Featured Posts

மறுமைநாள்!

மறுமையை நம்பவேண்டும் என்பது இஸ்லாமிய நம்பிக்கை சார்ந்த ஐந்தாவது அம்சமாகும்.

இது தொடர்பாக நம்பிக்கை கொள்ள வேண்டியவைகளை பேரறிஞர் மௌலானா செய்யித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

அவைகளாவன:

1. ஒருநாள் அல்லாஹ் முழு உலகையும், படைப்பினங்களையும், அழித்து விடுவான். அந்த நாளின் பெயர் ‘கியாமத்’ ஆகும்.

2. பிறகு இறைவன் அனைவருக்கும் மறுவாழ்வு அளிப்பான். அனைவரும் அல்லாஹ்வுக்கு முன் ஆஜராவார்கள். அதற்கு ‘மஹ்ஷர்’ என்று பெயர். (அதுவே இறுதித் தீர்ப்பு நாள்)

3. எல்லா மக்களும், தங்கள் உலக வாழ்வில் எதை எதைச் செய்தார்களோ அவை முழுமையும் கொண்ட செயல் பட்டியல் இறைவனின் நீதிமன்றத்தில் சமர்ப்பணமாகும்.

4. அல்லாஹ், ஒவ்வொருவருடைய நல்ல, கெட்ட செயலையும் நிறுத்துப் பார்ப்பான். யாருடைய நற்செயல் இறைவனின் துலாக்கோலில் தீய செயலைக் காட்டிலும் பாரமானதாயிருக்குமோ அவரை மன்னித்து விடுவான். யாருடைய தீய செயலின் தட்டு தாழுமோ அவருக்குத் தண்டனை அளிப்பான்.

5. யார் மன்னிப்பு பெறுகிறார்களோ அவர்கள் சுவர்க்கம் புகுவார்கள். யாருக்கு தண்டனை வழங்கப்படுகிறதோ அவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள்.

‘இதுதான் இஸ்லாம்’ மௌலானா மௌதூதி (ரஹ்), இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் சென்னை வெளியீடு: (1994 ஆகஸ்ட்) பக்கம் 141)

குவைத் இஸ்லாமிய நிலையத்தின் (IPC) வெளியீடாகிய “இஸ்லாம் ஓர் அறிமுகம்” என்ற நூலிலிருந்து. ஆசிரியர்: S.M. மன்சூர் அவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *