-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்-
உலகதில் ஒவ்வொரு நிகழ்வுகளை நினைவுப் படுத்துவதற்காக ஒவ்வொரு தினங்களை ஏற்ப்படுத்தி அத்தினங்களை நடைமுறைப்படுத்தி வருவதை காணலாம்.அந்த வரிசையில் உலக புகைத்தல் எதிர்ப்பு தினம் என்பதை ஒவ்வொரு வருடமும் மே 31 ம் திகதியை ஏற்பாடு செய்துள்ளார்கள். அதற்காக பல விதமான எதிர்ப்புகளை உலக மட்டத்தில் எதிர்ப்புகளை வெளிக்காட்டி வருவதை ஒவ்வொரு வருடமும் நாம் கண்டு வருகிறோம். ஆனால் இது வரைக்கும் எந்த பயனும் கிட்டவில்லை? ஓட்டைப் பானையில் தண்ணீரை எவ்வளவு தான் அள்ளி ஊற்றினாலும் அந்த தண்ணீர் ஓட்டையின் பக்கம் ஓடிக்கொண்டே இருக்கும். ஒரு காலத்திலும் அந்த பானையை நிறைக்க முடியாது. முதலில் பானையின் ஓட்டையை அடைத்து விட்டு தண்ணீரை அள்ளி ஊற்றினால், தண்ணீர் வெளியேவும் போகாது, சீக்கிரமாகவும் நிறைத்து விடலாம்.
அது போல சிகரெட் சம்பந்தமான அத்தனை தயாரிப்புகளையும் தடை செய்வதற்கான வழிவகைகளை ஏற்ப்படுத்தி, அதற்காக போராடினால் அதில் வெற்றிகாணமுடிம், மக்களையும் அழிவுகளிலிருந்து பாதுகாக்கலாம். அது அல்லாமல் உலகமே சேர்ந்து போராடினாலும் எந்த பயனையும் எட்டமுடியாது என்பதை புத்தி ஜீவிகள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
புகைப் பழக்கத்தை பொருத்த வரை உலகில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள், பெண்கள் என்ற வித்தியாசம்மில்லாமல் சர்வ சாதாரணமாக புகைக்க கூடிய, பொழுது போக்கான காட்சியாக மாறிவிட்டது?
புகைத்தலுடைய தீங்குகளை எவ்வளவு தான் எடுத்துக் காட்டினாலும் அது ஒரு பொருட்டே இல்லை என்றளவுக்கு நாகரிகமாக மாறிவிட்டது? எது எப்படி இருந்தாலும் நமது குடும்பத்தை பாதுகாப்பது நமது கடமையாகும். குறிப்பாக வளர்ந்து வரும் நமது சிறுவர்களை புகைத்தல் விடயத்தில் மிகவும் கவனமாகவும்,, எச்சரிக்கையாகவும் பாதுகாக்க வேண்டும். புகை என்பது நமது பகை என்பதை உணர்த்த வேண்டும்
புகைத்தலும் அதன் தீங்குகளும்
புகைக்கும் போது பலவிதமான நோய்களுக்கு மனிதன் ஆளாக்கப் படுகிறான். புகைத்தால் இன்ன,இன்ன தீங்குகள் வரும் என்று நன்கு தெரிந்த நிலையிலே அந்த புகைத்தலுக்கு அடிமையாகிறான்.
சேரக் கூடாத நண்பர்களோடு சேர்ந்து, பழக கூடாத பழக்கங்களை பழகி அதை விடமுடியாமல் பல காரணங்களை சொல்லிக் கொண்டிருக்கிறான்.
”என்னைக் கொல்பனை நானும் கொல்வேன்” என்று அந்த புகையும் மனிதனை நாளுக்கு நாள் கொஞ்சம், கொஞ்சமாக கொன்றுக் கொண்டிருக்கிறது. எச்சரிக்கை புகைப் பழக்கம் கென்சரை உண்டாக்கும் என்று சிகரெட் பெட்டியிலே பொறிக்கப்பட்டிருந்தாலும், எந்த கவலையுமில்லாமல் அதைப்படித்துக் கொண்டே புகையை மனிதன் ஊதித்தள்ளுகிறான்.
புகைத்தலுக்கு அடிமையான மனிதன் கீழ் வரும் நோய்களுக்கு ஆளாக்கப்படுகின்றான் என்பதை விஞ்ஞான உலகமும், மருத்துவ உலகமும் எச்சரிப்பதை நாம் கண்டு வருகிறோம். புகையிலையில் சேர்ந்திருக்க கூடிய நிகோடின் எனும் நச்சுப் பொருளே சகல நோய்களுக்கும் அடிப்படை காரணமாகும்.
- முடி நிறமாற்றம் அடைகிறது .(hair color change)
- மூளையானது புகைத்தலுக்கு அடிமையாகிறது .
- எப்போதும் புகைக்கவேண்டும் என்ற எண்ணத்தை வரவழைக்கும் நிலைக்கு மாறுவது .
- காண்பார்வை குறைபாடுகளை . கட்ராக்ட் (cataracts) போன்றவை ..
- மூக்குக்கூட பாதிப்புத்தான் .. மணங்கள் நுகர்ச்சித்தன்மை குறைதல் .
- தோல் சுருங்கிப்போகும் (Wrinkle). இளவயதிலேயே வயதான தோற்றத்தை அடைதல் .
