தமிழ் சகோதரர்கள் யுனிகோடுக்கு மாற வேண்டும் என்பதற்காக மிகுந்த சிரமத்துடன் 3 வகை தட்டச்சு முறைகள் எ-கலப்பை 2.0 வெளியீட்டில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதற்காக “தமிழா” நண்பர்களுக்காக தமிழ் சமுதாயம் நன்றிகடன் பட்டிருக்கிறது. இதில் ஒரு சில விஷயங்களை அடுத்த பதிவில் சேர்த்தால் இன்னும் பொழிவுடன் காணப்படும். நான் எ-கலப்பை 2.0 பாமினி வெளியீட்டை யுனிகோடு தட்டச்சு முறைக்காக பயன்படுத்துவதால் அதில் கண்ட விஷயங்கள்: i)பாமினி தட்டச்சு உபயோகிப்பவர்கள், யுனிகோடில் நேரடியாக …
Read More »பொதுவானவை
யூசுஃப் இஸ்லாமுக்கு நஷ்டஈடு!
யூசுஃப் இஸ்லாமுக்கு நஷ்ட ஈடு வழங்கும் பிரிட்டிஷ் பத்திரிக்கைகள்! (08-03-05 அன்று பதிந்த இக்கட்டுரை அன்றே காணாமல் போய்விட்டது. அதனால் மீண்டும் பதிகிறேன்.) இரண்டு ஆங்கில பத்திரிக்கைகள் இவ்வளவு என்று குறிப்பிடாமல் தாங்கள் யூசுஃப் இஸ்லாம் எனும் பிரபல பாடகருக்கு இழப்பீடு கொடுத்ததாக தெரிவித்தன. முன்பு கேட் ஸ்டீவன்ஸ் என்ற பெயரில் புகழ்பெற்ற பாப் இசைப்பாடகராக இருந்தவர் யூசுஃப் இஸ்லாம். அவர் இஸ்லாத்தை தழுவியபின் இஸ்லாமிய அழைப்புப்பணியில் ஈடுபட்டு உலகெங்கும் …
Read More »த்சு..த்சு.. பாவம் மோனிகா!
“காதல் பரிசாக கிளின்டன் கொடுத்த 20 மில்லியன் டாலரை ஹிலாரி கிளின்டன் அபகரிக்க பார்க்கிறார். எனவே சிறிது நாட்களுக்கு உங்களிடம் அதனை அனுப்பி பாதுகாக்கலாம் என்றிருக்கிறேன். பாதுகாத்து தந்ததற்காக பாதி தொகை உங்களுக்கு தரப்படும்” என்று யாராவது மோனிகா லெவின்ஸ்கியின் பெயரில் மின்னஞ்சல் அனுப்பினால் யாரும் ஆச்சரியப்பட மாட்டார்கள். காரணம், மின்னஞ்லை திறந்தால் இதுபோன்ற செய்திகளும், வைரஸ் அட்டாச்மென்ட்டுகளும், வயாகரா அழைப்புகளும்தானே வருகிறது.இதுபோல் மின்னஞ்சல்களை அடிக்கடி பெற்றுக்கொள்கிறவர்களுக்கு ஆயிரத்துடன் ஒன்று …
Read More »திருமதி அரஃபாத்திடமிருந்து ஒரு மின்னஞ்சல்…
சென்ற வாரம் எனது inbox-ல் வந்து கிடந்த ஒரு மின்னஞ்சலின் அனுப்புனர் பெயரைப் பார்த்து நான் மயக்கம் போட்டு விழாத குறைதான். அந்தக் கடிதம் இப்படி தொடங்குகிறது; “பன்னாட்டு ஊடகங்கள் மூலம் உலக நடப்புகளை, முக்கியமாக மத்திய கிழக்கு, பாலஸ்தீன விவகாரங்களை அறிந்து கொண்டிருந்தீர்களெனில் இந்த கடிதம் உங்களுக்கு ஆச்சரியத்தை தராது” என்று தொடங்கி, பிறகு அறிமுகப் படலம். “ நான் திருமதி. சுஹா அரஃபாத், சமீபத்தில் பாரிஸில் மரணமடைந்த …
Read More »நூல் அறிமுகம்: இயற்கை மதம்
நூல் அறிமுகம்: இயற்கை மதம் ஆசிரியர்: அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி (ரஹ்)முதன் முதலாக திருமறையை எளிய தமிழில் மொழிபெயர்த்து அதன் போதனைகள் முறையான மார்க்கக் கல்வி பெறாத சாதாரண தமிழ் முஸ்லிம்களையும் சென்றடையச் செய்த இந்த மார்க்க அறிஞருக்கு தமிழ் முஸ்லிம் சமுதாயம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல. இந்தப் பெரியார் எழுதிய பிற நூற்களுள் ஒன்றே இந்த ‘இயற்கை மதம்’. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு …
Read More »My Opinion..
