குகளை வாங்காதீர்கள்! ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடாதீர்கள்! வாங்கும் நோக்கமின்றி விலையை ஏற்றிவிடவேண்டும் என்பதற்காகவே விலைகேட்காதீர்கள்! (ஆளமர்த்தி …
Read More »கருப்பையிலிருக்கும் கால்நடையை விற்கத் தடை.
968. ”நபி (ஸல்) அவர்கள் பிறக்காத உயிரினத்தை விற்பதற்குத் தடை விதித்தார்கள். அறியாமைக் கால மக்கள் இத்தகைய வியாபாரம் செய்து வந்தனர்! ‘இந்த ஒட்டகம் குட்டி போட்டு, அந்தக் குட்டிக்குப் பிறக்கும் குட்டியை நான் வாங்கிக் கொள்கிறேன்! (அல்லது விற்கிறேன்!)’ என்று செய்யப்படும் (ஹபல் இல் ஹபாலா) வியாபாரமே இது!” புஹாரி :2143 இப்னு உமர் (ரலி).
Read More »முலாமஸா முனாபதா முறை விற்பனைக்குத் தடை.
965. ”நபி (ஸல்) அவர்கள் ‘முனாபதா, முலாமஸா’ ஆகிய வியாபாரங்களைத் தடை செய்தார்கள்!” புஹாரி: 2146 அபூஹூரைரா (ரலி). 966. ”ஈதுல் ஃபித்ரிலும் (நோன்புப் பெருநாளிலும்) ஈதுல் அல்ஹாவிலும் (ஹஜ்ஜுப் பெருநாளிலும்) நோன்பு நோற்பதும் முலாமஸா, முனாபதா என்ற இரண்டு வியாபார முறைகளும் தடை செய்யப்பட்டுள்ளன!”என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். புஹாரி :1993 அபூஹூரைரா (ரலி). 967. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஆடை அணியும் முறைகள் இரண்டையும், வியாபார முறைகள் …
Read More »