Featured Posts
Home » நூல்கள் (page 72)

நூல்கள்

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 01)

அல்குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களுமே இஸ்லாத்தின் மூலாதாரங்களாகும். அல்குர்ஆனில் “அல்லாஹ்வைப் பின்பற்றுங்கள், அவனது தூதரையும் பின்பற்றுங்கள்” என அனேக ஆயத்துக்கள் கூறுகின்றன. அவனது தூதரைப் பின்பற்றுங்கள் என்ற கட்டளையைத்தான் ஹதீஸைப் பின்பற்றுதல் என நாம் புரிந்து செயற்பட்டு வருகின்றோம். இந்த வகையில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை நம்புவதும் அவற்றை ஏற்று நடப்பதும் நபி(ஸல்) அவர்களது நபித்துவத்தை நம்புவதையும் அதை ஏற்றுக் கொள்வதையும் வெளிப்படையாகக் காட்டும் முக்கிய அம்சங்களாகும்.

Read More »

மறுமை நாள் (அத்தியாயம்-9)

விசாரணை மஹ்ஷர் வெளியில் மிக முக்கிய அம்சம் அங்கு நடக்கும் விசாரணையாகும். மனிதர்கள் அனைவரும் தமது இறுதியான உலகுக்குப் போகும் முன்னால் அவர்கள் அங்கு செல்வதற்கான நியாயத்தை முன்வைப்பதே இந்த விசாரணையின் நோக்கமாகும். இந்த விசாரணை குறித்து அல்குர்ஆன் பல இடங்களில் மிகத் தெளிவாக விளக்குகிறது : “நிச்சயமாக அவர்கள் எம்மிடமே மீண்டு வர வேண்டும். அத்தோடு அவர்களை விசாரணை செய்வதும் எமது பொறுப்பேயாகும்.” (ஸூரா வாகியா : 25, …

Read More »

மறுமை நாள் (அத்தியாயம்-8)

மஹ்ஷர் வெளியும், அதன் நிகழ்வுகளும் பிரபஞ்ச அழிவின் பிறகு மனிதன் மீண்டும் எழுப்பப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறான். மனிதர்கள் அனைவரும் ஒரு வெட்டவெளியில் திரட்டப்பட்டு அந்த விசாரணை நடைபெறும். அவ்வாறு மனிதர்கள் ஒன்று திரட்டப்படும் வெட்டவெளியை ‘மஹ்ஷர்’ என அல்குர்ஆனும் சுன்னாவும் அழைக்கின்றன. இவ்வாறு மனிதர்கள் மீண்டும் எழுப்பப்பட ஒரு ஸூர் ஊதப்படும் என அல்குர்ஆன் கூறுகிறது. உலக அழிவு அந்த ஸூர் ஊதப்படுதலோடு தான் ஆரம்பமாகும் எனவும் குர்ஆன் கூறுகிறது. …

Read More »

(தஃப்ஸீர்) விரிவுரை

1893. பனூ இஸ்ராயீல்களுக்கு, ‘(ஊருக்குள் நுழையும்போது) அதன்வாசலில், சிரம் தாழ்த்தியபடியும் ‘ஹித்தத்துன்’ (‘பாவ மன்னிப்புக் கோருகிறோம்’) என்று சொல்லியபடியும் நுழையுங்கள்” என்று கட்டளையிடப்பட்டது. ஆனால், அவர்கள் (ஹித்தத்துன்’ என்னும் சொல்லை ‘ஹின்தத்துன் – கோதுமை என்று) மாற்றி விட்டார்கள்; தங்கள் புட்டங்களால் தவழ்ந்தபடி (ஊருக்குள்) நுழைந்தார்கள்; மேலும், ஒரு வாற்கோதுமைக்குள் ஒரு தானிய விதை என்று கூறினார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

Read More »

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் குறித்து….

1892. அபூபக்ர் (ரலி) என் தந்தை (ஆஸிப் இப்னு ஹாரிஸ் (ரலி)யிடம் அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள். அவர்களிடமிருந்து ஒர் ஒட்டகச் சேணத்தை அபூபக்ர் (ரலி) விலைக்கு வாங்கினார்கள். அப்போது அவர்கள் என் தந்தை ஆஸிப் (ரலி) அவர்களிடம், ‘இதை என்னுடன் சுமந்துவர உங்கள் மகனை அனுப்புங்கள்” என்று கேட்டுக் கொண்டார்கள்.

Read More »

முதியவரை முற்படுத்துதல்.

1890. ‘நான் ஒரு குச்சியைக் கொண்டு பல் துலக்குவதாகக் (கனவு) கண்டேன். அப்போது என்னிடம் இரண்டு மனிதர்கள் வந்தார்கள். அவ்விருவரில் ஒருவர் வயதில் பெரியவராக இருந்தார். அவ்விருவரில் வயதில் சிறியவரிடம் பல் துலக்கும் குச்சியைக் கொடுத்தேன். அப்போது ‘வயதில் மூத்தவரை முற்படுத்துவீராக!’ என்று என்னிடம் கூறப்பட்டது. உடனே அவ்விருவரில் வயதில் பெரியவருக்கு அக்குச்சியைக் கொடுத்தேன்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. புஹாரி : 246 இப்னு உமர் (ரலி). …

Read More »

பிறரைப் புகழ்ந்து பேசுதல்.

1888. ஒருவர் இன்னொரு மனிதரைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் புகழ்ந்து பேசினார். நபி (ஸல்) அவர்கள், ‘அழிந்து போவீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர்” என்று (பலமுறை) கூறினார்கள். பிறகு, ‘தன் சகோதரனைப் புகழ்ந்தே ஆகவேண்டும் என்ற நிலையில் உங்களில் இருப்பவர், இன்னாரை நான் இப்படிப்பட்டவர் என்று எண்ணுகிறேன். அல்லாஹ்வே அவருக்குப் போதுமானவன். அல்லாஹ் (உண்மை நிலையை …

Read More »

ஒரு மூமின் இருமுறை கொட்டுப்பட மாட்டான்.

1887. இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 6133 அபூ ஹுரைரா(ரலி) .

Read More »

எலிகளாக உருமாற்றப் பட்டோர்.

1886. பனூ இஸ்ராயீல்களில் ஒரு குழுவினர் காணாமல் போய்விட்டார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. நான் அவர்களை எலிகளாக (உருமாற்றப்பட்டு விட்டதாக)வே கருதுகிறேன். அவற்றுக்கு (முன்னால்) ஒட்டகத்தின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக்) குடிப்பதில்லை. அவற்றுக்கு (முன்பாக) ஆடுகளின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக் குடித்து விடும்” என்று நபி (ஸல்) அவர்கள் அவர்கள் சொன்னார்கள். இதை நான் கஅபுல் அஹ்பார் (ரலி) அவர்களுக்கு அறிவித்தேன். உடனே அவர்கள், …

Read More »

கொட்டாவி வந்தால்….

1885. கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவி விட்டால் தம்மால் முடிந்தவரை அதை அடக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், எவரேனும் ‘ஹா’ என்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 3289 அபூஹுரைரா (ரலி).

Read More »