Featured Posts

இஸ்லாம் அறிமுகம்

இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்

 நூல்: “இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்” ஒரு இயந்திர வாகனத்தை உருவாக்க எத்தனையோ பாகங்கள் தேவை! அதேபோல் இந்த உலகத்துக்கு எத்தனையோ விதமான மனிதர்கள் தேவை! மனிதர்கள் பல்வேறு வகையான சமூகத்தைச் சேர்ந்தவர்களாக, இனத்தவராக, மொழியினராக படைக்கப்பட்டிருப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? அனைவரும் ஒரே விதமாக ஏன் படைக்கப்படவில்லை? ஆம் அது ஒரு நியாயமான கேள்வியே!!

Read More »

மறுமை நம்பிக்கையின் மற்றொரு அவசியம்!

மற்றொரு வகையில் பார்க்கும் பொழுதும் இத்தகைய விசாரணை, அதைத்தொடர்ந்து வழங்கும் வெகுமதிகள் அல்லது தண்டனைகள் என்பன உள்ள மறுமை வாழ்வு அவசியமே என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள். இந்த உலகம் தற்காலிகமானது; என்றோ ஒருநாள் முற்றிலும் சின்னபின்னமாகி அழிந்து விடும். அதேபோன்று மனித வாழ்வும் மிகக் குறுகிய காலத்தை உடையது. எனவே, அவனது எல்லா நல்ல செயல்களுக்கும் சமமான வெகுமதிகள் கொடுப்பதும், எல்லாத் தீய செயல்களுக்கும் சமமான தண்டனைகள் கொடுப்பதும் …

Read More »

அறிவும் சுதந்திரமும்!

அல்லாஹ்வின் ஓர் உயர் படைப்பான மனிதன் நல்வாழ்வு பெறுவதற்கு, இஸ்லாம் எனும் வாழ்க்கை முறையைக் கொடுத்தான் என்பதை நாம் முன்னர் விளக்கமாகப் பார்த்தோம். எனினும், மனிதன் இஸ்லாத்தை ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்று அல்லாஹ் பலவந்தப்படுத்தவில்லை. மாறாக மனிதனுக்கு – சிந்திக்கக் கூடிய ஆற்றலைக் கொடுத்தான் – நல்லது கெட்டதைப் புரிந்துக் கொள்ளக்கூடிய திறமையைக் கொடுத்தான். அத்துடன், – இவற்றைத் தான் விரும்பியவாறு பயன்படுத்தும் சுதந்திரத்தையும் கொடுத்தான். அல்லாஹ்வின் இவ்வேற்பாடு …

Read More »

மறுமைநாள்!

மறுமையை நம்பவேண்டும் என்பது இஸ்லாமிய நம்பிக்கை சார்ந்த ஐந்தாவது அம்சமாகும். இது தொடர்பாக நம்பிக்கை கொள்ள வேண்டியவைகளை பேரறிஞர் மௌலானா செய்யித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அவைகளாவன:

Read More »

இறைத்தூதர்கள்!

அல்லாஹ் மனிதரை நல்வழிப்படுத்த பல வேதங்களை அருளினான் என முன்னர் பார்த்தோம். அத்துடன் அவன், “நீங்கள் எப்படியும் இந்த வேதங்களை புரிந்து, எப்படி வேண்டுமானாலும் பின்பற்றுங்கள்” என்று மனிதரை நட்டாற்றில் விடவில்லை. மாறாக, இவ்வேதங்களைத் தெளிவாக புரிந்து, அவற்றுக்கேற்ப வாழ்ந்து, ஈருலக நற்பயன்களைப் பெறுவது எப்படி என்பதைக் கற்றுக்கொடுத்து, முன்மாதிரியாக வாழும் மனிதபுனிதர்களை அவர்களிலிருந்தே தோற்றுவித்தான். அவர்களையே ‘இறைத்தூதர்கள்’ என இஸ்லாம் அறிமுகப்படுத்துகின்றது. பொதுவாக அரபு மொழியில் ‘நபி’ என்றும் …

Read More »

வேதங்கள்!

