சத்தியக்குரல் மாத பத்திரிகையின் ஆசிரியர் இம்தியாஸ் ஸலபி எழுதிக் கொள்வது. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இலங்கையின் மஹாகொடை அசம்பாவிதம் சம்பந்தமாக சகோதரர் இஸ்மாயில் ஸலபி எழுதிய கட்டுரை தொடர்பாக சகோதரர்கள் பல கருத்துக்களை எழுதிவருகிறார்கள். அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் அருள்புரிவானாக! இது தொடர்பாக நானும் ஒரு கருத்தை சொல்ல விரும்புகிறேன்.
முதலாவதாக,
TNTJ இணையத்தளத்தில் மஹாகொடை சம்பவம் தொடர்பாக வெளியிட்ட செய்தி அறிக்கை, உண்மையில் அது இலங்கை TNTJ தயாரித்த அறிக்கையல்ல. மாறாக srilankamoors.com தளத்தில் வெளியான செய்தி அறிக்கையாகும். இச்செய்தியை தயாரித்து அனுப்பியவன் நான் தான்.
UK-யிலுள்ள சகோதரர் Fahim என்பவர் என்னுடன் தெரடர்பு கொண்டு இந்த அசம்பாவிதத்தைப் பற்றிய செய்திகளை உடனே தயாரித்து அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். அப்போது நான் மஹகொடை மஸ்ஜித் வளாகத்தில் -களத்தில்- நின்று கொண்டிருந்தேன். உடனே அன்று இரவு நான் சேகரித்த செய்திகளை தயாரித்து அனுப்பிவைத்தேன். அவர்களும் அடுத்த நாள் இணையத்தளத்தில்ல் வெளியிட்டார்கள். நான் அறிந்த வரை இச்செய்திதான் முதன் முதலில் மேற்கண்ட நிகழ்வு தொடர்பாக இணையத்தில் (தமிழில்) வந்த செய்தியாகும். (அல்லாஹ் மிகவும் அறிந்தவன்) பிறகு அச்செய்தியை பலரும் download செய்து பலருக்கும் email செய்தார்கள். சத்தியக்குரலிலும் அதனை பிரசுரிக்கச் செய்தேன்.
நான் தயாரித்த செய்திகளை களவாடி- ஒருசில சொற்களை மாற்றி இவர்கள், களத்தில் நின்று தயாரித்த செய்தியை போல் பிரசுரித்திருக்கிறார்கள். அடுத்தனுடைய உரிமை பறித்து தன்னுடையதாக காட்ட விரும்பும் இவர்களின் (TNTJ-யின்) அனாகரீக போக்கை எப்படி வர்ணிப்பது? எனவே பொய்களை மூலதனமாக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு சகோதரர் கருத்து தெரிவிக்கும் போது இவர்கள் (TNTJ) தான்இச் செய்தியை முந்திக் கொண்டு களத்தில் நின்று தயாரித்தது போலவும் மற்றவர்கள் AC-யில் இருந்து செயற்படு போலவும் கூறியிருந்தார். இப்போதாவது உண்மையை புரிந்திருப்பார் என நம்புகிறேன்.
இரண்டாவதாக:
இலங்கையின் 50 வருடகால தஃவாவில் ஷிர்க்கிற்கு எதிராக பலமான உறுதியான பிரச்சாரம் இனனும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்துல் ஹமீத் பக்ரி (ரஹ்) அவர்களால் 1957ம் ஆண்டு முதன் முதலில் மவ்லூத் மற்றும் கந்தூரிக்கெதிராக விவாதம் நடாதப்பட்டது. பல கப்ருகள் உடைக்கப்பட்டு இறை இல்லம் புனிதப்படுதப்படுத்தப்பட்டது. மக்களுக்கு தெளிவுகள் கொடுக்கப்பட்டு மக்களின் கரங்களாலேயே இப்பணி செய்யப்பட்டது.
அப்துல் ஹமீத் பக்ரி (ரஹ்) அவர்களுடைய காலத்திற்குப்பின் 1970 ஆண்டுகளில் நிஸார் ஆலிம் குவத்தி (ரஹ்) காலத்தில் கொழும்பு நகரில் கத்தி குத்து ராதிபு மற்றும் மவ்லிதுகள் நடாத்தும் இடங்களில் இப்பிரசாரம் செய்யப்பட்டது.
