Featured Posts

அல்லாஹ்வின் அழகுத் திருநாமங்கள்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
அல்லாஹ்வைப் பற்றி சரியாக அறிந்து கொள்வதென்பது இஸ்லாமிய அகீதாவின் அடிப்படைகளில் முக்கியமானதொன்றாகும். அல்லாஹ்வை அவனும் அவனது தூதர்களும் அறிமுகப்படுத்திய விதத்தில் அறிந்து, ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வை அறிந்து கொள்ள அவனது அழகுத் திருநாமங்களும் பண்புகளும் முக்கிய வழிகளாகும்.

அல்லாஹ்வின் திருநாமங்கள் ‘அஸ்மாஉல் ஹுஸ்னா’ எனவும், அவனது பண்புகள் ‘அஸ்மாஉஸ் ஸிபாத்’ எனவும் குறிக்கப்படுகின்றன. அல்லாஹ்வின் திருநாமங்களின் எண்ணிக்கையை வரையறுக்க முடியாது. குறைந்தளவு எண்ணிக்கையாக 99 திருநாமங்கள் உள்ளன என ஹதீஸ்கள் குறித்துக்காட்டுகின்றன.

அல்லாஹ் பற்றிய நம்பிக்கையில் இதன் முக்கியமானது. இதில் பிழைவிடுவது குப்ருக்கும் வழிவகுக்கும் என குர்ஆன் எச்சரிக்கின்றது. இந்த நம்பிக்கை வஹீயின் (குர்ஆன், ஹதீஸ்) தகவலின் அடிப்படையில் மாத்திரம்தான் அமைய வேண்டும் என ஸலபுகள் (ஸஹாபாக்கள், தாபிஈன்கள், தபஉத் தாபிஈன்கள்) ஏகோபித்துக் கூறியுள்ளனர். எனவே, மனிதக் கற்பனையின் அடிப்படையில் பிரகடனப்பட்டுள்ள இக்குழுவினர் தமது வாதப்பிரதிவாதங்களின் மூலமாக கருத்துக்களை முன்வைத்ததால் வழிகெட்டுப் போனார்கள்.
அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் மூலம் அல்லாஹ்வைப் பற்றி நாம் அறிந்து கொள்ளலாம்.

உதாரணமாக, அல்லாஹ் அர்ரஹ்மான் – அளவற்ற அருளாளன் என்றால் அல்லாஹ் அன்பானவன். அவனது அன்புக்கு நிகர் இல்லை. அது அளவிட முடியாதது என்று விபரமாக நாம் அறிந்து கொள்ளும் போது அல்லாஹ் பற்றி அறிந்து கொள்ள முடிகின்றது. இவ்வாறே அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகளை முழுமையாக அறியும் போது அல்லாஹ்வின் அன்பு, மன்னிப்பு, தண்டிப்பு, வல்லமை என அனைத்தையும் புரிந்து அவனுக்குக் கட்டுப்பட்டு வாழும் பக்குவம் பிறக்கும். இங்கே அல்லாஹ்வின் பெயர்களுக்கான ஆதாரங்களுடன் அவனது அழகுத் திருநாமங்களைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

01. அல்லாஹ்:
அல்குர்ஆன் முழுவதும் இந்தப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘அல்லாஹ்’ என்ற வார்த்தை மட்டும் அல்குர்ஆனில் 1567 இடங்களில் இடம்பெற்றுள்ளது. இதில் ‘லில்லாஹ்’ – அல்லாஹ்வுக்கு என்ற அர்த்தத்தில் வரும் இடங்கள் தவிர்ந்த எண்ணிக்கையே இதுவாகும்.

02. அல்-அவ்வல் : ஆரம்பமானவன்)

03. அல்-ஆகிரு : முடிவானவன்

04. அழ்-ழாஹிரு : மேலானவன்
05. அல்-பாதிலு : மறைமுகமானவன்

‘முதலாமவனும், இறுதியானவனும், மேலானவனும், அந்தரங்கமானவனும் அவனே! அவன் யாவற்றையும் நன்கறிந்தவன்.’ (57:03)

06. அல் அஹத் : தனித்தவன்

07. அஸ்ஸமத் : எவ்விதத் தேவையுமற்றவன்

‘அல்லாஹ் ஒருவன்தான் என (நபியே!) நீர் கூறுவீராக!’

