Featured Posts

ஆண்குழந்தை ஆடையில் சிறுநீர் கழித்தால்….

1428. ‘(தாய்ப் பாலைத் தவிர வேறு) உணவு சாப்பிடாத என்னுடைய சிறிய ஆண் குழந்தையை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தேன். நபி (ஸல்) அவர்கள் அக்குழந்தையைத் தங்களின் மடியில் உட்கார வைத்தபோது, அக்குழந்தை நபி (ஸல்) அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்துவிட்டது. உடனே தண்ணீர் கொண்டு வரச் செய்து (சிறுநீர் பட்ட இடத்தில்) தெளித்தார்கள்; அதைக் கழுவவில்லை” . புஹாரி : 223 உம்மு கைஸ் (ரலி).

Read More »

நோயாளியின் வாயில் பலவந்தமாக மருந்தைப் புகட்டாதே

1427. நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது (மயக்கமடைந்தார்கள். அப்போது) அவர்களின் வாய் ஓரத்தில் நாங்கள் மருந்தூற்றினோம். அப்போது அவர்கள் எங்களை நோக்கி, ‘என்னுடைய வாயில் மருந்தூற்றாதீர்கள்” என்பது போல் சைகை செய்யலானார்கள். ‘நோயாளி மருந்தை வெறுப்பது போன்றுதான் (நபி அவர்களும் வெறுக்கிறார்கள். ஊற்ற வேண்டாம் எனத் தடை செய்யவில்லை)” என்று நாங்கள் சொல்லிக்கொண்டோம். அவர்களின் மயக்கம் (முழுமையாகத்) தெளிந்தபோது, ‘என் வாயில் மருந்தை ஊற்ற வேண்டாமென நான் தடுக்கவில்லையா? (அப்படியிருந்தும் ஏன் …

Read More »

இரத்தம் குத்தி எடுத்தல்,தேன் அருந்துதல்,சூடிட்டுக் கொள்தல், நோய் நிவாரணி.

1421. உங்கள் மருந்துகளில் ஒன்றில் நன்மை ஏதேனும் ‘இருப்பதாயிருந்தால்’ அல்லது ‘இருக்கிறதென்றால்’ நோயின் தன்மைக்கு ஏற்றபடி இரத்தம் உறிஞ்சும் கருவியால் (உடலில்) கீறுவது, அல்லது தேன் அருந்துவது, அல்லது நெருப்பால் சூடிடுவதில் தான் அது உள்ளது. (ஆயினும்,) சூடிடுவதை நான் விரும்பவில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5683 ஜாபிர் (ரலி). 1422. ”நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி, எடுத்தார்கள்; இரத்தம் குத்தி, உறிஞ்சி …

Read More »

முஹம்மத் (ஸல்) அவர்கள் மொழிந்தவை எவை?

சில உதாரணங்கள் மற்றவரிடம் கருணை காட்டாதவர்கள் மீது இறைவனும் தன் கருணையைப் பொழிவதில்லை! தான் விரும்புவதையே தன்னுடைய சகோதரருக்கும் விரும்பாதவரை ஒருவர் உண்மையான இறைநம்பிக்கையாளராக ஆக முடியாது! அண்டை வீட்டுக்காரர் பசியோடு இருக்க, தான் மட்டும் வயிறார உண்பவன் இறைநம்பிக்கையாளன் அல்ல! பிறரை(த் தாக்கி) கீழே வீழ்த்தி விடுபவன் வலிமையாளன் அல்லன். (மாறாக) கோபம் வரும்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே (உண்மையான) வலிமையாளன்! இறைவன் உங்களுடைய உடலமைப்பையும், தோற்றத்தையும் கொண்டு …

Read More »

அமர்நாத் முதல் சேதுக் கால்வாய் வரை!

காஷ்மீரில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் மதஉணர்வுகளை மதித்து, அரசியல் இலாப நட்டங்களைப் பாராமல் நேர்மையாக நிலம் ஒதுக்க முன்வந்து,கூட்டணியினரின் எதிர்ப்பால் ஆட்சி கவிழும் நிலையில், ஷ்ரைன் போர்டுக்குக் கொடுத்த நிலத்தைத் திரும்பப் பெற்று, சுற்றுலாத் துறையே அமர்நாத் யாத்ரீகர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கும் என்று அறிவித்த பிறகும் பலத்தை நிரூபிக்க முடியாமல் ஆட்சியை துறந்துள்ள முதல்வர் குலாம்நபி ஆசாத்தைப் பாராட்டியே ஆக வேண்டும். முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமான பாபர் மஸ்ஜிதை வன்முறையாக …

