Featured Posts

உங்களுக்குத் தெரியுமா!

– பூமிக்கும், சூரியனுக்கும் உள்ள தூரம் 150 மில்லியன் கிலோ மீட்டர் (1 மில்லியன் என்பது 10 இலட்சம்) இந்த தூரத்தை ஒரு மணிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் செல்லும் ஒரு ஜெட் விமானத்தில் நிற்காமல் பயணித்தால் பதினேழு வருடங்களில் கடக்கலாம். – ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்குக்கூட கைரேகைகள் ஒரே மாதிரி இருக்காது.

Read More »

கடலில் உள்ள உயிரினங்களை மரணித்திருந்தாலும் உண்ணலாம்.

1261. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களில் குதிரைப்படை வீரர்களான முந்நூறு பேரை (ஒரு புனிதப் போருக்கு) அனுப்பினார்கள். அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் (ரலி) எங்கள் தலைவராக இருந்தார்கள். நாங்கள் குறைஷிகளின் வணிகக் குழுவை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். எனவே, நாங்கள் கடற்கரையோரமாக அரை மாதம் தங்கினோம். எங்களைக் கடுமையான பசி பீடிக்க, கருவேல மரத்தின் இலையை நாங்கள் புசித்தோம். எனவே, அந்தப் படைப் பிரிவு ‘கருவேல இலைப்படைப் பிரிவு’ என்று …

Read More »

நாட்டுக் கழுதை ,கோரைப்பற்களுள்ள வன விலங்குகள்.

1260. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்குத் தடை விதித்தார்கள். (வன) விலங்குகளில் கோரைப் பற்கள் உடைய எதையும் உண்ண வேண்டாமெனத் தடைசெய்தார்கள். புஹாரி : 5527 அபூதலபா (ரலி).

Read More »

பயிற்றுவிக்கப் பட்ட நாயைக் கொண்டு வேட்டையாடுதல்.

வேட்டையாடுதல், அறுத்தல், உண்ண அனுமதிக்கப்பட்டவைகள். 1254. நான், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் பயிற்சியளிக்கப்பட்ட நாய்களை (வேட்டைக்காக) அனுப்புகிறோம். (அவை வேட்டையாடிக் கொண்டு வருகிறவற்றை நாங்கள் உண்ணலாமா?)” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘அவை உங்களுக்காக (வேட்டையாடிக்) கவ்விப் பிடித்தவற்றை நீங்கள் சாப்பிடுங்கள்” என்று பதிலளித்தார்கள். நான், ‘(வேட்டைப் பிராணியை) அவை கொன்றுவிட்டாலுமா?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘(வேட்டைப் பிராணியை) அவை கொன்றுவிட்டாலும் சரியே” என்று பதிலளித்தார்கள். …

Read More »

பிரயாணம் வேதனையின் ஒரு பகுதி.

1251. ”பயணம் வேதனையில் ஒரு பகுதியாகும். அது ஒருவரின் உணவையும் பானத்தையும் உறக்கத்தையும் தடுத்து விடுகிறது. எனவே, ஒருவர் தம் தேவையை முடித்ததும் விரைந்து தம் குடும்பத்தாரிடம் செல்லட்டும்”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 1804 அபூஹுரைரா (ரலி). 1252. ”நபி (ஸல்) அவர்கள் தங்களின் வீட்டிற்கு இரவு நேரத்தில் வரமாட்டார்கள். காலையிலோ, மாலையிலோ தான் பிரயாணத்திலிருந்து வருவார்கள்.” புஹாரி : 1800 அனஸ் (ரலி). 1253. …

Read More »

நேர்வழியில் திகழும் ஒருகூட்டம்.

1249. என் சமுதாயத்தினரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் ஆணை (இறுதிநாள்) தம்மிடம் வரும் வரை (சத்தியப் பாதையில் சோதனைகளை) வென்று நிலைத்திருப்பார்கள். (இறுதி நாள் வரும்) அந்த நேரத்திலும் அவர்கள் மேலோங்கியவர்களாகவே இருப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :3640 முகீரா இப்னு ஷுஅபா (ரலி). 1250. என் சமுதாயத்தினரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்திய வண்ணமே இருப்பார்கள். அவர்களுக்கு இடைஞ்சல் செய்பவர்கள் அவர்களுக்குத் தீங்கிழைக்க …

Read More »

வாழ்க வெறும் தீவிரவாதம்!

* குர்ஆன் வன்முறையத் தூண்டுகிறது * சுவர்க்கத்தில் பெருமுலைக் கன்னியர்கள் கிடைப்பர் என்ற ஆசையில்தான் காஃபீர்கள்மீது முஸ்லிம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகிறார்கள் * இஸ்லாம் என்றால் அமைதி மார்க்கம் என்று சொல்கிறார்கள்;ஆனால் இஸ்லாமிய நாடுகளில்தான் (பாலஸ்தீன், ஈராக், ஆப்கானிஸ்தான்….) அமைதியின்மை நிலவுகிறது. * பாலஸ்தீன தீவிரவாதிகள் அப்பாவி இஸ்ரேலியர்கள் மீது அநியாயமாகத் தாக்குதல் நடத்துகிறார்கள். * காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய ராணுவத்திற்கு எதிராகக் குண்டு வைக்கிறார்கள் * * …

Read More »

அறப்போரில் உயிரைத் தத்தம் செய்தோர் பற்றி..

1247. ”ஒருவர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையைவிட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதைவிட்டும்) பிற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அவருக்குப் பாவமன்னிப்பும் அளிக்கிறான். இறைவழியில் குத்திக் கொல்லப்படுபவன், வயிற்றுப் போக்கில் இறப்பவன், தண்ணீரில் மூழ்கி மரிப்பவன், இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இறப்பவன், போரில் கொல்லப்படுபவன் ஆகிய ஐந்து பேர்களும் ஷஹீதுகள் …

Read More »

கடற்பயண அறப்போர்.

1246. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் பின்த்து மில்ஹான் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்பவராக இருந்தார்கள். அப்போதெல்லாம் அவர் நபி (ஸல்) அவர்களுக்கு உணவு தருவது வழக்கம். உம்மு ஹராம் (ரலி), உபாதா இப்னு ஸாமித் (ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (இவ்வாறே ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அவர் நபி (ஸல்) அவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு அவர்களின் தலையில் பேன் …

Read More »