யூசுஃப் இஸ்லாமுக்கு நஷ்ட ஈடு வழங்கும் பிரிட்டிஷ் பத்திரிக்கைகள்!
(08-03-05 அன்று பதிந்த இக்கட்டுரை அன்றே காணாமல் போய்விட்டது. அதனால் மீண்டும் பதிகிறேன்.)
இரண்டு ஆங்கில பத்திரிக்கைகள் இவ்வளவு என்று குறிப்பிடாமல் தாங்கள் யூசுஃப் இஸ்லாம் எனும் பிரபல பாடகருக்கு இழப்பீடு கொடுத்ததாக தெரிவித்தன. முன்பு கேட் ஸ்டீவன்ஸ் என்ற பெயரில் புகழ்பெற்ற பாப் இசைப்பாடகராக இருந்தவர் யூசுஃப் இஸ்லாம். அவர் இஸ்லாத்தை தழுவியபின் இஸ்லாமிய அழைப்புப்பணியில் ஈடுபட்டு உலகெங்கும் சுற்றி வருகிறார். அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் பல இஸ்லாமியக் கல்வி நிலையங்கள் உருவாக்கி அறப்பணிகள் செய்து வருகிறார். இவரது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கில் இவரை பயங்கரவாதத்துடன் தொடர்புப் படுத்தி செய்தி வெளியிட்டதற்காக இந்த இழப்பீட்டை அவருக்கு அளிக்க வேண்டிய நிலை அப்பத்திரிக்கைகளுக்கு ஏற்பட்டது.
இது பற்றி யூசுஃப் இஸ்லாம் கூறியதாவது: “தி சண்டே டைம்ஸ் பத்திரிக்கையும், தி ஸன் பத்திரிக்கையும் என்னைப் பற்றி பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி இனி எழுதுவதில்லை என்றும் இதற்கான சட்ட நடவடிக்கைக்குரிய எனது செலவு தொகையோடு எனக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நஷ்ட ஈடாக தருவதாகவும் ஒப்புக் கொண்டுவிட்டன. இப்பொதெல்லாம் முஸ்லிம்களைப் பற்றி பொய்யாகவும் அவதூறாகவும் செய்திகளை வெளியிடுவது மீடியாவுக்கு மிகவும் எளிதான செயலாகிவிட்டது. இவ்விஷயம் எனக்கு பெரும் பாதிப்பை உண்டுபண்ணிவிட்டதோடு, நான் செய்து வரும் அழைப்புப்பணி, கல்விப்பணிகளுக்கு இடையூறு உண்டாக்கிவிட்டது. இவ்விதம் இழைக்கப்பட்ட தீய விளைவை நேர் செய்வது பெரும்பாலும் சிரமமானதொன்றாகும்” என்று கூறினார் யூசுஃப் இஸ்லாம்.
நன்றி: நம்பிக்கை மாத இதழ் மார்ச் 05
பிரபலமான வூடகங்களும் யூதர்களின் சதித்திட்டத்தால் இஸ்லாமிய தாவா பனி செய்யும் யூசுப் இஸ்லாம் போன்ற சிறந்த தாய்களை கூட விட்டு வைக்கவில்லை. இது அவர்களுக்கு கிடைத்த முதல் சவுக்கடி. அல்லாஹு அக்பர்
Allaku Akbar…. No more words to say….
Truth will win this is the good example for that… May Allah bless him with his kind and mercy.. and may Allah help him to continue Dhawwa works…