Featured Posts

உலக பொருளாதாரம்

மனிதர்களின் பெரும்பாலான நேரத்தைப் பொருளாதாரச் சிந்தனைகளும், செயல்களும் ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றன. பொருளை சம்பாதிப்பது, செலவிடுவது, சேமிப்பது, வாரிசுகளுக்கு விட்டுச் செல்வது போன்ற சிந்தனைகளில் மனிதன் மூழ்கிக் கிடப்பதை காண முடிகின்றது. உலகளாவிய அளவில் வறுமை, வேலையின்மை, பஞ்சம், பற்றாக்குறை, ஏற்றத்தாழ்வு போன்றவற்றினால் பல நாடுகள் துயருற்றிருக்கின்றன. மனிதர்களை பெருமளவில் கொல்லுகின்ற ஆயுதங்கள் உற்பத்தி, போதைப்பொருள் உற்பத்தி, ஓழுக்கக்கேடான செயல்கள், அடக்குமுறை போன்ற பல காரணங்களினால் மனித குலத்தை பெரிதும் …

Read More »

இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் பெயரில் வதந்தியும், அதற்கான மறுப்பும்

அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். அவனே தன் தூதரை நேர்வழியுடனும் உண்மையான மார்க்கத்துடனும் அனுப்பினான். அல்லாஹ்வின் அன்பும் அருளும் அவன் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் அவர்களை இறுதி வரை பின் பற்றும் அடியார்கள் மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக. இக்கட்டுரையின் நோக்கம் இஸ்லாமியப் பேரறிஞர் அப்துல் அஸீஸ் இப்னு அப்தில்லாஹ் இப்னு பாஸ் அவர்களின் பெயரால் பரப்பப்பட்டு வரும் பொய்ச் செய்திக்கு மறுப்பளிப்பதாகும்.

Read More »

தலைமைத்துவத்துக்கு முடிந்தவரையில் கட்டுப்படுதல்.

1222. நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களின் கட்டளைகளைச்) செவியேற்றுக் கீழ்ப்படிந்து நடப்போம் என உறுதிமொழி (பைஅத்) அளிக்கும்போது அவர்கள், ‘உங்களால் முடிந்த விஷயங்களில்” என்று சொல்வது வழக்கம். புஹாரி :7202 இப்னு உமர்(ரலி).

Read More »

பெண்கள் எவ்வாறு பைஅத் வழங்கினர்.?

1221. ”நம்பிக்கையாளர்களே! (இறைமறுப்பாளர்களிலுள்ள) பெண்கள் நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்து) உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்” எனும் (திருக்குர்ஆன் 60:10 வது) வசனம் முழுமையாக அருளப்பெற்ற காரணத்தினால் தம்மிடம் ஹிஜ்ரத் செய்துவரும் இறைநம்பிக்கை கொண்ட பெண்களை நபி (ஸல்) அவர்கள் சோதித்துவந்தார்கள். இறைநம்பிக்கை கொண்ட அப்பெண்களில் (இணைவைக்கமாட்டோம்; திருடமாட்டோம்; விபசாரம் புரியமாட்டோம்’ என்று) இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புதல் அளிக்கிறவர் சோதனை செய்யப்பட்டுவிட்டார் என்று முடிவு செய்யப்பட்டது …

Read More »

அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிய உறுதிமொழி.

1218. ஹிஜ்ரத் செய்வதற்கான உறுதிமொழியைப் பெறுவதற்காக (என் சகோதரர்) அபூ மஅபத் (முஜாஹித்) அவர்களை அழைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஹிஜ்ரத், அதற்குரியவர்களுக்குக் கடமையாகி (நிறைவேறி) முடிந்துவிட்டது. இனி, இஸ்லாத்தின் படி நடந்திடவும் அறப்போர் புரிந்திடவும் தான் இவரிடம் நான் உறுதிமொழி பெறுவேன்” என்று கூறினார்கள். 1219. மக்கா வெற்றி கொள்ளப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள், ‘ஹிஜ்ரத் இனி கிடையாது. ஆயினும், ஜிஹாதும் …

Read More »

எது இஸ்லாம்?

இஸ்லாம்! இது ஒரு புதிய மதமோ, தத்துவமோ அல்ல! மாறாக, ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைவன் தனது இறைத்தூதர்கள் மூலமாக அனுப்பி அருளிய சத்திய வாழ்க்கை நெறியே அது! உலகில் வாழும் ஐவரில் ஒருவருக்கு இஸ்லாம் ஒரு மார்க்கம் மட்டுமல்ல, மாறாக, அவர்களின் முழுமையான வாழ்க்கை வழிமுறையுமாகும்.

Read More »

பைஅத்து ரிழ்வான் பற்றி…

1213. ஹுதைபிய்யா தினத்தன்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், ‘பூமியிலிருப்பவர்களில் நீங்களே சிறந்தவர்கள்” என்று கூறினார்கள். (அப்போது) நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். இப்போது (மட்டும்) எனக்குக் கண்பார்வை தெரியுமானால் அந்த (ரிள்வான் உறுதிப் பிரமாணம் நடைபெற்ற) மரத்தின் இடத்தைக் காண்பித்திருப்பேன்” என்று கூறினார்கள். புஹாரி : 4154 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி). 1214. (பைஅத்துர் ரிள்வான் என்னும் உறுதிப்பிரமாணம் நடைபெற்ற) அந்த மரத்தை பார்த்திருக்கிறேன். பின்பு …

Read More »

குழப்ப காலத்தில் விழிப்புணர்வுடன் இருத்தல்.

1211. மக்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் நபி அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சிய காரணத்தால் தான் (அதைப் பற்றிக் கேட்டேன்.) நான், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும், தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம். அப்போது அல்லாஹ் (இஸ்லாம் எனும்) நன்மையை எங்களிடம் கொண்டு வந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கிறதா?’ …

Read More »