- பற்களின் நிறமாற்றம், பல்லின் மேற்புறத்தில் ஏற்படும் அழற்சி (Gingivitis) போன்றவை .
- வாய் மற்றும் தொண்டை பாதிப்புகள் . உதாரணமாக உதடுகளின் வடு உண்டாவது, உணவுப் பாதை மற்றும் தொண்டை புற்றுநோய், சுவை நுகர்ச்சி குறைதல், துர்நாற்றம் (கெட்ட வாசனை .)
- ரத்த ஓட்டம் குறைவதால் கைகால்கள் செயலிழக்கும் தன்மை
- இரத்தத்தில் நிகோடின் படிவுகள் சேர்தல் .
- நுரையீரல் தொற்று நோய்கள், சுவாசப்பை புற்று நோய் . நாட்பட்ட சுவாச அடைப்பு நோய் (COPD), சுவாசப்பைத் தொற்று (Pneumonia) ஆஸ்துமா போன்றவை
- மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு (Heart attack)
- ஈரல் புற்று நோய் வரலாம் .
- இப்பழக்கம் வயிற்றை விட்டுவைப்பதில்லை . நாளடைவில் அல்சர், குடல், இரப்பை, சதை புற்றுநோய், நாடி வெடிப்பு (Aneurysm) போன்றவையும் ஏற்படும் .
- சிறுநீரகப் புற்று நோய் (Kidney cancer), சிறு நீர்ப் பை புற்று நோய் .
- எலும்பின் உறுதி குறைந்து வலுவிழத்தல் . இதனால் எலும்பு முறிவு (Fracture) ஏற்படும் அபாயம் .
- இனப்பெருக்கத் தொகுதி பாதிக்கப்படுதல், உதாரணமாக விந்தணுக்களின் வீரியம் குறைதல், ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறைதல், குழந்தையின்மை (Childlessness) போன்றவை .
- இல்லறத்தில் ஈடுபடுதலில் நாட்டமின்மை
- இரத்தத்தில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல்,
- இரத்தப்புற்று நோய் (Blood Cancer),
- இதனால் விரைவில் நோய்வாய்ப்படும் தன்மை உண்டாகுதல்
- கால்கள் வலுவிழந்து, குறுதிச் சுற்றோட்டம் குறைந்து கால் பகுதியில் காயம் ஏற்படல்
இன்னும் பல நோய்கள் உண்டாகலாம்.
எனவே புகைப்பவர்கள் தனது உடல் நலத்தை கவனத்தில் கொண்டு இந்த கெட்ட புகைப்பழக்கத்தை கட்டாயமாக விட்டு விட வேண்டும்.
இஸ்லாமிய பார்வையில் புகைத்தல்
புகைத்தலின் மூலம் நாங்களே எங்கள் உடலுக்கு தீங்குகளை ஏற்ப்படுத்திக் கொள்வதால் நரகத்தை விளை பேசி எடுத்துக் கொள்கிறோம்.எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டால் என்ன தண்டனை என்பதை பின்வரும் குர்ஆன் வசனங்களின் எச்சரிக்கைகளை கவனியுங்கள்.
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்..( 2- 1956)
மேலும் ” உங்களை நீங்களே கொலை செய்துக் கொள்ளாதீர்கள் ” போன்ற வசனங்கள் தற்கொலைக்கு சமமாக எச்சரிக்கின்றன.
மேலும் ” போதையைத் தரக் கூடியது குறைவாக இருப்பினும் அது ஹராம் தான் என்று நபியவர்கள் எச்சரித்துள்ளார்கள். மேலும் நீ எப்படி சம்பாதித்தாய், அதை எப்படி செலவு செய்தாய் என்று மறுமையில் விசாரிக்கப்பட இருக்கிறோம். இந்த புகைத்தலுக்காக செலவு செய்ததை எப்படி கணக்கு காட்டப் போகிறீர்கள்?
வீண் விரயம் செய்வோர் ஷைத்தானின் தோழர்கள் என்று குர்ஆன் எச்சரிக்கிறது. புகைப்பவர்கள் வீண் விரயம் செய்கிறார்கள். அப்படியானல் புகைப்பவர்கள் ஷைத்தானின் தோழர்களா?
பச்ச வெங்காயத்தையும், வெள்ளைப்பூண்டையும் சமைக்காமல் சாப்பிட்டு விட்டு எனது இந்த பள்ளியின் பக்கம் வரக் கூடாது என்று நபியவர்கள் எச்சரித்தார்கள் என்றால் ,பிறருக்கு நாற்றத்தையும், அருவருப்பையும் ஏற்படுத்தக் கூடிய சிகரெட்டின் நிலையை சற்று சிந்தித்துப் பாருங்கள்.
இப்படியான மார்க்கத்தின் எச்சரிக்கையை வைத்துப் பார்ப்போமேயானால் புகைப்பது தெளிவான ஹராம் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். சிகரெட் போன்ற பொருட்களை கடையில் விற்பதும் ஹராம், என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஹராத்திற்கு நீங்கள் துணை போகாதீர்கள். ஹராமான சிகரெட் மூலம் கிடைக்கும் பணத்தில் அல்லாஹ் பரக்கத் செய்ய மாட்டான்.
எனவே அல்லாஹ்விற்காகவும் நபியவர்களுக்காகவும் இந்த புகைத்தலை விட்டு ஒதுங்குவோமாக!