Featured Posts

சிறுவர் பகுதி

கடவுளின் பெயரால் (சிறுகதை)

ஊரிலிருந்து ஒதுக்குப்புறமாக உள்ள காட்டில் எப்படி வந்தது செம்பருத்திச் செடி என்று தெரியவில்லை. ஒரு ஆள் கத்தியில் செம்பருத்திப்பூவை தேய்த்து உலரவைப்பதும் பிறகு மீண்டும் தேய்ப்பதுமாக இருந்தான்.

Read More »

நினைவலைகள் (சிறுகதை)

பஷீர் அஹமது உள்ளே நுழையும் போது… “மிலிட்டரி லைன் ஜும்மா பள்ளிவாசல்” என்று பெரிய பலகையில் எழுதியிருந்தது. பள்ளிவாசலுக்கும் பஷீர் அஹமதுக்கும் உள்ள தொடர்பு மிக்க ஆழமானது. பள்ளியைச் சுற்றி கடைகள் கட்டி வாடகைக்கு விட்டு இருந்தனர். பள்ளிவாசலின் உள்ளே நுழைந்ததும் இடது கோடியில் “சிந்தா மதார்ஷா ஒலியுல்லா தர்ஹா” என்று பச்சை நிறப் பலகையில் எழுதப்பட்டிருந்தது. மண் வாசனையுடன் கூடிய ரம்யமான குளிர்ந்த காற்று. இலைகள் உதிர்ந்து கொண்டிருந்தன.

Read More »

சுமைதாங்கி (சிறுகதை)

ஊசியால் குத்தும் குளிர் காற்றில் ஊரே அடங்கியிருந்தது. தலையில் மஃப்ளரை சுற்றி உடல் முழுவதையும் கம்பளிப் போர்வையால் போர்த்தி வாசலில் அமர்ந்திருந்தார் காவலாளி மம்முசாலி.

Read More »

அவர்கள் உங்கள் சகோதரர்கள்! (நீதிக்கதை)

நினைவு தெரிந்த நாள் முதல் ஃபஜ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் நிறை வேற்றி வந்த அஹ்மது பாய் அன்று பத்து நிமிடம் தாமதமாகி வந்ததால், ஜமாஅத்தை தவற விட்டுவிட்டார். அந்த ஆதங்கத்தில் தொழுகை நேரம் முடிவதற்குள் ஃபஜ்ர் தொழுகையை தொழுது விட வேண்டுமே என பள்ளியை நோக்கி விரைகிறார்.

Read More »

கனாக் கண்டேன்(டி) [சிறுகதை]

“சும்மா இருங்கம்மா! இப்படி பணம். பணம்ன்னு அலையறவங்களுக்கு உறைக்கிறமாதிரி நாலு வார்த்தை கேட்டால்தான் புத்தி வரும். கல்யாணங்கறது ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். ஆனா, கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு லட்சம் வேணும் 100 பவுன் நகை வேணும்னு வியாபார ஒப்பந்தம் போட வந்துருக்காங்க”.

Read More »

வேண்டாத பிள்ளை! (சிறுகதை)

(‘நம்பிக்கை’ ஜூன் 05 இதழில் வெளியான சிறுகதை, சிறு மாற்றங்களுடன்..) அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் ஆறாவது மாடி வீட்டின் சன்னலோரம் உதுமான் அமர்ந்திருந்தார். எதிரே உள்ள தொடக்கப் பள்ளியின் வாசலருகில் வகுப்பு முடிந்து வரும் தம் குழந்தைகளை எதிர்பார்த்து பெற்றோர்களும், பணிப்பெண்களும் காத்திருக்கின்றனர். பள்ளி நேரம் முடிந்து குழந்தைகள் வரத்தொடங்கி விட்டனர். அவர்கள் ஒருவர் ஒருவராகவும் வருவார்கள். இரண்டு மூன்று பேர் சேர்ந்து உரக்கப் பேசி சிரித்துக் கொண்டும் வருவார்கள். …

Read More »

மதியழகி (நீதிகதை)

2005 ஜனவரி மாதம், வார இறுதி விடுமுறை நாளில் அது நடந்தது. பொது பேருந்து வசதி இல்லாத அந்த ஊரிலிருந்து நான் வசிக்கும் நகருக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். வழியில் ஒருவர் தன் மனைவியை நான் வந்த காரில் (illegal taxi) ஏற்றிவிட்டார். நகரத்தில் நர்ஸாக பணிபுரியக்கூடும்.

Read More »

இது கதை அல்ல நிஜம்! (சிறுகதை)

இண்டோ சவூதி எக்ஸ்போர்ட் கம்பெனியின் பெர்சனல் டிபார்ட்மென்டில் நின்றுக்கொண்டிருந்தேன். இங்குதான் நான் பத்து வருடமாக குப்பைக்கொட்டி கொண்டிருக்கிறேன். மியாவ்.. மியாவ்.. மியாவ்.. மியாவ்..

Read More »