அறியாமைக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட – இந்த சமுதாயத்திலும் பரவி இருக்கின்ற பல வார்த்தைகளில் ழிஹாரும் ஒன்று. அதாவது ஒரு கணவன் தன் மனைவியிடம் ‘நீ எனக்கு என் தாயைப் போன்றவள்’, ‘நீ எனக்கு என் சகோதரியைப் போன்றவள்’ என்பன போன்ற மோசமான வார்த்தைகளைக் கூறுவர். இதற்கு ழிஹார் எனப்படும். பெண்ணுக்கு இதிலே அநீதியிருப்பதால் இறைமார்க்கம் இதை அறுவருப்பாகக் கருதுகிறது. இது பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறியுள்ளான்: “உங்களில் எவர்கள் தம் …
Read More »எச்சரிக்கை
காரணமின்றி பெண் விவாகரத்துக் கோரல்
பெரும்பாலான பெண்கள் ஒரு சின்னப் பிரச்சனை ஏற்பட்டாலும் தங்கள் கணவன்மார்களிடம் விவாகரத்தைக் கோர விரைகின்றனர். அல்லது தான் விரும்பும் பொருளை தன் கணவன் கொடுக்காவிட்டால் மனைவி அவனிடம் விவாகரத்தைக் கோருகின்றாள். சில சமயம் அவள் சில குழப்பமூட்டுகின்ற உறவினரால் அல்லது அண்டை வீட்டாரால் இவ்வாறு நடந்து கொள்வதற்குத் தூண்டப்படுகிறாள். சில சமயம் ‘நீ ஓர் ஆண் பிள்ளையாக இருந்தால் என்னை விவாகரத்துச் செய்து பார்’ என்பது போன்ற உணர்வுகளைத் தூண்டக்கூடிய …
Read More »கணவனின் படுக்கைக்கு வர மறுத்தல்
ஒரு பெண் தன் கணவன் படுக்கைக்கு அழைக்கும் போது மார்க்க ரீதியான தக்க காரணம் இல்லாமல் வராமலிருப்பது ஹராமாகும். ‘ஒருவர் தன் மனைவியை படுக்கைக்கு அழைக்கும் போது அவள் வர மறுத்தால் அவள் மீது அவன் கோபம் கொண்ட நிலையில் அந்த இரவை அவன் கழித்தால் விடியும் வரை வானவர்கள் அவளை சபிக்கின்றனர் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (புகாரி) தனக்கும் தன் கணவனுக்குமிடையே …
Read More »ஒரினப் புணர்ச்சி
லூத் (அலை) அவர்களுடைய சமுதாயத்தினர் செய்து வந்த குற்றம் ஒன்று இருந்தது. அதுதான் ஆணும் ஆணும் புணர்வது. அல்லாஹ் கூறுகிறான்: “மேலும் நாம் லூத்தை அனுப்பினோம். அப்போது அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: ‘உங்களுக்கு முன்னால் உலக மக்கள் யாரும் செய்திராத மானக்கேடான செயல்களை நீங்கள் செய்கின்றீர்கள். (மோகம் கொண்டு) ஆண்களிடம் செல்கின்றீர்கள், வழிப்பறி செய்கின்றீர்கள், உங்கள் சபைகளில் வைத்தே தீய செயல்களில் ஈடுபடுகின்றீர்கள்’. அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில், …
Read More »விபச்சாரம்
மனிதனின் கண்ணியம், மானம் மரியாதையையும், அவனது சந்ததிகளையும் பாதுகாப்பது ஷரீஅத்தின் – இறைமார்க்கத்தின் நோக்கங்களில் ஒன்றாக இருப்பதால் இறைமார்க்கத்தில் விபச்சாரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகிறான்: “மேலும் விபச்சாரத்தின் பக்கமே நெருங்காதீர்கள்! திண்ணமாக அது மானங்கெட்ட செயலாகவும், தீய வழியாகவும் இருக்கின்றது” (7:32) இன்னும் சொல்வதானால் பெண்கள் கட்டாயம் பர்தா அணிய வேண்டும், ஆண், பெண் இருபாலாரும் தம் பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும், பெண்கள் அந்நிய ஆண்களுடன் தனித்திருக்கக் …
Read More »வெங்காயம், பூண்டு!
