-உண்மை உதயம் மாத இதழ்- (அல்குர்ஆனின் அறிவியல் அற்புதம்) அல்குர்ஆனில் ‘அல் அன்கபூத்’ (சிலந்தி) என்ற பெயரில் தனி அத்தியாயம் உள்ளது. அரபு மொழியில் எல்லாவற்றிலும் ஆண்பால், பெண்பால் பார்க்கப்படும். இது வேறு மொழிகளில் இருக்காது. உதாரணமாக சூரியன், சந்திரன், வீடு… போன்ற அனைத்திலும் இலக்கண அடிப்படையில் ஆண்பால், பெண்பால் பார்க்கப்படும். இந்த அடிப்படையில் சிலந்தி என்பது அரபு மொழியின் பிரகாரம் ஆண்பாலாகும். அல்குர்ஆனின் பின்வரும் வசனத்தில் சிலந்தி பற்றி …
Read More »உண்மை உதயம் மாத இதழ்
எது உண்மையான சுதந்திரம்?
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – எமது தாய்த் திருநாடு சுதந்திரம் பெற்று 2016.02.04 ஆம் திகதியுடன் 68 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. பல நாடுகளுடன் ஒப்பிடுகின்ற போது இலங்கைவாழ் மக்களாகிய நாம் கொடுத்து வைத்தவர்கள் என்று கூறலாம். சில நாடுகள் வாட்டி வதைக்கும் வெப்ப பூமிகளாகும். மற்றும் பல நாடுகள் நடுங்க வைக்கும் குளிர் பிரதேசங்களாகும். இலங்கை மத்திமமான கால சூழலைக் கொண்ட …
Read More »இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் – 9
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – ஒருவர் செய்த பாவத்திற்கு மற்றவர் தண்டிக்கப்படமாட்டார் என்பதே புதிய, பழைய ஏற்பாட்டின் போதனையாகும். இந்த போதனையின் அடிப்படையில் கிறிஸ்தவ உலகு நம்பும் பிறவிப் பாவம் என்பதே தப்பானது. மனித இனத்தின் பிறவிப் பாவத்தைப் போக்க இயேசு சிலுவையில் உயிரை அர்ப்பணித்தார் என்பது அதைவிடத் தப்பானதாகும். இயேசு உயிரை அர்ப்பணித்தாரா? உலகில் பலரும் பலவற்றிற்கு உயிரை அர்ப்பணிக்கின்றனர். …
Read More »நபித்தோழர்களும் சமூக ஒற்றுமையும்
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – பிரிந்து சின்னாபின்னமாகிப் போயிருந்த சமூக அமைப்பில் இஸ்லாமிய அகீதா போதிக்கப்பட்ட பின்னர் அந்த சமூகம் சகோதரத்துவ சமூகமாக மாறியது. ‘நீங்கள் அனைவரும் (குர்ஆன் எனும்) அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாக பற்றிப் பிடியுங்கள். மேலும் பிரிந்து விடாதீர்கள். நீங்கள் பகைவர்களாக இருந்தபோது உங்களது உள்ளங்களுக்கிடையில் இணைப்பை ஏற்படுத்தி, அவனது அருளினால் நீங்கள் சகோதரர்களாக மாறியதையும், நீங்கள் நரகக் …
Read More »அல்குர்ஆன் விளக்கக்குறிப்புக்கள் – தாலூத்தும் ஜாலூத்தும்
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – ‘மூஸாவுக்குப் பின் தங்கள் நபியிடம், ‘அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிட எமக்கு ஒரு மன்னரை நியமியுங்கள்’ எனக் கேட்ட பனூஇஸ்ராஈல்களின் பிரமுகர்களை (நபியே!) நீர் அறியவில்லையா? அ(தற்க)வர், ‘உங்கள் மீது போர் விதிக்கப்பட்டால் நீங்கள் போராடாது இருந்து விடுவீர்களோ?’ எனக் கேட்க, ‘நாம் எமது இல்லங்களையும் எமது குழந்தைகளையும் விட்டு வெளியேற்றப்பட்டிருக்கும் போது, அல்லாஹ்வின் பாதையில் …
Read More »முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் – 01