Read More »

[ரஹீக் 008] – அறியாமைக் கால அரபியச் சமுதாயம்

இதுவரை அரபிய தீபகற்பத்தில் நிலவிய அரசியல் மற்றும் மதக் கோட்பாடுகளை அறிந்தோம். இப்போது அதன் சமூக அமைப்பு, பொருளாதாரம் மற்றும் பண்பாடுகளைப் பற்றி சுருக்கமாகக் காண்போம். சமுதாய அமைப்பு அரபியர்களில் பலதரப்பட்ட வகுப்பினர் இருந்தனர். அவர்களில் உயர்மட்ட குடும்பங்களில் ஆண்கள் தனது குடும்பப் பெண்களுடன் உயர்வான நடத்தையைக் கொண்டிருந்தார்கள். அக்குடும்பங்களில் பெண்கள் சுய அதிகாரத்துடனும் கௌரவத்துடனும் திகழ்ந்தனர். பெண்களுக்கு மிகுந்த பாதுகாப்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது. பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க வாளேந்தி …

Read More »

ஓதிப் பார்க்க கூலி வாங்க அனுமதி.

1420. நபித்தோழர்களில் சிலர் ஒரு பயணத்தில் சென்றிருந்தபோது, ஓர் அரபிக் குலத்தினரிடம் தங்கினார்கள். அவர்களிடம் விருந்து கேட்டபோது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். அப்போது அக்குலத்தாரின் தலைவனை தேள் கொட்டிவிட்டது. அவனுக்காக அவர்கள் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், ‘இதோ! இங்கே வந்திருக்கக் கூடிய கூட்டத்தினரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் மருத்துவம் இருக்கலாம்!” என்று கூறினர். அவ்வாறே …

Read More »

பொது சிவில் சட்டம்

சென்ற மாதம் டெல்லியில் நடந்த பாஜக செயற்குழுவில் பேசிய ராஜ்நாத் சிங், “பொது சிவில் சட்டம்” கொண்டுவரப்பட வலியுறுத்தப்படும் என்றார். இந்திய முஸ்லிம்களைப் பற்றிய மிரட்சித்தீயில் இந்துத்துவா குளிர்காய, ராமர் கோவிலுக்கு அடுத்ததாக சங்பரிவரங்களால் அடிக்கடி உதிர்க்கப் படுவது “பொது சிவில் சட்டம்” என்ற செல்லரித்த முழக்கம். சிவில் பிரச்சினைகளுக்கு அந்தந்த மதச்சட்டங்களின்படி தீர்வுகாணும் உரிமை அனைத்து மதத்தவருக்கும் இந்திய அரசியல் சாசணம் வழங்கி உள்ளது.அரசியலமைப்பையும் அரசியல் சாசனத்தையும் தூக்கி …

Read More »

கண் திருஷ்டிக்கு ஓதிப்பார்க்க அனுமதி.

1418. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கண்ணேறுவி(ன் தீயவிளைவி)லிருந்து விடுபட ஓதிப்பார்த்துக் கொள்ளும்படி ‘கட்டளையிட்டார்கள். புஹாரி : 5738 ஆயிஷா(ரலி). 1419. நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் ஒரு சிறுமியைப் பார்த்தார்கள். அவளுடைய முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரை ஒன்று இருந்தது. நபி(ஸல்) அவர்கள், ‘இவளுக்கு ஓதிப்பாருங்கள். ஏனெனில், இவள் மீது கண்ணேறு பட்டிருக்கிறது” என்று கூறினார்கள். புஹாரி : 5739 உம்முஸலமா (ரலி).

Read More »

[ரஹீக் 007] – அரபியர்களின் சமய நெறிகள்

நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் சந்ததியினர் மக்காவில் குடியேறி அரபிய தீபகற்பம் முழுவதிலும் பரவிய காலம்தொட்டு அரபியர்களில் பெரும்பாலோர் இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தையே பின்பற்றி வாழ்ந்தனர். அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கத்தை முழுமையாகக் கடைபிடித்து வந்தனர். காலங்கள் செல்லச் செல்ல அல்லாஹ்வின் வழிகாட்டல்களையும் போதனைகளையும் சிறிது சிறிதாக மறக்க ஆரம்பித்தனர். எனினும், அவர்களிடையே ஓரிறைக் கொள்கையும் மார்க்கத்தின் உயர்ந்த நெறிகளும் ஓரளவு நிலைத்திருந்தன. குஜாஆ கோத்திரத்தின் …

Read More »