”விரும்பியவர் நம்பட்டும், விரும்பியர் மறுக்கட்டும்” என்று திருக்குர்ஆன் (18:29) கூறுவதால், இஸ்லாத்தில் மனித அபிப்ராயத்துக்கு எள்ளளவும் எள் முனையளவும் இடமேயில்லை. இறைவன் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று கற்பனையால் இறைவனைப் படைப்பவர்களுக்கு, இறை வேதங்களை தமக்கு தோதாக திரிப்பதும், நீக்குவதும், சேர்ப்பதும் சாத்தியம். அனைத்தையும் ஏக இறைவன் ஒருவனே படைத்து மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாக வேதங்களை வழங்கினான் என நம்பிக்கை கொண்டவர்களுக்கு, இறை வேதங்களில் மனிதக் கருத்தைத் திணிப்பது துளியும் சாத்தியமில்லை. ஐம்புலன்களுக்கும் …
Read More »அபூ முஹை
நரகத்தில் பெண்கள்-ஓர்விளக்கம்
நரகத்தில் பெண்களே அதிகம். ”இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்- 2911) உலகத்தின் அனைத்து செல்வங்களையும் விட சிறந்தது நல்ல மனைவி என்று, பெண்களைப் பற்றி சிலாகித்து கூறும் இஸ்லாம், ”நரகத்தில் பெண்களே அதிகம்” என்றும் கூறுகிறது. (இவ்வுலக வாழ்க்கையில் தவறுகளுக்கான தண்டனைகள் அனுபவிக்கப்படும் இடமே நரகம் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை.) ”நான் …
Read More »அரபியர்களின் கடவுட்க் கொள்கை!
அரபிகள் ஒருபோதும் கடவுள் நம்பிக்கையற்றவர்களாய் இருந்ததில்லை. ஆனால் ஏகனும், எவர் தயவும் – தேவையும் அற்றவனுமான இறைவன் தன்னைப் பற்றி எவ்வாறு குறிப்பிடுகின்றானோ, அந்தப் பொருளில் இறைவனை அவர்கள் புரிந்து கொண்டிருக்கவில்லை! அவனுக்கு இணை கற்பித்துக் கொண்டிருந்தார்கள். இறைவனை எப்படி கண்ணியப்படுத்த வேண்டுமோ அவ்வாறு கண்ணியப்படுத்தாதவர்களாகவும், எவ்வாறு அவனை வணங்கிட வேண்டுமோ அவ்வாறு வணங்காதவர்களாகவும் இருந்து வந்தார்கள். தமது முன்னோர்களில் நல்லடியார்களாகவும், கண்ணியத்திற்குரியவர்களாவும் திகழ்ந்தவர்களுக்கோ, அல்லது வானவர்களுக்கோ நினைவுச் சின்னங்களாகத் …
Read More »தமிழக முதல்வரின் சிந்தனைக்கு.
தமிழக முதல்வர் கலைஞரின் சிந்தனைக்கு. ஐந்தாவது முறையாக தமிழக முதல்வராகப் பதவி ஏற்றுள்ள டாக்டர் கலைஞர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவரது ஆட்சி நல்லாட்சியாகச் சிறந்து விளங்க இணை துணை இல்லாத ஏகன் இறைவனிடம் பிராரத்திக்கிறோம். ஆட்சி நல்லாட்சியாக அமைவதாக இருந்தால் பதவியேற்றுள்ள முதல்வர் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்ததாக வேண்டும். அப்படிப்பட்ட நடவடிக்கைகளால் உடனடியாக பலன் கிடைக்காவிட்டாலும், எதிர்காலத்தில் தமிழகம் தலை நிமிர்ந்து, சிறந்து விளங்க அது வழிவகுக்கும், தமிழகச் …
Read More »வே(ா)ட்டு!
ஓட்டு போட்டோம்விரலில் கரி பூசப்பட்டதுமுகத்தில் பூசுவதற்குமுன்னோட்டமாக! ஆதரவு கேட்டுமனிதரைத் தவிரமற்ற எல்லோரும்வந்தார்கள் விலை மதிப்பற்ற வாக்குகளைவலையில் விழவைக்கபணப் பெட்டகம் தேவையில்லைபிரியாணி பொட்டலமே போதும்! வாகனத்தில் ஒலியெழுப்பும்சிவப்பு விளக்கு சொன்னது…அபாயம் வருகிறதென்று…நம்பவில்லை…மனுகொடுக்கமந்திரியை…தேடிய போதுதான் தெரிந்ததுஅவர் –சிவப்பு விளக்கில் இருப்பது. இப்போதெல்லாம்பிறர்தலை எடுத்துப் பழகியவர்தான்தலைவராகதலையெடுக்க முடிகிறது… மெழுகு வர்த்தியைப் போல்இருப்போம் என உருகினார்கள்தேவையில்லைஎங்கள் மேனியை எரிக்கும்தீப்பந்தமாய்மாறாதிருந்தாலே போதும்! கவிதை: ஆளூர் ஷா நவாஸ்
Read More »அணுகுண்டு வீசப்பட்டால்..
