ஆசிரியர் பக்கம் சமூகக் கட்டமைப்பின் அத்திவாரமாகத் திகழ்வது குடும்பக் கட்டமைப்பாகும். குடும்பக் கட்டமைப்பைச் சிதைத்துவிட்டால் சமூகக் கட்டமைப்பு சிதைந்து சின்னாபின்னமாகிவிடும். மனிதனை ஓரளவாவது நிதான சிந்தனையுடன் செயற்பட வைப்பது குடும்பப் பொறுப்பாகும். குடும்பக் கட்டமைப்பு சிதைந்துவிட்டால் பொறுப்புணர்வு குண்றிவிடும். அதன் பின்னர் அவிழ்த்துவிட்ட மாடு போன்று அவரவர் அவரவரது மனம் போன போக்கில் போக ஆரம்பித்துவிடுவர். கணவன்-மனைவி என்கின்ற உறவு இல்லையென்றால் ஆணும் பெண்ணும் எங்கு வேண்டுமானாலும் போகலாம், எப்படி …
Read More »உண்மை உதயம் மாத இதழ்
சிறுபான்மைச் சமூகம்
உலகின் பல பாகங்களிலும் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் அல்லாத பிற சமூகங்களுக்கு மத்தியில் சிறுபான்மை சமூகமாக வாழ்ந்து வருகின்றனர். உலகில் வாழும் நால்வரில் ஒருவர் முஸ்லிம் எனும் அளவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் பிற மக்களுக்கு மத்தியில் சிறுபான்மையாகவே வாழ்ந்து வருகின்றனர். சிறுபான்மை முஸ்லிம்கள் பிற சமூகங்களுடன் சேர்ந்து வாழும் போது பல்வேறுபட்ட சமய, சமூக, பொருளாதார, அரசியல் ரீதியிலான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்தப் …
Read More »சிறுவர் இலக்கியத்தின் அவசியமும் வழிகாட்டுதலும்
சிறுவர்கள் கதை கேட்பதில் பெரிதும் ஆர்வம் உள்ளவர்களாவர். கடந்த காலங்களில் முதியவர்களுக்குக் கதை சொல்ல நேரம் இருந்தது. இப்போதெல்லாம் யாருக்கும் அதற்கு நேரம் இல்லை. சிறுவர்களின் கதை கேட்கும் ஆர்வத்தை டீவிகளும் கார்ட்டூன் படங்களும் தனித்து வந்தது. இப்போதெல்லாம் செல்போன், கம்ப்யூட்டர் கேம்கள் இருந்தால் பிள்ளைகளுக்கு உணவும் தேவையில்லை, உறக்கமும் தேவையில்லை, எந்த உறவுகளும் தேவையில்லை என்ற நிலையாகிவிட்டது. இதனால் பிள்ளைகள் தனிமை விரும்பிகளாக மாறி வருகின்றனர். மனித உறவுகளின் மகத்துவம் …
Read More »ஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-4]
ஒட்டகம் எவ்வறு படைக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் பார்க்கவில்லையா? என திருக்குர்ஆன் கேட்கின்றது. ஒட்டகம் அல்லாஹ்வின் படைப்பில் அதிசயமானது. பாலைவனப் பயணத்திற்கு ஏற்றது. பாலைவனக் கப்பல் என அதனை அழைப்பார்கள். முன்னொரு காலத்தில் “தமூத்” என்றொரு சமூகம் வாழ்ந்து வந்தது. அல்லாஹ் அவர்களுக்கு பொருள் வளத்தை வழங்கி இருந்தால் நல்ல உடல்பலம்மிக்கவர்களாக அவர்கள் விளங்கினார்கள். அவர்கள் மலைகளைக் குடைந்து அழகிய வடிவமைப்பில் வீடுகளை அமைத்து வாழ்ந்து வந்தனர். அல்லாஹ் வழங்கிய அருள்களை அனுபவித்த …
Read More »ஜமாஅத்துத் தொழுகை [பிக்ஹுல் இஸ்லாம்-31]
பிக்ஹுல் இஸ்லாம் – 31 ஜமாஅத்துத் தொழுகை ஜமாஅத்துத் தொழுகை என்பது தனியான ஒரு தொழுகை கிடையாது. ஐவேளைத் தொழுகை மற்றும் இஸ்லாம் அங்கீகரித்த பெருநாள் மற்றும் கியாமுல் லைல் போன்ற தொழுகைகளைத் தனியாகத் தொழாமல் அணியாக – கூட்டாகத் தொழுவதையே இது குறிக்கும். ஐவேளைத் தொழுகைகளை ஒரு இமாமைப் பின்பற்றி கூட்டாகத் தொழுவதை இஸ்லாம் பெரிதும் வலியுறுத்திப் பேசியுள்ளது. ஜமாஅத்துத் தொழுகையைச் சிறப்பித்துப் பேசும் அதே வேளை அதைப் …