1987ம் ஆண்டு பரகஹதெனியாவில் நடந்த மகாநாட்டில் மவ்லவி உஸ்தாத் மீரான் (ரஹ்) அவர்கள் மவ்லிதுகள் தரீகாக்கள் சம்பந்தமாக பகிரங்கமாக பேசியதுடன் இதனை ஆதரித்து பேசிக்கொண்டிருந்த அன்றைய எதிர்தரப்பு உலமாக்களுக்கு அவர்களுடைய பெயர்களை குறிப்பிட்டு பகிரங்க விவாதத்திற்கு அழைப்புவிடுத்தார். கந்தூரி நடந்து கொண்டிருந்த அந்த இடத்திற்கே நேரடியாக சென்று அது பற்றி சொல்லி விட்டு வந்தார். அப்போது நாங்கள் அவர்களுடைய மாணவர்களாக இருந்து படித்து கொண்டிருந்தோம்.
1992ம் ஆண்டு மவ்வலி அப்துல் வதூத் (ஜிப்ரி) உஸ்தாத் அவர்கள் வவுனியாவில் நடாத்திய விவாதத்தின் கருப்பொருளும் இது வாகத் தான் இருந்தது.
2000ம் ஆண்டு காலப்பகுதியில் மவ்லவி ஹாமித் பக்ரி அவர்களின் இலங்கை பயணத்தின் போது மவ்லூது மற்றும் தரீகா பற்றி எதிர்தரப்பின் கோட்டைக்கு பக்கத்தில் வேகத்துடனும் விவேகத்துடனும் ஆதாரப்பூர்மாகவும் பகிரங்கமாகவும் பேசியதன் விளைவாக எதிர்தரப்பினர் மக்களை சமாளிப்பதற்காக படாதபாடுபட்டார்கள். அதன் விளைவாக மாபெரும் விவாதம் கொழும்பில் நடாத்தப்பட்டது. இலங்கையின் தவ்ஹீத் வரலாற்றில் திருப்புமுனையாக இந்த விவாதம் அமைந்தது. இந்த விவாதத்தில் PJ உட்பட தமிழ்நாடு உலமாக்களும் இலங்கையின் உலமாக்களான மவ்வலி அப்துல் வதூத் (ஜிப்ரி) Dr.ரயீசுத்தீன்(ஷரயீ) Dr.அஷ்ரப் அஸ்ஹரி ஆகியோரும் கலந்து கொண்டனர். இது போல் விவாதங்கள் பல நடந்துள்ளன. பயமுறுத்தல்கள் அச்சுருத்தல்கள் கொலைகளங்களை சந்தித்துதான் இலங்கை உலமாக்கள் தஃவா களத்தில் நின்று வருகின்றனர். இங்கே வரலாறு கூறுவது எனது நோக்கமல்ல. இந்த வரலாற்றை திரிபு படுத்தி நல்லோர்கள் செய்த பணியை மறைத்து விட்டு பெயர் வாங்க துடிக்கும் தீயவர்களை அடையாளம் காட்டுவதே நோக்கம்.
இந்த வரலாறு TNTJ ஜ உருவாக்கி செயற்பட்டுக் கொண்டிருக்கும் PJ க்கு தெரியாததல்ல. அப்படியிருந்தும் TNTJ யின் இணையத்தளத்தில் மவ்லவி ரியாஸ் அவர்கள் தரீகா பற்றி பேசியது போல் இதுகாலவரையில் இலங்கை வரலாற்றில் எந்த ஆலிமும் கூறாத அளவுக்குப் பகிரங்கமாக உடைத்துக் குறிப்பிட்டார் என கூறுவது மேலே பார்த்து எச்சில் துப்பிக்கொள்ளும் நாற்றத்திற்கு சமனானதாகும். இந்த நாற்றத்தில் நறுமனம் தேட நினைக்கும் புனித வான்களை என்னவென்று சொல்வது?
