Featured Posts

பிறந்த தின விழா கொண்டாடலாமா?

ஒரு முஸ்லிம் இப்படி தான் வாழ வேண்டும், என்று நபியவர்களை முன் நிறுத்தி எல்லா அமல்களையும் அல்லாஹ் நமக்கு வழிகாட்டியுள்ளான்.

ஒரு அமலை செய்யும் முன் அந்த அமலை நபியவர்கள் எப்படி செய்தார்கள். செய்யும் படி ஏவினார்கள். என்பதை கவனித்து அமல்களை செய்வதற்கு நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

“அந்த தூதரிடத்தில் அழகிய முன் மாதிரி உள்ளது, என்று நபி (ஸல்) அவர்களை முன் நிறுத்தி அல்லாஹ் கூறுவதன் மூலம் நபி (ஸல்) அவர்கள் தனக்கோ, தன் பிள்ளைகளுக்கோ, நபித் தோழர்களின் பிள்ளைகளுக்கோ, பிறந்த தின விழாவை கொண்டாடியது கிடையாது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

எவ்வளவு தான் மார்கத்தை எடுத்துச் சொன்னாலும் இந்த பிறந்த நாள் கொண்டாடும் விசயத்தில் பலர் மார்கத்திற்கு முரணாகவே நடந்து கொள்கிறார்கள்.

இப்படி செய்வது கூடாது என்று சொல்லும் போது நீங்க என்ன புதுசா சொல்லுறிங்க எங்கட வாப்பா, வாப்பாட வாப்பா இப்படி பரம்பரை பரம்பரையாக கொண்டாடி வருகிறோம். என்று பரம்பரையை ஆதாரம் காட்டி மார்கத்திற்கு முரணாக செயல் பட்டு வருவதை காண்கிறோம். சிலர் ஆடம்பரமாக இந்நாளை கொண்டாடுகிறார்கள், இன்னும் சிலர் நாங்கள் எளிய முறையில் தானே நாங்கள் கொண்டாடுகிறோம் என்று கொண்டாடுகிறார்கள், இன்னும் சிலர் நாங்கள் சின்ன பிள்ளைகளுக்கு மத்தியில் மட்டும் தான் கொண்டாடுகிறோம் என்று கூறுகிறார்கள்.

இப்படியான கலாசாரங்கள் அந்நியர்கள் விரும்பி செய்யக் கூடியவைகளாகும்.

அந்த அந்நிய கலாசாரத்தை அப்படியே நமது முஸ்லிம்களும் பின்பற்றி நடைமுறைப் படுத்தி வருகிறார்கள்.

அவர்கள் இறந்தவர்களுக்காக தவசம் என்ற பெயரில் சாப்பாடு கொடுத்தால், நம்மவர்கள் கத்தம் என்ற பெயரில் சாப்பாடு கொடுக்கிறார்கள்.

அவர்கள் தங்களது கடவுள்களுக்கு பால் அபிஸேகம் செய்தால், நம்மவர்கள் சந்தன அபிஸேகம் செய்கிறார்கள்.

அவர்கள் தேர் இழுத்தால், இவர்கள் சந்தனக் கூடு இழுக்கிறார்கள்.

இப்படி ஏட்டிக்கு போட்டியாக செய்து வந்தனர். காலப் போக்கில் அவைகளை மார்க்கமாக மாற்றிவிட்டார்கள்.

இந்த வரிசையில் வந்தவைகளில் ஒன்று தான் பிறந்த தின விழா கொண்டாடுவது ?

“எவர் பிறருடைய கலாசாரத்திற்கு ஒப்பாக நடக்கிறாறோ அவரும் அவரை சார்ந்தவர் தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸின் படி நபி (ஸல்)அவர்கள் காட்டித்தராத செயலை யார் செய்கிறாறோ, அது பிறருடைய கலாசாரமாக இருக்குமேயானால் அவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி அந்நியர்களோடு சேர்ந்து கொண்டார் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.அல்லாஹ் மிக அறிந்தவன்.

2 comments

  1. I live in salalah with my family. I have two children’s. I want to give islamiya kalvi to my children’s. So can you please help me in online?

  2. பிறந்த நாள் கொண்டாடுவது இபாதத் அடிப்படையில் செய்யப்படுவதில்லை. கலாச்சாரத்தினை பின்பற்றுவது என்றால் தற்போது நாம் உடைகள் அணிவது போன்றவற்றிலும் அவ்வாறுதானே நடந்துக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *