தமிழ் சகோதரர்கள் யுனிகோடுக்கு மாற வேண்டும் என்பதற்காக மிகுந்த சிரமத்துடன் 3 வகை தட்டச்சு முறைகள் எ-கலப்பை 2.0 வெளியீட்டில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதற்காக “தமிழா” நண்பர்களுக்காக தமிழ் சமுதாயம் நன்றிகடன் பட்டிருக்கிறது.
இதில் ஒரு சில விஷயங்களை அடுத்த பதிவில் சேர்த்தால் இன்னும் பொழிவுடன் காணப்படும். நான் எ-கலப்பை 2.0 பாமினி வெளியீட்டை யுனிகோடு தட்டச்சு முறைக்காக பயன்படுத்துவதால் அதில் கண்ட விஷயங்கள்:
i)
பாமினி தட்டச்சு உபயோகிப்பவர்கள், யுனிகோடில் நேரடியாக தட்டச்சு செய்வதற்கு எ-கலப்பை 2.0-வை உபயோகப்படுத்துகிறார்கள். ஹு, ஹூ, ஜு, ஜூ, ஷு, ஷூ” போன்ற எழுத்துக்களை தட்டச்சு செய்யமுடிவதில்லை. இதனை நிவர்த்தி செய்வதற்காக Microsoft word மற்றும் Microsoft Frontpage-ல் “ஹ, ஜ, ஷ” போன்றவற்றை தட்டச்சு செய்தபின்னர் கீழ்கண்ட படிகளை செய்யவேண்டியுள்ளது.
1. insert menu
2. symbol..
3. எழுத்துருவின் பெயரை தேர்வு செய்வது.
4. பிறகு ” ு, ூ ” என்ற குறிகளை தேர்வு செய்து insert விசையை சொடுக்குவது.
ii
ளூ தட்டச்சு செய்ய ளுh=ளூ என்ற முறை தற்போது உள்ளது. இதனுடன் @=ளூ என்ற மாற்றத்தையும் உடன் இணைக்கப்படவேண்டும்.
iii)
1) பாமினி: ~=ஷ
2) சாருகேசி: \=ஷ
எ-கலப்பை 2.0 பாமினி பதிப்பில் சாருகேசி முறையில் “ஷ” கொண்டுவரப்படுகிறது. இதில் ~=ஷ என்ற பாமினி முறை மாற்றத்தையும் அதிகப்படியாக இணைக்கப்பட வேண்டும். இதனால் இரண்டு முறை பழக்கம் உள்ளவர்களும் பயனடைவர்.
இவ்விஷயங்கள் புதிய பதிப்பில் சரிசெய்யப்படுவதற்காக “தமிழா”வுக்கு தெரியப்படுத்துவது மட்டுமே சரியான வழி என்றாலும்கூட, இந்த மூன்றையும் பிரச்சினையாக கருதும் நண்பர்கள், அதனை தீர்க்கும் வழியை தெரிந்துக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே இங்கு பதிவு செய்கிறேன்.