அல்லாஹ், உலகில் வாழ்ந்த எல்லா மனிதர்களுக்கும் பல்வேறு காலகட்டங்களில் தனது வழிகாட்டல்கள் அடங்கிய வேதங்களை அருளியிருக்கின்றான். அவற்றில் சில வேதங்களின் பெயர்கள் மட்டுமே நமக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. அவையாவன: 

Read More »

வானவர்கள்!

அல்லாஹ்வின் படைப்பினமான இவர்களை நம்புவது இஸ்லாத்தில் இரண்டாவது அம்சமாகும். இவர்களை அரபு மொழியில் ‘மலாஇகா’ எனக் கூறப்படும். கண்களுக்குப் புலப்படாத இவர்களுக்கு அல்லாஹ்வின் இறைமையில் எத்தகைய பங்கும் கிடையாது. அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றும் பொறுப்புடைய இவர்களும் அவனது அடிமைகளேயாவர். இவர்களால் அல்லாஹ்வுக்கு எதிராகச் செயற்பட முடியாது. பாவ காரியங்களில் ஈடுபடவும் முடியாது. இவர்களுல் பிரதானமானவர் பெயர் ஜிப்ரீல் (அலை) என்பதாகும். இவரது பொறுப்பு இறைச் செய்தியை இறைத்தூதர் வசம் கொண்டு …

Read More »

இறைவன் இருக்கின்றான்!

சில ஒழுக்கக் கோட்பாடுகளை மட்டும் கொண்ட மதங்களும், நவீன கொள்கைகளும் “இறைவன் உண்டா?” என்ற வேண்டாத வினாவை எழுப்பி, மக்களைத் தவறான வழிகளில் இட்டுச் செல்கின்றன. அவற்றின் இந்த கெடுதி மிக்க போதனைகளால் ஆவது ஒன்றுமில்லை – மக்கள் கெட்டு குட்டிச்சுவராவதைத் தவிர! “இறைவன் இருக்கின்றான்” என்பதற்கு இப்பிரபஞ்சமும், இதன் அமைப்பும், இவ்வமைப்புக்கு உட்பட்ட ஏனைய படைப்புகளின் இயக்கத்தன்மையும், மேற்காணும் வகையில் வினா விடுப்பவர்களது உடலமைப்பும், அதன் அற்புதமான செயற்பாடும் …

Read More »

இறைவனை நாட…

சில மதங்களில் இறைவனை நாடுவதற்கும், அவனிடம் தேவைகளை கேட்டுப் பெறுவதற்கும் குட்டி தெய்வங்களை வைத்துக் கொண்டுள்ளார்கள்; இறந்தவர்களின் அடக்கஸ்தலங்களை நாடுகிறார்கள்; சிலைகளுக்கு பலவகையான நைவேத்தியங்களை வைக்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறுவதெல்லாம், ‘நாம் வல்லமை பொருந்திய இறைவனை நேராக நாட முடியாது; எனவே, அவனுக்கு நெருக்கமானவர்கள் ஊடாகவே நாடுவதுதான் அதிக பயன்களைப் பெற சிறந்த வழி’ என்பதாகும். இஸ்லாம் இக்கருத்தை ஏற்பதில்லை. காரணம் இஸ்லாத்தில் குருத்துவ அமைப்பு இல்லை. அல்லாஹ்வுக்கும் அவனது …

Read More »

கற்பனைக்கு எட்டாதவன்!

மனிதனுக்குக் ‘கற்பனா சக்தி’ என்றொன்றை அல்லாஹ் வழங்கியுள்ளான். அந்தக் கற்பனா சக்தி எல்லோருக்கும் ஒரேவிதமாக அமைவது இல்லை. ஒவ்வொருவரது அறிவு, அனுபவம், திறமை, ஆர்வம் என்பவற்றுக்கமைய அது வித்தியாசப்படும். அத்தகையவர்களுள் ஆன்மீக ஆர்வம் மேலிட்டு அதில் அதிக ஈடுபாடு கொண்ட பல மதத்தைச் சேர்ந்தவர்கள் இறைவனைப் பற்றிய கற்பனையில் ஈடுபடலாயினர். அத்தகைய ஈடுபாடுகள் மூலமே விதவிதமான விக்கிரகங்கள் தோற்றம் பெற்றன.

Read More »