ஒரு சிலர் தங்களுக்கென வேலை செய்யும் கூட்டத்தை உருவாக்கிட போலிகாரணங்களை கூறி முகவரி தேடிக்கொள்ள முயற்;;சிக்கிறார்கள். இவர்களுக்கோ இவர்களை இயக்குகின்றவர்களுக்கோ அது கிடைக்காது. எனவே பொய்களை மூலதனமாக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
– இம்தியாஸ் ஸலபி
Your (முஹம்மது சபீல் அகுரனை) comment moved to
https://islamkalvi.com/portal/?p=3068
SALAM ,IMTIAZ SALAFI,TQ FOR HISTORY EVENTS.I AGREE THAT THAT TNTJ IS WRONG AND U ARE SAYING THR TRUE.U WIN,
WHY? THOUHEETH BROTHERS NOT CO OPERATING WITH EACH. ALWAYS FIGHTING WITH EACH GROUP. LAST 20 YEARS THEY ARE TOGETHER AND ACHIEVED NOW WE ARE SEPERATE AND WE FAILED .
DEAR BROTHERS, PLS THINK AND GET TOGETHER AND WE WILL ACHIEVE OUR AIM,
ALLAH IS GREAT
All thawheed brothers and Sisters should understand one basic which is if we start to go towards organizations its wrong allah says in the glorious quran to hold the rope of allah which is the holy quran and sunnah
if v quit holding the ropes of TNTJ or JASM or any other organization that’s better !!!
why do pj is making a confution , what is the target of pj?
tntj is working for only to comment with others ,is not working
for propagate our islam.
Assalamu alikum
Again Moulavi Riyas addressed in Thihariya. He says now only Dawa has started in Sri-Lanka and we should not hesitate to speak truth at any place even at any cost. Good .. Good
Assalamu Alikum,
As I know in Weligama Moulavi Riyas has made several unethical comments, due to that there is many splited groups among the thawheed in this area. What I suggest is that all the thawheed moulavis are regrouping in one place and discuss which action should take against this type of addressing. Hope every one should reunited and do the dawa for the sake of Allah. May Allah show us the straight path forever.
ASSALAMU ALAIKUM
இந்த சம்பவம் தொடர்பாக நமது இணையதளத்திற்கு தகவல்,புகைப்படங்கள்,வீடியோ அனுப்பியவர்கள்:
லண்டன் வாழ் இலங்கை சகோதரர் ஒருவர்
ஷிஹானா சஃபி
ஹிகாம்
ரஸ்மி
tntj.net/?p=4410 CLICK COPY IN THE WEB PAGE
IF THE TNTJ SAYS THE NEWS CREATED BY TNTJ WRE THEY SAY CAN U SHOW ME …..THR IS ONE OPTION
SEE THE OPTION
உங்கள் பகுதி
உங்களின் ஆக்கங்கள் இலட்சக்கணக்கான மக்களை நமது இணையதளம் மூலம் உலகம் முழுவதும் சென்றடைய இன்றே எங்களுக்கு அனுப்புங்கள்!
உங்களின் ஆக்கங்கள்: கட்டுரைகள்
ஆய்வுகள்
பயனுள்ள தகவல்கள்
அரிதான தகவல்கள்
உலகில் நடைபெறும் செய்திகள்
முஸ்லிம்கள் தொடர்பான செய்திகள்
அரிதான புகைப்படங்கள் விடியோக்கள்
உலகளில் உள்ள ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கான தீர்வுகள்
அரிதான புகைப்படங்கள் விடியோக்கள்
ஆகியவைகளாக இருக்கலாம். அனுப்பப்படும் செய்திகள் ‘உங்கள் பகுதியில்’ அதற்குரிய பிரிவில் அனுப்பியவரின் பெயருடன் வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்
உங்கள் ஆக்கங்களை அனுப்ப Click Here
TIS IS MATTER GIVE BY TIS SITE THR SO MANY PROBLEM PUT SOME USEFUL ARTICLE
WASALAM
Dear brother in Islam!
The common thing is that our prominent ulamas have done such a good thing for the Isam, one and only way of life to whole man kind, and saved the Islam from its dangerous path and also handover ed to us(so called ulamas)the responsibility to maintain.
But what is happening now? each and every one quarrel and separate for something.
So brothers!
Don’t think who did, think what they have done good and try to keep up and constant improvement.
May allah give a right way to alll……………….
இதில் ஈடுபட்ட கயவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டது ? ஏதேனும் தகவல் உண்டா?