Featured Posts

நூல்கள்

ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்களின் சிறப்பு (2)

1604. (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களுக்கு பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் அதைத் தொட்டுப் பார்த்து அதன் மென்மையைக் கண்டு வியப்படையலானார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இதன் மென்மையைக் கண்டு நீங்கள் வியக்கிறீர்களா? (சொர்க்கத்தில்) ஸஅத் இப்னு முஆத் அவர்களின் கைக்குட்டைகள் இதை விடச் சிறந்தவை அல்லது இதை விட மென்மையானவை ஆகும்” என்று கூறினார்கள். புஹாரி : 3802 அல்பராஉ (ரலி). 1605. நபி(ஸல்) …

Read More »

ஸஆது பின் முஆது (ரலி) அவர்களின் சிறப்பு.

1603. ஸஅத் இப்னு முஆத் அவர்களின் இறப்பிற்காக அர்ஷு இறைசிம்மாசனம் அசைந்தது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 3803 ஜாபிர் (ரலி).

Read More »

உபை இப்னு கஃப் மற்றும் அன்ஸார்கள் சிறப்பு.

1601. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நான்கு பேர் (கொண்ட குழுவினர்) குர்ஆனை (மனனம் செய்து) திரட்டினார்கள். அவர்கள் அனைவருமே அன்சாரிகள் ஆவர். 1. உபை இப்னு கஅப். 2. முஆத் இப்னு ஜபல். 3. அபூ ஸைத். 4. ஸைத் இப்னு ஸாபித் (ரலி) ஆகியோர் தாம் அவர்கள்” என்று அனஸ் (ரலி) கூறினார். நான் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘அபூ ஸைத் என்பவர் யார்?’ என்று கேட்டேன். …

Read More »

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் சிறப்பு.

1597. நானும் என் சகோதரரும் யமன் நாட்டிலிருந்து வந்து சில காலம் (மதீனாவில்) தங்கினோம் . அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களும் அவர்களின் தாயாரும் நபி (ஸல்) அவர்களிடம் (அடிக்கடி) செல்வதைக் கண்டு, அவர் நபி (ஸல்) அவர்களின் வீட்டாரில் ஒருவர் என்றே நாங்கள் கருதினோம். புஹாரி : 3763 அபூமூஸா (ரலி). 1598. எங்களிடையே அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) உரையாற்றினார்கள். அப்போது, ‘அல்லாஹ்வின் மீது …

Read More »

உம்மு சுலைம் (ரலி) அவர்களின் சிறப்பு.

1596. நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களின் வீட்டைத் தவிர தம் மனைவிமார்களின் வீடுகளல்லாமல் வேறெவருடைய வீட்டிற்கும் (அதிகமாகச்) செல்வதில்லை. அவர்களிடம் அது குறித்துக் கேட்கப்பட்டபோது, ‘நான் அவரிடம் இரக்கம் காட்டுகிறேன். அவரின் சகோதரர் (ஹராம் இப்னு மில்ஹான் (ரலி)) என்னோடு (என் பிரசாரப் படையினரோடு) இருந்தபோது (பிஃரு மவூனா என்னுமிடத்தில்) கொல்லப்பட்டார்” என்றார்கள். புஹாரி : 2844 அனஸ் (ரலி).

Read More »

ஜைனப் (ரலி) அவர்களின் சிறப்பு.

1595. நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘உங்களின் மரணத்திற்குப் பின் எங்களில் யார் முதலில் வந்து உங்களைச் சேர்வார்?’ எனக் கேட்டதற்கு, ‘உங்களுள் கை நீளமானவரே!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர்கள் ஒரு குச்சியை எடுத்துத் தங்களின் கைகளை அளந்து பார்த்தபோது ஸவ்தா (ரலி)வின் கைகளே மிகவும் நீளமானவையாக இருந்தன. (ஜைனப் (ரலி) இறந்த) பிறகுதான் கை நீளமானவர் என்பது, …

Read More »

உம்மு ஸலமா (ரலி) அவர்களின் சிறப்புகள்.

1594. நபி (ஸல்) அவர்களிடம் உம்மு ஸலமா (ரலி) அமர்ந்திருந்தபோது ஜிப்ரீல் (அலை) அவர்கள் (ஒரு மனிதரின் தோற்றத்தில்) வந்தார்கள். மேலும், நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் பேசத் தொடங்கி விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம், ‘இவர் யார்?’ என்று கேட்க, அவர்கள், ‘இது திஹ்யா (என்ற நபித்தோழர்)” என்று பதிலளித்தார்கள். (அப்போது அது ஜிப்ரீல் (அலை) அவர்கள் தாம்” என்று உம்மு ஸலமா …

Read More »

ஃபாத்திமா (ரலி) அவர்களின் சிறப்புகள்.

1591. நாங்கள் ஹுசைன் இப்னு அலீ (ரலி) – அல்லாஹ் அவர்களின் மீது கருணை புரிவானாக! – கொல்லப்பட்ட கால கட்டத்தில் யஸீத் இப்னு முஆவியாவைச் சந்தித்துவிட்டு மதீனாவுக்கு வந்தபோது, என்னை மிஸ்வர் இப்னு மக்ரமா (ரலி) சந்தித்தார்கள். அப்போது அவர்கள், ‘என்னிடம் தங்களுக்குத் தேவை ஏதுமிருக்கிறதா? அதை நிறைவேற்றிட எனக்குக் கட்டளையிடுகிறீர்களா? (நான் நிறைவேற்றித் தரத் தயாராக இருக்கிறேன்)” என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கு ‘அப்படி எதுவுமில்லை” என்று …

Read More »

ஆயிஷா (ரலி) அவர்களின் சிறப்புகள்.

1579. ”நான் உன்னைக் கனவில் இரண்டு முறை கண்டேன். உன்னைப் பட்டுத் (துணியின்) துண்டு ஒன்றில் (முக்காடிட்டபடி) கண்டேன். எவரோ, ‘இது உங்கள் மனைவி தான்; (முக்காட்டை) நீக்கிப்பாருங்கள்’ என்று கூற, (நானும் அவ்வாறே பார்த்தேன்.) அது நீயாகவே இருக்கக் கண்டேன். அப்போது நான், ‘இது (நீ எனக்கு மனைவியாவது) அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (விதிக்கப்பட்டு) உள்ளதெனில் அதை அவன் நடத்தி வைப்பான்’ என்று சொல்லிக் கொண்டேன்” என்று நபி (ஸல்) …

Read More »

இஸ்லாத்தில் இறைவழிபாடு குறித்த கண்ணோட்டம் என்ன?

இஸ்லாத்தில் இறைவழிபாடு குறித்து பலரும் தவறானதொரு கண்ணோட்டம் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, வழமையான சடங்குகளான தொழுகையை நிலைநிறுத்துவது, நோன்பு நோற்பது மற்றும் பன்றி இறைச்சி, மது உள்ளிட்ட போதை பொருட்கள் போன்ற விலக்கப்பட்டவைகளிலிருந்தும் விலகி இருப்பது ஆகியன மட்டுமே இறைவழிபாடு என்று கருதுகின்றனர். ஆனால், உண்மையில் இவையனைத்தும் இறைவழிபாட்டின் ஒரு பகுதியே! இந்த ஒரு பகுதியை மட்டுமே மக்கள் இஸ்லாமிய இறைவழிபாடு எனும் வரம்புக்குள் வைத்து கணிக்கின்றார்கள். மாறாக, இறைவிருப்பத்துக்கு உகந்த …

Read More »