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – முஃதஸிலாக்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு வழிகெட்ட கூட்டம் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றியது. குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும் மனம் போன போக்கில் விளக்கம் என்ற பெயரில் குதர்க்கமான அர்த்தங்களைக் கற்பித்தனர். தமது அறிவுக்கு முரண்பட்ட பல அம்சங்களை நிராகரித்தனர். ஏராளமான ஹதீஸ்களை நிராகரித்தனர் அல்லது மாற்று விளக்கமளித்தனர். அந்தக் காலத்தில் வாழ்ந்த சில கலீபாக்கள் இவர்களினால் கவரப்பட்ட போது …
Read More »போதையில்லாத உலகம் காண்போம்
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – போதைவஸ்துப் பாவனை இன்றைய உலகை அழிவின் விளிம்பை நோக்கி அழைத்துச் செல்கின்றது. இன்று உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் பாதாள உலக சாம்ராஜ்யத்தின் வருமானத்திற்கான வழியாகவும் இது அமைந்துள்ளது. உலகை அழிவிலும், இழிவிலும் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றால் அரச அங்கீகாரம் பெற்ற, பெறாத அனைத்துவகை போதை பாவனைகளும் முற்றாகத் தடுக்கப்பட வேண்டும். போதை பாவனை என்றதும் …
Read More »பிக்ஹுல் இஸ்லாம்: 14 – கியாமுல் லைல்
கியாமுல் லைல் கியாமுல் லைல் தொழுகையின் ரக்அத்துக்களின் எண்ணிக்கை எத்தனை என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. 11 ரக்அத்துக்கள்தான் நபி(ச) அவர்கள் தனக்காகத் தேர்ந்தெடுத்த எண்ணிக்கையாகும். அவர்கள் சில போது 11 அல்லது 13 ரக்அத்துக்கள் தொழுதுள்ளார்கள். இந்த எண்ணிக்கையுடன் நிறுத்திக் கொள்வதே சிறந்ததும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதுமாகும் என்பது குறித்து சென்ற இதழில் பார்த்தோம். இனி குறித்த எண்ணிக்கையை விட அதிகமாகவும் தொழலாம் என்ற கருத்துடைய அறிஞர்களின் …
Read More »மாற்றத்தை வேண்டி நிற்கும் இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம்
-மவ்லவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி- இஸ்லாம் கற்றலையும் கற்பித்தலையும் போற்றும் மார்க்கமாகும். இஸ்லாம் கல்விக்கு வழங்கியுள்ள முக்கியத்துவத்தை வேறு எந்த சமயமும் வழங்கியிருக்காது என்று அடித்துக் கூறலாம். அந்தளவுக்கு இஸ்லாம் கல்வியை வலியுறுத்துகின்றது. இஸ்லாத்தின் தூது கூட ‘இக்ரஃ’ – ஓதுவீராக!, படிப்பீராக! என்றுதான் ஆரம்பமானது. நபியவர்களுக்கு வழங்கப்பட்ட ஆரம்ப ஐந்து வசனங்களிலும் வாசிப்பு, கற்றல், கற்பித்தல், பேனை போன்ற கற்றல் கற்பித்தலின் அடிப்படை அம்சங்கள் பேசப்பட்டுள்ளன. எனவே, இஸ்லாம் …
Read More »பாரிஸ் தாக்குதலும் பயங்கரவாதப் பட்டமும்
பாரிஸில் பயங்கரவாதத் தாக்குதல் தொடுக்கப்பட்டது. ISIS தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலைத் தொடுத்ததாக ஒத்துக்கொண்டுள்ளார்கள். இந்தத் தாக்குதலின் மூலம் ஐரோப்பிய சமூகத்தில் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் வெறுப்பும் கோபமும் ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் பள்ளிவாயில்கள் தாக்கப்பட்டன, குர்ஆன் எரிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளர் ‘டொனால்ட் ட்ரம்ப்” இச்சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி தனது முஸ்லிம் வெறுப்புணர்வை வெளிப்படுத்தி ஆதரவு தேட முற்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் வெளியேற்ற வேண்டும் …
Read More »