சென்னை மாநகர் மீது அணுகுண்டு வீசப்பட்டால்… ஒருநாள் காலை 8மணி வெயில் லேசாக வரத்தொடங்கியிருக்கிறது. சென்னை சுறுசுறுப்பாக புதிய நாளைத் தொடங்குகிறது. செவ்வாய்கிழமை, லட்சக்கணக்கானவர்கள் வேலைக்கும், பள்ளி அல்லது கல்லூரிக்கும் கிளம்பிக்கொண்டு இருக்கின்றனர். வழக்கமான வேலை நாள். சரியாக 8மணிக்கு சென்னை சென்டரல் ரயில் நிலையத்தின் மீது ஓர் அணுகுண்டு போடப்படுகிறது. 16கிலோ டன் குண்டு – கிட்டத்தட்ட ஹிரோஷிமா மீது போடப்பட்ட குண்டைப் போன்றது. 1998 மே 11ம் …
Read More »வேண்டாம் அணுத்திமிர்!
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் புஷ் ஆகிய இருவரும் இரு நாடுகளின் ஒப்பந்தமாக அணுசக்தி பிரச்சனை பற்றிய பேச்சு வார்த்தையில் நல்லதொரு உடன்படிக்கையை எட்டியிருக்கிறார்கள். – அணுசக்தியை ஆக்கப் பூர்வமாக பயன்படுத்தி, அழிவை நோக்கி அகிலத்தை மிரட்டும் அணு(ஆயுத)த்திமிர் ஏற்படாதவரை – இது மிகவும் வரவேற்கத்தக்க, நாட்டுக்கு நலனைத்தரும் நல்ல விஷயம்தான் – உலக நாடுகள் அனைத்தும் அணுத்திமிரை கைவிட வேண்டும். அன்புடன்,அபூ முஹை அணு பேரழிவு…ஆயுதமாக …
Read More »பணம் பணமறிய அவா!
கவிதை வடித்தவரை அறிய அவ! பிடிஎஃபில் எழுதி, நண்பர்களிடமிருந்து வந்த இக்கவிதையை எழுதியவர் யார்? என்று தெரியவில்லை. ஏற்கெனவே வலைப்பூவில் பதிந்திருக்கலாம் தெரிந்தவர்கள் இருந்தால் அறியத்தரவும் நன்றி! அன்புடன்,அபூ முஹை அன்னை தேசத்து அகதிகள் நாம்எண்ணெய் தேசங்களில் எரிந்து கொண்டிருக்கிறோம்! அடி வயிற்றில் பதிந்த வறுமைக் கோடுகளின்மர்மக் கரங்கள் அறித்தெறிந்து வீசியஜீவனுள்ளமாமிசத் துண்டுகள் நாம்! கண் தெரியா தேசத்தில் விழுந்துகாயங்கள் தலை சாய்த்துக்கண்ணீர் வடிக்கிறோம்! மொத்தக் குடும்பத்தையும் முதுகில் சுமந்துஇன்னும் …
Read More »இஸ்லாமும் – அடிமைகளும்.
அமெரிக்காவும் மேற்கத்திய தீவுகளும் கைப்பற்றப்பட்ட பின்னர் முன்னூற்று ஐம்பது ஆண்டுகள் அடிமை வியாபாரப் போக்குவரத்துக்கள் நடந்து வந்தது. ஆப்பிரிக்காவின் கடற்கரை ஓரங்களுக்கு அதன் உட்பகுதியிலிருந்து கருப்பர்கள் பிடித்து வரப்பட்டு கப்பலில் ஏற்றுமதி செய்யப்பட்டார்கள். எனவே அந்தக் கடற்கரைகள் ”அடிமைக் கடற்கரைகள்” என்றே அழைக்கப்பட்டன. ஒரே ஒரு நூற்றாண்டிற்குள் (1680லிருந்து 1786வரை) குடியேற்ற நாடுகளுக்காக பிரிட்டானியர் அடிமைப்படுத்திய மனிதர்களின் எண்ணிக்கை, ஆங்கிலேய நூலாசிரியர்களின் கணக்குப்படி இரண்டு கோடி ஆகும். ஓராண்டு காலத்தில் …
Read More »நம்பிக்கையில், நானும் – தங்கமணியும்.
எந்தவொரு நம்பிக்கையும் இல்லாமல் இந்த உலகம் இயங்குவதில்லை. விளை நிலத்தைப் பண்படுத்தி, விதைத்துவிட்டு – விளையுமென்ற நம்பிக்கையில் விவசாயி இருக்கிறான். விளைந்த தானியங்களை கொள்முதல் செய்ய வேண்டுமென்ற நம்பிக்கையில் வியாபாரி இருக்கிறான். வியாபாரிகளிடமிருந்து பொருட்களை வாங்க வேண்டுமென்ற நம்பிக்கையில் பொது மக்கள் இருக்கிறார்கள். தொழிலாளர்கள், தொழிலதிபர்கள் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் சம்பந்தப்பட்ட தொழில்கள், துறைகளை நம்பியே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அன்றாட வாழ்க்கையில் பிச்சைக்காரனும் தனக்குக் கிடைக்கும் …
Read More »