கலாநிதி யூ. எல். ஏ. அஷ்ரப் Ph.D (Al-Azhar)
தலைவர் – தாருல் ஹதீஸ்
பேராசிரியர் நஜ்ரான் பல்கலைக்கழகம்
சவூதி அரேபியா
அட்டவணை – உள்ளடக்கம்
1. ஸுன்னா என்றால் என்ன?
2. புகஹாக்கள் (மார்க்கச் சட்ட வல்லுணர்களின்) வரைவிலக்கணம்.
3. பித்அத் ஹஸனாவுக்குரிய சந்தேகங்களும் பதில்களும்
4. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு வழிப்படுவதன் சட்டம் என்ன?
5. மத்ஹப்கள் என்றால் என்ன?
6. நான்கு மத்ஹபுகளில் ஒன்றை முழுமையாக கட்டாயம் தழுவ வேண்டுமா?
7. மத்ஹப் ஹதீஸுடன் முரண்படும் போது எவ்வாறு நடந்து கொள்வது?
8. ஊர்ஜிதமான ஹதீஸின் வகைகளும் நிபந்தனைகளும்.
9. ளஈஃபான (ஊர்ஜிதமற்ற) ஹதீஸ் என்றால் என்ன?
10. ளஈஃபான (ஊர்ஜிதமற்ற) ஹதீஸை இஸ்லாமிய சட்டத்துக்கு ஆதாரமாகக் கொள்ளலாமா?
11. ளஈஃபான (ஊர்ஜிதமற்ற) ஹதீஸை அமல்களின் சிறப்புக்களில் எடுத்துக் கொள்ளலாமா?
ஸுன்னா என்றால் என்ன?
ஸுன்னா என்ற அறபுப் பதத்திற்கு பாதை, வழிமுறை என்பது கருத்தாகும். ஹதீஸ்கலை வல்லுனர்கள் (ஸுன்னா) என்பதற்கு
பின்வருமாறு வரைவிலக்கணம் கூறுகின்றனர்:
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம், உடல் அமைப்பு முறை, குண நெறி ஆகியவைகளாகும். இவை நபியவர்களுக்கு தூது கிடைப்பதற்கு முன்பு நிகழ்ந்தாலும் அல்லது பின்பு நிகழ்ந்தாலும் ஸுன்னா என்றே சொல்லப்படும். இதே கருத்தைத்தான் ஹதீஸ் என்ற பதமும் கொண்டிருக்கின்றது. இந்த அடிப்படையில் “அல்கிதாப், வஸ்ஸுன்னா”, அர்குர்ஆன், வல் ஹதீஸ் என்று பிரயோகிப்பது இஸ்லாமிய அறிஞர்களின் வழக்கமாகும்.
எனவே ஹதீஸ் கலை வல்லுணர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பற்றிய சகல விபரங்களையும் திரட்டுவதை நோக்கமாகக் கொண்டிருந்தார்கள். சொற்கள், செயல்கள், அங்கீகாரங்கள் இவைகளில் எதை ஆதாரமாகக் கொள்வது எதை ஆதாரமாகக் கொள்ள முடியாது என்பதை வேறுபடுத்தும் வரைவிலக்கணங்களைத் தரும் முயற்சியில் இவர்கள் இறங்கவில்லை. இந்தப் பணியில் உஸூலிய்யூன்கள் (இஸ்லாமிய சட்ட மூல தத்துவ அறிஞர்கள்) ஈடுபட்டார்கள். எனவே அவர்கள் ஸுன்னா என்பதற்குப் பின்வரும் வரை
விலக்கணத்தை முன்வைக்கிறார்கள் : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நபித்துவம் கிடைத்த பின்பு கூறிய, செய்த, அங்கீகாரம் வழங்கிய விடயங்களாகும். எனவே நபித்துவத்திற்கு முந்திய, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவைகள் ஆதாரமாக அமையாது. இவ்விடயத்தில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு கிடையாது. இதன் அடிப்படையில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நபித்துவத்திற்கு முன்பு ஹிறா குகையில் தியானத்தில் இருந்தார்கள் என்பதை முன்வைத்து சில ஸூபித்துவ வாதிகள் காடுகளிலும், குகைகளிலும், மலைகளிலும் தியானத்தில் இருப்பது ஆகும் எனக் கூறுவது அறியாமையாகும். மேலும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நபித்துவம் கிடைத்த பின்பு பல வருடங்கள் மக்காவில் தங்கியிருந்தார்கள்.
மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்ற பின் பலதடவை மக்காவை தரிசித்திருக்கிறார்கள் இந்தச் சந்தர்ப்பங்களில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களோ அல்லது அவர்களின் ஸஹாபாத் தோழர்களோ ஹிறா குகையை தரிசிக்கவுமில்லை, அங்கே எவ்வித வணக்கத்திலும் ஈடுபடவுமில்லை.
தொடர்ச்சியை மின்புத்தகப் (eBook) பதிப்பில் காணவும் (Download/பதிவிறக்கம்)