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) நான் படித்த நாகூர் ரூமி நூல்கள்: நூல் 1: இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம் இஸ்லாம் பற்றிய தவறான கருத்துக்களை களைய வேண்டி அதற்கு எளிய அறிமுகத்தை கடின முயற்சியுடன் நாகூர் ரூமி அவர்களால் எழுதப்பட்ட நூல் தான் இது. ஒரு ஹதீஸ் நினைவிற்கு வருகிறது- ஒரு பெரிய யுத்தத்திற்கு பின்னர் பெருமானார் தனது தோழர்களிடத்தில் ‘பெரிய போருக்கு தயாராகுங்கள்’ என்று கூறினார்கள்- …
Read More »புத்தாண்டும் பெருநாளும்!
மூன்று ஆண்டுகளுக்குமுன் நோன்புப் பெருநாளுக்கு முதல் நாள் என் சீன நண்பர் ஒருவர் என்னிடம் வந்து “புத்தாண்டு வாழ்த்துக்கள்!” என்றார். இடையிடையில் சில சிறு குறிப்புகள் கொடுத்தால்தான், மேற்கொண்டு தொடரும் உரையாடலை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். சிறுகுறிப்பு 1: சீனர்கள் தங்கள் புதுவருட பிறப்பை மிக விமரிசையாக கொண்டாடுவார்கள். அவர்களுக்கு வேறு சில திருநாட்கள் இருந்தாலும், புதுவருடம்தான் தலையாயது. பெரும்பான்மையான சீன நிறுவனங்கள் ஒரு வாரம், பத்து நாட்களுக்கு …
Read More »ஹதீஸ் ஒரு சிறு விளக்கம் – 2: தபகாத் இப்னு ஸஃது
திண்ணையில் வெளியான எனது முந்திய ஹதீஸ் பற்றிய கடிதத்தை ‘குழப்பவாதம்’ என்றும் ‘திசை திருப்பும் முயற்சி’ என்றும் தனது 27.1.05 பதிவில் குற்றம் சாட்டிய நேசகுமார், அதே பதிவில் ‘ஹதீதுகளைப்பற்றி சொல்லியிருக்கும் சலாஹ¤தீன் தபகாத் பற்றியும் கொஞ்சம் ஆய்ந்து எழுதியிருந்தால் நன்றாகயிருந்திருக்கும்’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அதைத்தொடர்ந்து மார்க்க அறிஞர்களை கலந்தாலோசித்து திரட்டிய தகவல்களை இங்கு முன்வைக்கிறேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மறைவுக்கு பிறகு சுமார் 100 ஆண்டுகளுக்கு …
Read More »இயற்கையின் சீற்றம்! இறை சித்தமா?
கோலாலம்பூரிலிருந்து வெளிவரும் இஸ்லாமிய தமிழ் மாத இதழான ‘நம்பிக்கை’ பிப்ரவரி 05 இதழில் வெளியான தலையங்கம். சுனாமி. நமது அகராதியில் புதிதாக புகுந்துவிட்ட ஒரு சொல்.நில நடுக்கத்தால் உருவாகும் கடல் பிரளயத்தை உணர்த்தும் ஜப்பானிய வார்த்தை. உச்சரிப்பில் ஆபத்தை நுகர முடியவில்லை. அனுபவம் அவ்வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில் கதிகலங்க வைக்கிறது. இந்தியப் பெருங்கடல் வட்டத்திற்குட்பட்ட நாடுகளின் கடலோரப் பகுதிகளில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்புப் பேரிடர் செய்திகள் வந்த வண்ணமுள்ளன. ஆங்காங்கே …
Read More »நேசகுமாரின் விளக்கங்களுக்கு பதில்!
நபிகள் நாயகம் – அன்னை ஜைனப் திருமணம் குறித்து நேசகுமார் தனது வலைப்பதிவில் நீண்ட விளக்கம் ஒன்று அளித்திருக்கிறார். இந்த நீண்ட கடிதம் எழுதும்முன் எனது முந்திய திண்ணை கடிதத்தை அவர் சற்று கவனமாக படித்திருக்கலாம். இந்த விவாதத்தில் அவர் தரப்பு வாதங்கள் அனைத்தும் ஆதாரமற்ற ஒரு கட்டுக்கதையை அடிப்படையாக கொண்டே அமைந்திருக்கின்றன. பொய்யை உண்மை என்று வாதிடுபவர்களுக்குத்தான் அதற்கான ஆதாரங்களை தெள்ளத்தெளிவாக எடுத்து வைக்க வேண்டிய கடமை இருக்கிறது. …
Read More »