வெங்காயம், பூண்டு சாப்பிட்டதோடு பள்ளிக்கு வருதல் அல்லாஹ் கூறுகிறான்: “ஆதத்தின் மக்களே! ஒவ்வொரு தொழுகையின் போதும் உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள்” (7:31) ‘பூண்டையோ வெங்காயத்தையோ உண்டவர் நம்மை விட்டும் அல்லது நம் பள்ளியை விட்டும் விலகியிருக்கட்டும். தனது வீட்டில் உட்கார்ந்து கொள்ளட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி) ஜாபிர் (ரலி) மேலும் அறிவிப்பதாவது: ‘வெங்காயம், வெள்ளைப்பூண்டு மற்றும் வெறுக்கத்தக்க வாடையுடைய …
Read More »வேண்டுமென்றே இமாமை முந்துவது
மனிதன் இயல்பாகவே அவசரப்படக் கூடியவனாக இருக்கிறான். “மனிதன் பெரிதும் அவசரக்காரனாக இருக்கிறான்” என்று அல்லாஹ் கூறுகிறான். (17:11) நிதானம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்படுகின்றது. அவசரம் ஷைத்தானின் புறத்திலிருந்து ஏற்படுகின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), நூல்: பைஹகீ ஒருவன் ஜமாஅத்துடன் தொழும் போது தனது வலது பக்கமோ அல்லது இடது பக்கமோ தொழுகின்ற பெரும்பாலோர் ருகூவிலும், சுஜூதிலும், பொதுவாக ஒவ்வொரு …
Read More »தொழுகையில் வீணான காரியங்களும் அதிகப்படியான அசைவுகளும்
இவை எப்படிப்பட்ட ஆபத்து எனில் தொழுகையாளிகளில் பலர் இவற்றிலிருந்து விடுபட முனைவதில்லை. காரணம் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைப் பேணுவதில்லை. அல்லாஹ் கூறுகிறான்: “அல்லாஹ்வின் திரு முன் உள்ளச்சத்தோடு நில்லுங்கள்” (2:238) மேலும் கூறுகிறான்: “திண்ணமாக இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையவர்கள் எனில் தங்களின் தொழுகையில் பயபக்தியை மேற்கொள்கின்றார்கள்” (23:1,2) தொழுகையில் சுஜூத் செய்யும் போது சுஜூத் செய்யுமிடத்தில் மணலை சமப்படுத்துவது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது, …
Read More »தொழுகையில் அமைதியின்மை
‘திருட்டுக் குற்றங்களில் மிகப் பெரும் குற்றம் தொழுகையில் திருடுவதாகும். திருடர்களில் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவனே! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதும் அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் ஒருவன் எப்படித் திருடுவான்? எனத் தோழர்கள் வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவன் தொழுகையில் ருகூவையும் சுஜூதையும் முழுமையாகச் செய்ய மாட்டான் எனக் கூறினார்கள்’ அறிவிப்பவர்:அப்துல்லாஹ் அபீகதாதா (ரலி) நூல்: அஹ்மத் தொழுகையில் அமைதியை விட்டு விடுவது, …
Read More »தீயவர்களிடம் அமர்தல்
நயவஞ்சகர்கள், தீயவர்களிடம் அமர்தல் அதாவது நயவஞ்சகர்கள் மற்றும் தீயவர்களிடம் என்பது மகிழ்வுடன் அல்லது அவர்களுக்கு மகிழ்வூட்டுவதற்காகவாகும். உறுதியான ஈமான் இல்லாத பெரும்பாலோர் கெட்டவர்களுடன், தீயவர்களுடன் அமர்ந்து கலந்துறவாட விரும்புகிறார்கள். ஏன் அல்லாஹ்வின் மார்க்கத்தையும் அதைப் பின்பற்றி நடக்கக் கூடியவர்களையும் குறை கூறக்கூடியவர்களுடனும், கேலி செய்யக் கூடியவர்களுடனும் கலந்துறவாடுகின்றனர். இத்தகைய செயல் சந்தேகமில்லாமல் விலக்கப்பட்டதும் ஈமானை மாசுபடுத்தக்கூடியது ஆகும். அல்லாஹ் கூறுகிறான்: “(நபியே!) நம் வசனங்கள் பற்றிக் குறை கூறிக் கொண்டிருப்போரை …
Read More »