Featured Posts

ஆண் பெண் அல்லாத அலிகள் பற்றி….

1407. என்னிடம் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) ‘அலி’ ஒருவர் அமர்ந்திருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த ‘அலி’, (என் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவிடம், ‘அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணந்துகொள். ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு (சதை மடிப்புகளு)டனும், பின்பக்கம் எட்டு (சதை மடிப்புகளு)டனும் வருவாள்” என்று சொல்வதை செவியுற்றேன். (இதைக் கேட்ட) நபி (ஸல்) …

Read More »

இதுதான் இஸ்லாம் (பகுதி-5)

தொழுகையை நிலை நாட்டுதல் இறைவனுக்குச் செய்யும் வணக்க வழிபாடுகளில் ஒன்று தொழுகை. படைத்த இறைவனைப் போற்றிப் புகழ்ந்து துதித்து நம் வேண்டுதல்களைப் பணிவுடன் அவனிடம் கோரும் ஒரு வழிதான் தொழுகை. 2:45. மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.

Read More »

சபையில் அமரும் ஒழுக்கம்.

1405. ‘நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் நபி (ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் சென்றார். அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களின் சபையில் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்தச் சபையில் ஓர் இடைவெளியைக் கண்டபோது அதில் அமர்ந்தார். மற்றவரோ சபையின் பின்னால் அமர்ந்து வெட்கப்பட்டு (கடைசியில் உட்கார்ந்து)விட்டார். எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றார். எனவே …

Read More »

சந்தேகம் நீங்க தன் மனைவி எனக் கூறுதல்.

1404. நபி (ஸல்) அவர்கள் ரமலானில் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருக்கும்போது அவர்களைச் சந்திக்க நான் செல்வேன். சற்று நேரம் அவர்களுடன் பேசிவிட்டு எழுவேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னுடன் எழுந்து பள்ளியின் வாசல்வரை வருவார்கள். உம்மு ஸலமா (ரலி)வின் வாசலை அடைந்தபோது அன்ஸாரிகளைச் சார்ந்த இருவர் நடந்து சென்றனர். நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், ‘நில்லுங்கள்; இவர் (என் …

Read More »

குர்ஆன் எதைக் குறித்துப் பேசுகின்றது?

இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்ட இறுதி இறைவாக்கே திருக்குர்ஆன்! இதுவே, ஒவ்வொரு முஸ்லிமுடைய நம்பிக்கை மற்றும் வாழ்வியல் நடைமுறையின் தோற்றுவாயாக அமைந்திருக்கின்றது. மனித இயல்போடு தொடர்புடைய ஒவ்வொரு பணபைக் குறித்தும் அது பேசுகின்றது. பகுத்தறிவு, கொள்கை விளக்கம், வணக்கவழிபாடு, சட்டம் என்று அவற்றை பட்டையலிட்டுக் கொண்டே செல்ல முடியும். ஆனால், திருக்குர்ஆனின் அடிப்படைக் கொள்கை படைப்பாளனுக்கும், படைப்பினங்களுக்கும் இடையிலான உறவைக் குறித்தே! அதேவேளை, ஒரு நல்ல சமுதாயம் உருவாகிடவும், மனித ஒழுங்குகள் சீர்பெறவும், …

Read More »

தற்பெருமை

உரை: மௌலவி U.K. ஜமால் முஹம்மத் மதனீ வெள்ளி மேடை, துறைமுக பள்ளி வளாகம் ஜுபைல், சவுதி அரேபியா நாள்: 06.06.2008

Read More »

துஆ – பிரார்த்தனை

உரை: மௌலவி K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி வெள்ளி மேடை, துறைமுக பள்ளி வளாகம் ஜுபைல், சவுதி அரேபியா நாள் : 23.05.2008

Read More »

இதுதான் இஸ்லாம் (பகுதி-4)

இஸ்லாத்தின் தூண்கள் ஐந்து இஸ்லாம் ஐந்து தூண்களால் நிர் மாணிக்கப்பட்டுள்ளது . அதனை உத்தம திரு நபி (ஸல்) அவர்கள் கூறுவதாவது: இஸ்லாம் ஐந்து தூண்களால் நிர் மாணிக்கப்பட்டுள்ளது. 1- வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை என்பதுடன் முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் அடிமையாகவும் அவனின் தூராகவும் இருக்கிறார் என்று சாட்சியம் கூறுவது.

Read More »

திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் – ஓர் ஒப்பீடு (பகுதி-6)

திருக்குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதா? திருக்குர்ஆனிலுள்ள கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசிகளின் வரலாறுகள் பலவும் பைபிளில் சொல்லப்பட்ட தகவலை ஒத்து அமைந்திருக்கிறது, எனவே திருக்குர்ஆன் பைபிளைத் தழுவி முஹம்மது நபி (ஸல்) அவர்களால் காப்பியடிக்கப்பட்டதே! என்ற கிறித்தவ சபைகள் பிரச்சாரம் செய்து வருகின்றன. இதில் எந்தளவுக்கு உண்மை உள்ளது என்பதைப் பின்வரும் சான்றுகளின் அடிப்படையில் ஆராய்வோம்.

Read More »

அந்நியப் பெண்ணுடன் தனித்திருக்கும் போது….

1403. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்” என்று கூறினார்கள். புஹாரி :5232 உக்பா பின் ஆமிர் (ரலி).

Read More »