திண்ணமாக இல்லை! யூத மதத்தைப் போன்றே, இப்ராஹீம் (அலை) அவர்களை இவ்விரு மதங்களும் சிறப்புக்குரிய தமது மூதாதையராகவும், இறைத்தூதராகவும் போற்றுகின்றன. அதுமட்டுமல்ல! அவருடைய இரண்டு புதல்வர்களின் மூலமாக நேரடி வாரிசுகளாக வந்த மூன்று இறைத்தூதர்களையும் இம்மூன்று மதங்களும் நம்புகின்றன. அதாவது, இப்ராஹீம் (அலை) அவர்களின் மூத்த புதல்வர்களான இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியில் வந்தவர்தாம் முஹம்மத் (ஸல்) அவர்கள்!
Read More »இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள் (Book)
அந்நிய மார்க்கமா இஸ்லாம்?
இன்றைய நவீன உலக கண்ணோட்டத்தின்படி இஸ்லாம் பழமைவாதத்தை வலியுறுத்தும் தீவிரவாத மார்க்கமாகக் கணிக்கப்படுகின்றது. இத்தகைய தவறான கண்ணோட்டம் உருவானது ஏன்? அதற்குரிய பதில் இதுதான்:- பொதுவாக, இன்றைய மேற்குலக நாகரிகத்தில் மதம் என்பது அவர்தம் அன்றாட வாழ்வில் தாக்கம் ஏற்படுத்தக் கூடியதாகவோ அல்லது பின்பற்றத்தக்க கூடியதாகவோ இருப்பதில்லை.
Read More »அல்லாஹ் எனும் சொல்லின் பொருள் என்ன?
அல்லாஹ் எனும் சொல் இணை – துணையற்ற உண்மையான ஒரே இறைவனைக் குறிக்கின்றது. அவனை விடுத்து வேறு எவரும் எதுவொன்றும் அல்லாஹ்வாக முடியாது. இந்த சொல்லுக்கு பன்மையோ அல்லது பால் வேறுபாடோ கிடையாது. ஆனால், இறைவன் எனும் தனிப்பட்ட சொல்லை ஒப்பு நோக்குங்கள். இச்சொல்லுக்கு பன்மைச் சொல்லும், பால் வேறுபாடும் கூற முடியும். எனவே அல்லாஹ் எனும் சொல்லே, தனித்துவமிக்க ஏக இறைவனின் மகாத்மியத்தை முன்னிறுத்துவதாக உள்ளது.
Read More »இஸ்லாம் பொருள் என்ன?
இஸ்லாம் எனும் அரபிச்சொல் சரணடைதல் – கட்டுப்படுதல் எனும் பொருள்படும். இச்சொல் அமைதி எனும் மூலச்சொல்லிலிருந்து பிறந்தது. மதக் கருத்தோட்டத்தின்படி நோக்கினால், இச்சொல்லுக்குரிய சரியான – பொருத்தமான பொருள் இறை நாட்டத்தின் பால் தன்னை முழுமையாக அர்ப்பணித்தல் என்பதே! முஸ்லிம்கள் ஏக இறைவனை விடுத்து முஹம்மத் (ஸல்) என்பவரை இறைவனாகக் கருதுகின்றார்கள் எனும் பொருளில் சிலர் இஸ்லாத்தை முஹம்மதியம் – Muhammadinism என்று கூறுகின்றனர். இக்கருத்து முற்றிலும் தவறானது. “முஸ்லிம்கள் …
Read More »ஒருவன் முஸ்லிமாவது எப்போது?
மிகவும் எளிது! தனது உள்ளத்தின் ஆழத்திலிருந்து அல்லாஹ் எனும் ஏக இறைவனை தவிர்த்து வேறு இறைவன் இல்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் ஆவார்கள்! எனும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஒருவர் முஸ்லிமாகிறார். இவ்வாறு பறைசாற்றுவதன் மூலம் அவர், இறைத்தூதர்கள் அனைவரின் மீதும், அவர்கள் கொண்டு வந்த இறைவேதங்கள் அனைத்தின் மீதும் நம்பிக்கைக் கொண்டவராகின்றார். இத்தகைய மனிதர் முஸ்லிம் எனப்படுகின்றார். நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து …
Read More »முஸ்லிம்களின் நம்பிக்கை என்ன?
நித்திய ஜீவனும், இணை-துணை அற்றவனுமான ஏக இறைவன் ஒருவன் மீதே முஸ்லிம்கள் நம்பிக்கைக் கொள்கின்றனர். மேலும், அவனால் படைக்கப்பட்ட வானவர்கள், மனித குலத்துக்கு அவனால் அனுப்பி வைக்கப்பட்ட தூதர்கள் ஆகியோரையும் நம்புகின்றார்கள். அது மட்டுமல்ல, இவ்வுலக அழிவுக்குப் பின்னால் ஏற்பட இருக்கும் மறுமைநாளின் மீதும் அவர்கள் பூரண நம்பிக்கைக் கொண்டிருக்கின்றார்கள். மேலும் இந்த உலகில் தாம் புரிந்த செயல்களுக்கு அப்போது கணக்கு வாங்கப்படும் என்பதிலும் அசைக்க முடியாத நம்பிக்கையை அவர்கள் …
Read More »முஸ்லிம்கள் யார்?
இனம், வர்ணம், நாடு, கலாச்சாரம் ஆகிய அனைத்தையும் கடந்து, தென் பிலிப்பைனிலிருந்து நைஜிரியா வரை உலகின் ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரை பல்வேறு பாகங்களிலும் ஏறக்குறைய ஒரு பில்லியன் மக்களை அவர் தம் நம்பிக்கை ஒன்றே இணைத்து வைத்திருக்கின்றது. அந்த நம்பிக்கையே இஸ்லாம்!
Read More »எது இஸ்லாம்?
இஸ்லாம்! இது ஒரு புதிய மதமோ, தத்துவமோ அல்ல! மாறாக, ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைவன் தனது இறைத்தூதர்கள் மூலமாக அனுப்பி அருளிய சத்திய வாழ்க்கை நெறியே அது! உலகில் வாழும் ஐவரில் ஒருவருக்கு இஸ்லாம் ஒரு மார்க்கம் மட்டுமல்ல, மாறாக, அவர்களின் முழுமையான வாழ்க்கை வழிமுறையுமாகும்.
Read More »இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்
நூல்: “இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்” ஒரு இயந்திர வாகனத்தை உருவாக்க எத்தனையோ பாகங்கள் தேவை! அதேபோல் இந்த உலகத்துக்கு எத்தனையோ விதமான மனிதர்கள் தேவை! மனிதர்கள் பல்வேறு வகையான சமூகத்தைச் சேர்ந்தவர்களாக, இனத்தவராக, மொழியினராக படைக்கப்பட்டிருப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? அனைவரும் ஒரே விதமாக ஏன் படைக்கப்படவில்லை? ஆம் அது ஒரு நியாயமான கேள்வியே!!
Read More »