Read More »சமூக உருவாக்கத்தில் கணவன்-மனைவியின் பங்கு
சமூகம் என்பது மக்களைத்தான் குறிக்கும். ஆனால், சமூக உருவாக்கம் என்பது வெறும் மக்கள் தொகையைப் பெருக்குவதைக் குறிப்பதாக அமையாது நல்ல மக்களின் உருவாக்கத்தைத்தான் அது குறிக்கும். நல்ல தனி மனிதர்களை உருவாக்குவதன் மூலம்தான் நல்ல சமூகத்தை உருவாக்க முடியும். நல்ல தனி மனிதர்களை நல்ல குடும்பங்கள்தான் உருவாக்க வேண்டும். குடும்பத்தின் தூண்களாக இருப்பவர்கள் கணவன்-மனைவியரே! கணவன்-மனைவியரினூடாகத்தான் நல்ல குடும்பங்கள் உருவாக்கப்படும். நல்ல பல குடும்பங்கள் உருவாகும் போது நல்ல கிராமமும் …
Read More »மூஸா நபியும்… அதிசயப் பாம்பும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-3]
மூஸா (அலை) அவர்கள் ஒரு நபியாவார்கள். அவருக்கு ‘தவ்றாத்” வேதம் வழங்கப்பட்டது. அவர் இஸ்ரவேல் சமூகத்திற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதராவார்கள். அவர் ஒரு நாள் தன் மனைவியுடன் எகிப்துக்கு வந்து கொண்டிருந்தார். இடைநடுவில் இரவாகிவிட்டது. அப்போது தூரத்தில் வெளிச்சத்தைக் கண்டார். வெளிச்சம் தென்பட்ட பகுதியில் மக்கள் இருக்கலாம்; அவர்களைச் சந்தித்தால் ஏதேனும் உதவியைப் பெறலாம்; பயண உதவிக்கு நெருப்பு எடுத்து வரலாம் என எண்ணினார். எனவே, மனைவியை ஒரு இடத்தில் இருக்கச் …
Read More »#30 அச்சநேரத் தொழுகை [பிக்ஹுல் இஸ்லாம்]
உண்மையில் இது ஒரு தனித் தொழுகை அன்று. அன்றாடம் தொழும் ஐவேளைத் தொழுகையைத்தான் இது குறிக்கின்றது. போர்க்களத்தில் எதிரிகளுடன் சண்டை செய்யும் போது அல்லது எதிரிகளிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான பணிகளில் ஈடுபடும் போது தொழும் நேரம் வந்தால் எப்படித் தொழுவது என்பது பற்றிய சட்டதிட்டங்களை உள்ளடக்கிய பகுதிதான் இதுவாகும். உண்மையில் போர்காலத் தொழுகை பற்றிய ஹதீஸ்கள், தொழுகையின் முக்கியத்துவத்தையும் ஜமாஅத்துத் தொழுகையின் அவசியத்தையும் அத்துடன் தனித்தனி ஜமாஅத்தாகப் பிரிந்து தொழாமல் …
Read More »அழிக்கப்பட்ட யானைப்படை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2]
திருக்குர்ஆன் கூறும் கதைகள்-2 -அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்)- அன்புள்ள தம்பி தங்கைகளே ! உங்களுக்கு யானை என்றால் ரொம்பப் பிடிக்கும்தானே! ஆம், தரையில் வாழும் உயிரினங்களில் பெரியது யானை. அது பலம் மிக்கது. யானையின் பலம் அதன் தும்பிக்கையில் என்பார்கள். அதே போன்று எமது பலம் எமது இறை நம்பிக்கையில் உள்ளது! யானை படை அழிக்கப்பட்ட ஒரு யானைப்படையின் கதையை குர்ஆன் கூறுகின்றது. அது …
Read More »ரோஹிங்கிய ஒரு வரலாற்றுத் துரோகம் [ARTICLE]
மியன்மார், அநியாயத்தின் அக்கிரமத்தின் புதிய அகராதி! “ஆங்சான் சுகி” – “அசின் விராது” கொடூரக் கொலைக் களத்தின் கோரமுகம்! ரோஹிங்கிய முஸ்லிம்கள் நவீன யுகத்தின் கொத்தடிமைகள்! ஒரு வரலாற்றுத் துரோகத்தின் மறுவடிவம்! ஆம், வரலாறு நெடுடிகிலும் அராக்கான் பகுதி முஸ்லிம்கள் பௌத்த தீவிரவாதத்தால் கொடூரமான கொலைகள், கூட்டுக் கற்பழிப்புக்கள், கூட்டுக் கொலை, சிறுவர் சிறுமியர் சித்திரவதை செய்து சிதைக்கப்படுதல் என வரலாறு காணாத வன்கொடுமைகளைச் சந்தித்து வருகின்றனர். ரோஹிங்கிய முஸ்லிம்கள் …
Read More »