‘அல்லாஹ் (எவ்வித) தேவையுமற்றவன்.’ (112:1-2)

08. அல் அஃலா : மிக உயர்வானவன்

‘(நபியே!) மிக உயர்வான உமது இரட்சகனின் பெயரைத் துதிப்பீராக!’ (87:1)

09. அல் அக்ரம் : மிகவும் கண்ணியமானவன்.

‘நீர் ஓதுவீராக! உமது இரட்சகன் மிக கண்ணியமானவன்.’ (96:3)

10. அல் இலாஹ் : வணக்கத்திற்குரியவன்

‘உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இரட்சகனே! (உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அவன் அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையவன்.’ (2:163)

11. அல் பாரிஉ : தோற்றுவிப்பவன்

‘அவனே அல்லாஹ். (அவனே) படைப்பவனும், தோற்றுவிப்பவனும், உருவமைப்பவனுமாவான். அவனுக்கு அழகிய பெயர்கள் இருக்கின்றன. வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவைகள் அவனைத் துதிக்கின்றன. அவன் யாவற்றையும் மிகைத்தவன்ளூ ஞானமிக்கவன்.’ (59:24)

12. அல் பர்ரு : பேருபகாரம் செய்பவன்

‘இதற்கு முன்னர் நிச்சயமாக நாம் அவனையே அழைத்துக் கொண்டிருந்தோம். நிச்சயமாக அவன், பேருபகாரம் செய்பவனும், நிகரற்ற அன்புடைய வனுமாவான்.’ (52:28)

13. அல் பஸீர் : பார்ப்பவன்

‘அவன் செவியேற்பவன்ளூ பார்ப்பவன்.’ (42:11)

14. அஸ்ஸமீஉ : கேட்பவன்

‘அவன் செவியேற்பவன்ளூ பார்ப்பவன்.’ (42:11)

15. அத்தவ்வாப் : மிகவும் மன்னிப்பவன்

‘உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனது கருணையும் இல்லாதிருப்பின் (உங்களுக்கு தண்டனை ஏற்பட்டிருக்கும்.) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்ளூ ஞானமிக்கவன்.’ (24:10)

16. அல் ஹகீம் : ஞானம்மிக்கவன்

‘உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனது கருணையும் இல்லாதிருப்பின் (உங்களுக்கு தண்டனை ஏற்பட்டிருக்கும்.) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்ளூ ஞானமிக்கவன்.’ (24:10)

17. அல் மலிக் : ஆட்சியாளன்

19. அஸ்ஸலாம் : சாந்தியளிப்பவன்

20. அல் முஃமின் : பாதுகாப்பவன்

21. அல் முஹைமின் : கண்காணிப்பவன்

22. அல் அஸீஸ் : யாவற்றையும் மிகைத்தவன்

23. அல் ஜப்பார் : அடக்கியாளுபவன்

24. அல் முதகப்பிர் : பெருமைக்குரியவன்

‘அவன்தான் அல்லாஹ். (உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் அவனையன்றி வேறு யாரும் இல்லை. (அவனே) ஆட்சியாளன், பரிசுத்தமானவன், சாந்திய ளிப்பவன், பாதுகாப்பவன், கண்காணிப்பவன். யாவற்றையும் மிகைத்தவனும், அடக்கியாளுபவனும், பெருமைக்குரியவனுமாவான். அவர்கள் இணைவைப்பதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்.’ (59:23)

25. ஆலிமுல் கைப் : மறைவானவற்றை அறிந்தவன்

26. அல் கபீர் : மிகப் பெரியவன்

27. அல் முதஆல் : உயர்ந்தவன்

இறுதி மூன்று (25, 26, 27) திருநாமங்களுக்கும் பின்வரும் வசனத்தை ஆதாரமாகக் கொள்ளலாம்.

‘(அவன்) மறைவானவற்றையும், வெளிப் படையானவற்றையும் நன்கறிந்தவனும், மிகப் பெரியவனும், உயர்ந்தவனுமாவான்.’ (13:9)

எனவே, அஸ்மாஉ, ஸிபாத் பற்றி குர்ஆன், ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை மாத்திரமே நாம் பேச வேண்டும். அது பற்றி யாராவது விளக்கமளித்தால் அது வாதத் திறமைக்கு சிறப்பாகத் தென்படலாம். ஆனால், ஈமானுக்கு அது பாதிப்பானது என்பதைப் புரிந்து அவதானமாக இருப்போம்.

One comment

  1. அல்லாஹ்வின் பெயர்களின் 27 மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள பெயர்களும் பதிவு செய்யவும். ஜஸாகல்லாஹு ஹைரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *