Featured Posts
Home » 2006 » December (page 5)

Monthly Archives: December 2006

குர்ஆனை செவி தாழ்த்தி கேட்டல்..

257– (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மிடம் ‘வஹீ’யைக் கொண்டு வரும்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் நாவையும், இரண்டு உதடுகளையும் (எங்கே மறந்து விடப்போகிறதோ என்ற அச்சத்தினால், மனனமிடுவதற்காக ஓதியபடி) அசைத்துக் கொண்டிருப்பார்கள். இது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. அது அவர்களின் வதனத்திலேயே காணப்படலாயிற்று. எனவே, அல்லாஹ், ‘லா உக்ஸிமு பி யவ்மில் கியாமா” என்று தொடங்கும் (75 வது அத்தியாயத்திலுள்ள) ‘இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர …

Read More »

தொழுகையில் குரலை உயர்த்துதல் பற்றி..

256. (நபியே!) உங்கள் தொழுகையில் நீங்கள் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம். மிகவும் தாழ்த்தவும் வேண்டாம். எனும் (17:110ஆவது) இறைவசனம் (பின்வரும் சூழ்நிலையில்) அருளப்பெற்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில் எதிரிகளின் தொல்லைகளைக் கருத்தில் கொண்டு) மக்காவில் மறைவாக(த் தொழுதுகொண்டு) இருந்தார்கள். (அவ்வாறு தோழர்களுடன் சேர்ந்து தொழும்போது) குரலை உயர்த்(திக் குர்ஆனை ஒ)துவார்கள். அதை இணைவைப்பாளர்கள் கேட்டுவிடும்போது குர்ஆனையும் அதை அருளிய(இறை)வனையும் அதை (மக்கள் முன்) …

Read More »

பள்ளிக்கு வரும் பெண்கள்!

253- உங்கள் மனைவியர் பள்ளிவாசலுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி- 5238: இப்னு உமர் (ரலி) 254- உமர் (ரலி) உடைய மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ், இஷாத் தொழுகைகளைப் பள்ளியில் ஜமா அத்தாகத் தொழச் செல்வார். அவரிடம்(உங்கள் கணவர்) உமர் (ரலி) ரோஷக்காரராகவும் இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. …

Read More »

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் – 10.

1991 ல் திரும்பவும் எனக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் கட்சியான BJP யில் ஒரு பதவி கிடைத்தது. எர்ணாகுளம் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு நிறைய நிறைய பதவி கிடைத்தது. இதிலிருந்து கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கலாம் என்று நினைத்தேன். இதிலும் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் தலையிட்டு அதையும் கலைத்தார்கள். B.J.P.யும் ஆர்.எஸ்.எஸ்ஸும் எனக்கெதிராக மாறின. நான் அங்கிருந்து சாந்தாவையும் அழைத்துக் கொண்டு இரவோடு இரவாக சொந்த உருக்குச் சென்று விடலாம் …

Read More »

வரலாற்றில் ரீ மிக்ஸ்.

இஸ்லாம் மார்க்கத்தில் ஜாதிகள் இல்லையா? எனக் கேட்டு இஸ்லாத்தில் ஜாதிகளை நிறுவ, இஸ்லாத்திலிருந்து ஒரு சான்றைக்கூட வைக்காமல் வழக்கம் போல் தமது ரீ மிக்ஸ் கைங்காரியத்தை செய்திருக்கிறார் ஒரு இந்துத்துவவாதி. அடக் கைச்சேதமே. //இது சம்பந்தமாக நிறைய இணையக் கட்டுரைகள் இருக்கின்றன. யோகிந்தர் சிக்கந்த் கூட தலித் முஸ்லிம்கள் பற்றியெல்லாம் எழுதியுள்ளார். இருப்பினும், என் சார்பாக இஸ்லாமிய சமுதாயத்தில் இருக்கும் சாதிகளின் அடிப்படையில் செய்யப்பட்ட ஒரு கள ஆய்வுக் கட்டுரையிலிருந்து …

Read More »

ஜகாத் தொடர்பான விவாத ஒப்பந்தம் (நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி vs TNTJ)

மௌலவி, ஹாஃபிழ், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி அவர்கள் மௌலவி பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுடன் செய்துக்கொண்ட விவாத ஒப்பந்தம் இடம்: மதுரை நாள்: 20.10.2006 Download from following URL: https://www.mediafire.com/folder/6c1t8pq64r3jk/zakath_debate_agreement_-_noor_vs_pj

Read More »

ஜமாஅத்தில் தொழும் பெண்கள் ஆண்களை முந்தலாகாது..

252- சில ஆண்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தனர்;. அவர்கள் சிறுவர்களைப் போன்று தங்களுடைய (சிறிய) வேஷ்டியை. தங்களுடைய கழுத்திலிருந்தே கட்டியிருந்தனர் (இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் ஆண்களின் பின்னால் தொழுத பெண்களிடத்தில் ஆண்கள் ஸுஜூதிலிருந்து எழுந்து அமர்வதுவரை நீங்கள் உங்களுடைய தலைகளை ஸுஜூதிலிருந்து உயர்த்தவேண்டாம் என்று கூறினார்கள். புகாரி-362:ஸஹ்ல் பின் ஸஅது (ரலி)

Read More »

ஜமாஅத் தொழுகையில் வரிசையைச் சீராக்குதல்..

248- வரிசையை ஒழுங்குப் படுத்துங்கள்! வரிசைகளை ஒழுங்குப் படுத்துவது தொழுகையை நிலைப் பெறச் செய்வதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி-723: அனஸ் (ரலி) 249- தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் எங்கள் பக்கம் முன்னோக்கி, வரிசைகளை நேராக்குங்கள்! நெருக்கமாக நில்லுங்கள்! ஏனெனில் என் முகத்துக்குப் பின்புறமாகவும் உங்களை நான் காணுகிறேன் எனக் கூறினார்கள். புஹாரி-719: அனஸ் (ரலி) 250- உங்களது வரிசைகளை நேராக அமைத்துக் …

Read More »

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் – 9.

எங்களை வெறியூட்டி களத்தில் இறக்கிய நம்பியாரின் கூட்டத்திற்கோ எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. எங்களுக்கு ஊக்கம் கொடுத்துவிட்டு அவர்கள் தப்பித்துக் கொண்டார்கள். 40 நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். இந்த மருத்துவமனை வாழ்க்கையில் எனக்கு ஒரு உற்ற துணையாக ஒருவள் இருந்தாள். அவள் வேறு யாருமில்லை நான் ஆர்.எஸ்.எஸ்ஸில் சாகா பயற்சிப் எடுக்கும் பொழுது பக்கத்தில் சாந்தா என்ற ஒரு பெண்ணுடன் பழகிவந்தேன். அந்தப் பழக்கம் காதலாக உருவானது. அவள் …

Read More »